வியாழன், 9 ஏப்ரல், 2015

ஒரு இளைஞன் ஒரு இளைஞி தன் பணியைத் தேர்ந்தெடுத்தால்


ஜெ.சி.குமரப்பா பொருளாதார கோட்பாடுகள் காந்திய வழியில் அஹிம்சையை அடிநாதமாக கொண்டது இஒரு நிலையான பொருளாதார சூழல் என்பது இயற்கைக்கு மாறாக இயங்க முடியாது இஇயற்கையின் நியதிகள் சமூகத்தில் ஒருவித சமநிலையை உருவாக்கி நிலைநிறுத்துகிறது இஅதனால் அனைத்து தரப்பினருமே இயந்து வாழும் வாய்ப்பு இருக்கிறது இபரஸ்பர உதவிகளின் மூலம் சமூகம் ஒட்டுமொத்தமாக வளர்கிறது இஆனால் அதே ஒரு சீர்கெட்ட பொருளாதாரம் தனது லாபத்தை மட்டுமே சுயநல நோக்கில் முன்வைத்தது இஅது வன்முறையை ஊக்குவித்தது இஇயற்கையை அது சுரண்டியது. இதனால் இயற்கை வளங்களனைத்தையும் வாழ்வின் வளங்களாக மாற்றும் மகத்துவத்தை புரிந்தும் பொருளாதாரம் தொடர்பாக ஜே.சி.குமரப்பா முன்வைத்த சில கருத்துகள்: வேட்டைப் பொருளாதாரம்: விலங்குகள் தங்கள் உள்ளுணர்வுக்கு ஏற்ப ஒரு வாழ்க்கையை வாழ்கின்றன. சிங்கம் புலி என வன் மிருகங்கள் இருக்கின்றன. அவை கைக்குக் கிடைக்கும் மான்இ முயல்இ எருமை என அனைத்தையும் கொன்று தின்கின்றன. தான் தின்றது போக மிச்சத்தை அழியவிட்டுச் செல்கின்றன. இந்த வகையில்இ எல்லாமே எனக்கு என்ற உரிமை மட்டுமே காணப்படும். கடமை என்று ஒன்றுமே இருக்காது. கொல்லப்படும் உயிர்கள் பற்றி அவற்றுக்குச் சிறிதும் கவலை கிடையாது. முழுவதும் சுயநலமான விலங்குகள் அவை. வன்முறையையே தங்கள் வழிமுறையாகக் கொண்டவை. பேராசை பிடித்த வியாபாரிகள்இ போதைப் பொருட்கள் விற்பவர்கள்இ இயற்கை வளங்களைச் சுரண்டுபவர்கள்இ இயற்கைச் சீர்கேட்டை விளைவிக்கும் தொழில் செய்பவர்கள் இந்த வகையில் வருவார்கள். சேகரிப்புப் பொருளாதாரம் : குரங்குகள் மரங்களில் வளர்ந்திருக்கும் காய்இ கனிகளை உண்டு வாழ்கின்றன. அந்த மரங்களை அவை நட்டு வளர்க்கவில்லை. ஆனால்இ அதன் கனிகளை மட்டும் பறித்து உண்ணுகின்றன. இவையும் சுயநலமானவையே. இங்கும் உரிமை மட்டுமே இருக்கும். கடமை இருக்காது. ஆனால்இ இவற்றினால் பெரிய அழிவுகள் நடப்பதில்லை. வன்முறையும் பெருமளவுக்கு இருக்காது. உற்பத்தியில் பங்கு பெறாமல் லாபத்தை மட்டும் பெற்றுச் செல்லும் நவீன நிதியாளர்கள்இ திருடர்கள்இ பிக் பாக்கெட்கள் இந்த வகையில் வருவார்கள். உழைப்புப் பொருளாதாரம்: முதலில் கூறிய இரண்டும் விலங்கு நிலையிலானவை. முன்றாவது வகையில் கடமையும் உரிமையும் கல்ந்து காணப்படும். ஒரு விவசாயி நிலத்தை சீர்திருத்திஇ பயிர் நட்டுஇ நீர் பாய்ச்சிஇ களை பறித்துஇ உரம் போட்டு கடைசியில் அறுவடை செய்து எடுத்துக்கொள்வதைப் போன்றது. பேராசை இல்லாத வியாபாரிஇ குறைந்த லாபம் வைத்துத் தொழில் செய்பவர் இந்த வகைக்குள் வருவார்கள். கூட்டுறவுப் பொருளாதாரம்: