செவ்வாய், 28 அக்டோபர், 2014

இருளுக்குள் ஒளிரும் மனிதர்கள்

இருளுக்குள் ஒளிரும் மனிதர்கள் அது ஒரு இருளான குகை உற்ற தோழனோடுதான் சென்றேன் இருவரும் இருளை படிக்க முற்பட்டோம் அதற்குள் இருள் என்னை அதனுள் அமிழ்த்தி விளையாடியது எனக்கோ மூச்சு முட்டிக்கொண்டு வந்தது நண்பன் சொன்னான் தான் இருளை நேசிப்பதாகவும் தன்னையே இருளாக்கி பார்ப்பதாகவும் அப்போது அவனுக்குள் மஞ்சள் ஒளி தெரிந்தது அந்த ஒளியைக்கொண்டுதான் நாங்கள் வீட்டுக்குள்ளிருந்த இருளைப்படித்தோம் தெரு ஓரத்திலிருந்த இருளையும் பார்த்தோம் என் ஆழ் மனத்திற்குள்ளிருந்த அம்மாவின் கருவறை இருளைக் கூட பார்த்தோம் மெல்ல இருள் இருளிலேயே கரைந்து மஞ்சள் ஒளி வெண்மையானது இதனைக்கொண்டுதான் நாங்கள் புதியவுலகை கட்டமைக்க இருக்கிறோம் புதியன நிறைய படைக்க இருக்கிறோம் அந்த ஒளியைக்கொண்டுதான் இவ்வுலகை இருளிலிருந்து ஒளிக்கும் வாழ்விலிருந்து பெரு வாழ்வுக்கும் கொண்டு செல்லயிருக்கிறோம் அந்த குகை இருளுக்குள்ளேதான் இந்த மஞ்சள் ஒளியும் ஒளிந்திருந்ததெனவும் ஒளிதான் இருளை மறைக்கிறதெனவும் செய பிரகாசம் சொன்னார் என் கண்ணில் ஊனம்... மனம் போலவே அந்த குகைக்குள்தான் ஒரு கருப்பு தேவதை பழக் கூடை சுமந்து வந்தாள் கண்ணாடியணிந்த கிழவர் தறி சுற்றிக்கொண்டிருந்தார் இவர்கள் தங்கள் ஒளியைக் கொண்டுதான் எங்களை அடையாளம் கண்டார்கள் அவர்களையும் இருளாகத்தான் பார்த்தோம் எங்களுக்குள் ஒளி வரும் வரை........... எப்படியோ நாங்கள் இருளை நேசிக்க கொஞ்சம் ஒளி பெற்று வந்தோம். எங்கள் மனத்தடியில் கிடக்கும் கசடை போக்க......... துவாரகா சாமி நாதன் 9629272185