இதற்கான மிகச் சிறந்த உதாரணம் தேனீக்கள். அவை தமக்காக உழைப்பதில்லை. அவை செய்வது எல்லாமே சமூகத்தின் நலனுக்காகத்தான். கூட்டுக்குடும்ப வாழ்க்கை இதைப் போன்றதுதான். குடும்பத்தின் நலனுக்கு ஏற்ப தனி நபர் விருப்பு வெறுப்புகள் வரையறுக்கப்பட்டிருக்கும். சமூகம்இ தேசம் என எந்த அடையாளத்துடன் உங்களை இணைத்துக் கொள்கிறீர்களோ அதன் நலன் இதில் உங்களை ஒழுங்குபடுத்துவதாக இருக்கும். சேவைப் பொருளாதாரம்: மிகவும் உயர்வான பொருளாதாரம் இதுவே. ஒரு தாய்தான் இதற்கான மிகச் சிறந்த உதாரணம். குழந்தைக்காக அவள் உழைக்கிறாள். எந்த பிரதிபலனும் எதிர்பார்ப்பதில்லை. குழந்தைக்கு பணிவிடை செய்வதே அவளுக்கான சன்மானம். காந்தியடிகள் இப்படியானதொரு நிலையை நோக்கித்தான் நகர்ந்துகொண்டிருந்தார். நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் இந்த ஐந்து நிலைகளும் இருக்கவே செய்யும். நாளொன்றில் நாம் எத்தனை தடவை புலியாக வாழ்கிறோம். எத்தனை தடவை குரங்காக வாழ்கிறோம். எத்தனை தடவை விவசாயிபோல் வாழ்கிறோம். எத்தனை தடவை தேனீ போல் வாழ்கிறோம். எத்தனை தடவை ஒரு தாயாக வாழ்கிறோம் என்பதை நமக்கு நாமே அலசிப் பார்த்துக்கொள்ள வேண்டும். தாய்மை நிலை நோக்கி நகர்கிறோம் என்றால்தான் நாம் நாகரிகமாகி வருகிறோம் என்று அர்த்தம். இல்லையேல் நாம் மீண்டும் மிருக நிலைக்குத் திரும்புகிறோம் என்றுதான் அர்த்தம். அவர் ஒரு பெறும் கனவை கண்டார் .காந்தியின் கூற்றுப்படி கிராமங்கள் அனைத்தும் விழிப்படைந்தால் இகம்யுனிசம் கொடுப்பதாக சொல்லும் அனைத்தையும் மக்களுக்கு கொடுக்க முடியும் அதை விட முக்கியமாக கத்தியின்றி ரத்தமின்றி சத்தியத்தின் வழியில் அதை செய்து இருக்க முடியும் .அவரது கனவு நிறைவேறி இருந்தால் ஒரு வேளை இந்தியாவின் ஆன்மா பூரணமாக விழித்துகொண்டு இருக்கும் .ஒரு தன்னிறைவு கொண்ட தற்சார்பு கொண்ட சமூகம் எழுந்து இருக்கும் .காந்தியுடன் வாழ்ந்தவர்கள் இஇருந்தவர்கள் அனைவரும் காந்தியர் ஆகிவிட முடியாது .இங்கு காந்தியை போல் இறுதி வரை தான் நம்பிய மகத்தான கனவிற்கு வாழ்நாள் முழுவதும் உழைத்த ஒரு மகத்தான ஆத்மாவை ஜெ.சி.குமரப்பா வடிவில் நாம் காண்கிறோம். இவற்றைப் பற்றி அறியாமலேயே அந்த வழியில் ஒரு தன்னிறைவு கொண்ட தற்சார்பு கொண்ட கிராம சமூகத்தைக் கட்டி எழுப்ப இருக்கும் இந்த முத்துக்குமரேசன் அவர்கள் ஒரு பொறியாளராவர் மேலும் சென்னையில் ஒரு வெளி நாட்டு நிறுவனத்தில் மேலாளராகவும் வேலை செய்தவர் தனது வேரான கிராம விவசாயத்தை தேர்ந்தெடுத்து அதில் தனது தொழில் நுட்பத்தையும் இணைத்து கேரள வெள்ளரியை இரண்டு ஏக்கரில் ஆண்டுக்கு சுமார் எட்டு லட்சம் ரூபாய்க்கு உற்பத்தி செய்து வருகிறார் மேலும் புதுக்கோட்டையை அடுத்துள்ள தன் கிராமமான முள்ளூரிலுள்ள இருபது பெண்களுக்கு வேலை கொடுத்து வருகிறார். அவரை புதுக்கோட்டை கற்பகவிநாயகா மேலாண்மை நிறுவனமும்இ மதுரை செசியும் மாணவர்களுக்கு நடத்திய பட்டறை வகுப்பில் முத்துகுமரேசன் அவர்கள் ஆற்றிய உரையை கட்டுரையாக எழுதச் சொல்லி பல முறைக் கேட்டும் எனது ஆய்வு சம்பந்தமான வேலைகளில் கவனம் செலுத்தியதால் இப்போதுதான் வடிவம் கிடைத்தது. அவர் மாணவர்களுடன் உரையாடியதன் சாராம்சம் இதுதான். ஒவ்வொரு மாணவனும் தன் பணியைத் தேர்ந்த்டுக்கும் போதும் நன்றாக தீர்க்கமாக யோசித்துஇ தெளிவாக முடிவெடுக்க வேண்டும். நான் யானைக்கு தலையாக இருப்பதை விட புலிக்கு வாலாக இருக்கவே ஆசை கொள்கிறேன் ஆதலால்தான் எல்லோரும் விட்டுவிட்டு போய் விட்ட விவசாயத்தை கையில் எடுத்தேன். மேலும் நான் தோற்றவர்களிடமிருந்து ஆரம்பித்தேன். ஏன் அவர்கள் அத்தொழிலில் தோற்றார்கள் என ஆராய்ந்து அதை என்னிடம் சரி செய்தேன். விவசாயத்தில் இன்று கிராமத்தில் என்ன சிக்கல்கள் உள்ளன் என் மாணவர்களைக் கேட்டு அதற்கு தன்னிடம் விடையுள்ளது மேலும் அதற்கானத் தீர்வை நோக்கி நாம் பயணிப்போம் என்றார். விவசாயத்தின் சிக்கல்களென மாணாவர்கள் கூறியதாவது. தண்ணீர் பற்றாக்குறைஇ வேலை ஆட்கள் பற்றாக்குறைஇ உற்பத்தி செய்பவர் விலை நிர்ணயிக்க முடியாத நிலைகள்இ தொடர்ச்சியான் சந்தைஇ சந்தையின் தேவைக்கு சந்தை படுத்த முடியாமைஇ மேலும் வெளி நாட்டு ஏற்றுமதி அறியாமை மற்றும் தொழில் நுட்பம் அறியாமை. விவசாயம் சார்ந்த சிக்கல்களை தான் எப்படி களைந்தெடுத்தேன் என்று விரிவாக உரையாடினார். அதாவது தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க இரு வழிகளை கண்டறிந்து அதனை சரி செய்துள்ளார். ஒன்று சொட்டு நீர் பாசண் முறை இர்ண்டு கிணறு தூர்வாரி அதிலிருந்து நீர் எடுத்தல் மேலும் தடை படும் மின்சாரத்தை தவிர்க்க சூரிய ஒளி மின்சாரத்தை பயன் படுத்த திட்டம் வைத்துள்ளார். தானே உற்பத்தியாளரகவும் வர்த்தகம் செய்பவராகவும் இருப்பதால் சந்தையில் தேவை அதிகரிக்கும் போது விலையை சராசரியாக உயர்த்தியும்இ தேவை சரியும் போது சராசரியாக சந்தையே விலையை நிர்ணயிக்கும் போக்கில் விட்டும் மேலும் ஆண்டுதோரும் பொருள் சந்தையில் கிடைக்கும்படி சரியான அளிப்பை செய்து கொண்டு வருவதாலும் சந்தையிடுதலில் உண்டாகும் சிக்கலை தவிர்த்து லாபம் ஈட்டுகிறார். வேலையாட்கள் பற்றாக்குறைக்கு இவர் வைக்கும் தீர்வு மிகவும் யுக்தியுடனுள்ளது. பொதுவாக ஏன் கிராம மக்கள் வேலைக்கு நகரத்தை நோக்கி செல்கிறார்களென பார்த்தால் தொடர்ச்சியாக வேலை கிராமத்தில் கிடைக்காததுதான் அடிப்படைக் காரணம் என்றும் அதனை எப்படி சரி செய்துள்ளார் என்றால் விவசாயத்தில் உள்ள தினக் கூலி முறையை மாற்றி மாதச்சம்பளம் ஆக்கினர் மேலும் தொடர்ச்சியான வேலையும் அதற்கான பயிற்சியும் அளித்து அச்சிக்கலை மிக எளிதாக போக்கியுள்ளர். மேலும் அவர்களுக்கு அந்த தொழில் நுட்பத்தையும் கற்றுக் கொடுத்துள்ளார். பந்தலில் படர்க்கை நிலையில் படரும் வெள்ளரியை செங்குத்தான நிலையில் படர விட்டு அதிக மகசூலை எடுக்கப்பதாகவும் கூறினார். மூலதனம் திரட்டும் போது ஒன்றுமே இல்லாத நிலையையும் நிறைய இருந்த நிலையையும் தான் கண்டுள்ளேன் என்றும் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பல தவறுகளை செய்து திருத்திக் கொண்டுதான் இந்த நிலையை அடைந்துள்ளேன் ஆகையால் உழைக்காமல் இதனைஇ இந்த நிலையை பெறவில்லை அதே சமயத்தில் நாம் என்ன செய்கிறோம் ஒரு கீரை விற்கும் அம்மாவை கண்டால் அவர்களின் உழைப்பை மதிக்காமல் அவர்களிடம் பேரம் பேசியும் உதாசினப்படுத்துவோம்இ ஆனால் நாமே ஒரு வெளி நாட்டு கம்பெனியில் அடிமையாக கை கட்டி வாய் பொத்தி வேலை செய்ய விருப்பம் கொள்வோம் இந்த நிலைக்கு மாணவர்களை அனுப்ப ஆசைப்படும் பெற்றோரும் அதுபோன்ற கல்வியமைப்புமே காரணம். இந்த சமூகத்தில் சாமனியனும் சர்வ வல்லமை பொருந்தியவனும் உழைக்காமல் ஏதொன்றும் நமக்கு எளிதில் கிடைத்து விடாது ஆகையால் நாம் ஒவ்வொருவரின் உழைப்பை மதிக்க கற்றுக் கொண்டு அதே போல நாமும் உழைக்கமல் எந்தவொன்றையும் பெறவும் முடியாது என்றும் நினைத்தும் மதித்தும் வாழ வேண்டுமென மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். அதே போல் நாம் உழைக்கவும் வெட்கம் கொள்ளக் கூடாது. இன்றைய கல்வி முறையிலும் வளர்ப்பு முறையிலும் ஆதித் தொழில்களை கேவலமாக பார்க்கும் போக்கே மிகுந்துள்ளது இதனைப் போக்கி நாம் நம் கிராமத்தை சுய நிர்மாணம் செய்ய வேண்டும்இ சுய தொழில் ஒன்றை செய்து அதன் மூலம் நமது கிராமத்தை சுய சார்புள்ள கிராமமாக மாற்ற முயற்சிக்க வேண்டுமென அழுத்தம் திருத்தமாக சொன்னார். காரல்மார்க்ஸ் தனது பதினேழாவது வயதில் எழுதிய முதல் கட்டுரையில் கூறியதுபோல தற்சார்பு கொண்டு சுயமாக சிந்தித்து எந்த மாயவாதத்திற்கும் அடிமையாகமல் ஒரு இளைஞன்இ ஒரு இளைஞி தன் பணியைத் தேர்ந்தெடுத்தால் அவர்களும் சுயசர்புற்று அவர்களது கிராமத்தையும் சுயசார்புள்ளதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும் உரையாக இது அமைந்தது. மேலும் இந்திய நாட்டின் முதுகெழும்பான கிராமங்கள் சுயசார்புடையதாக மாறினால் நாட்டின் வளர்ச்சி படுகிடைக் கோணத்திலிருக்கும் இல்லையென்றால் செங்குத்து வளர்ச்சி வீக்கமாகிஇ புரையோடிப்போய் நாட்டை சீரழிக்கும். ஆகவே சமூக பிரக்ஞையுடைய ஒரு தொழில் முனைவோரை உருவாக்கும் விதமாக அவரது பேச்சு அமைந்தது ஆகச்சிறப்பானது.

செவ்வாய், 10 மார்ச், 2015

உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன


உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன இரவு வரும் வருத்தத்தில் மரங்கள் கனத்த இதயங்களுடன் அசைவின்றி அரவமின்றி ஊர்ந்து செல்கின்றன நரக ஊர்திகள் மாடுகள் வீடு திரும்புவது மறந்து புல் மேய்கின்றன. அணில் குட்டியொன்று என் வீட்டுத் தாவரத்தில் குதித்தோடிய போது மாலைச் சூரியனின் தங்க நிறம் பூசியதாய் மின்னுகிறது. அலைப்பேசிக் கம்பத்தில் அமரச்சென்ற ஊர்க்குருவிகள் அலைப்பேசி அழைப்பின் அதிர்வுகளில் கூடு திரும்புகின்றன. தூதுவளை குத்தின் அடியில் துணையைக் காணாது கானங் கோழிகள் எட்டி எட்டி பார்க்கின்றன. ‘பேப்பர’; தின்கின்றன ஊர் காளைகள்;. வயல் வெளிகளில் ‘பி;.டி’ நெல் விதைக்கப்பட்டுள்ளதாய் சுடுகாட்டு விளம்பர பலகை போல் ஒரு விபரீதப் பலகையில் உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன அதன் விளிம்பில் தேன் சிட்டிற்கு விசம் கொடுக்கிறது ‘பிளாஸ்டிக் ரோசா’…… துவாரகா சாமிநாதன் 9629272185

நானே…..


நானே….. சிறுவயதில் ஊசித்தட்டானை ராசா தட்டானுக்கு ஊணவளித்து மகிழ்ந்ததிலுள்ள குரூரம் விளங்கியது அறுபது வயதில் இப்போது தேன் மிட்டாய்; தின்னக்கேட்கிறேன் பேத்தியிடம் அந்த வயதில் ஓணானுக்கு புகையிலை கொடுத்து அதன் போதையைக் கண்டு மகிழ்ந்தது மேலும் அதன் வாயில் மூத்திரம் பேய்ந்ததில் என்ன அரசியல் இருந்திருக்க முடியும் குழந்தைகளின் மனதில் மழை பெய்ய ஏதேனும் அரசியல் காரணம் வேண்டுமா? ஏன எதிர் வீட்டு அத்தையின் இடுப்பு ரசிக்க அடிக்கடி அவள் வீட்டுக்கு செல்வதின் அவசியம் அவளுக்கு புரியாமலில்லை. வயதொத்த வயதளித்த குரூரமும் குறும்பும் என்னுடனானதே இயல்பாய் நானே இருக்கிறேன் எல்லாவற்றிலும்….. ஆனால் என்ன என்னோடு விளையாடும் பேத்தியை மருமகள் அதட்டி உள்ளழைக்கும் போது மட்டும் மரங்கொத்தி; பிய்த்துப் போடுகிறது. துவாரகா சாமிநாதன் 9629272185

என் வீட்டு கண்ணாடி


என் வீட்டு கண்ணாடி என் வீட்டின் பின்புறம் 108 வாகனத்தின் ஓயாத அழுகை தெருவின் திருமண மண்டபத்தில் மகிழ்வும் எதிர் வீட்டின் துக்க அனுசரிப்பும் வாழ்வின் சித்திரங்களாக வரைந்து காட்டியது என் வீட்டு கண்ணாடி வாழ்வின் உள்ளீடுகளில் வரைகோடுகளின் வரிகளில் எனது எல்லா பிம்பங்களும் தெளிவாய்த் தெரிகின்றன. என்னை அப்படியே காட்டுகிறது மறைக்காமல் என் பிம்பங்களின் பிரதிபலிப்பில் இயற்கையும் அதனோடு கூடிய வாழ்வும் என்னுள் பனி படலமாய் கண்ணாடி விளிம்புகளில் புகையாய் நானே இயற்கையுமாய்…. என் வீட்டு கண்ணாடியில் தெரிகிறேன் எந்த அரிதாரமுமில்லாமல் எதையுமே மறைக்காமல் எனது உண்மை பிம்பம் உணரத்துகிறது என் வீட்டு கண்ணாடி….. துவாரகா சாமிநாதன் 9629272185

கீழானவையெல்லாம் உயர்வானதுமல்ல மேலானதெல்லாம் கீழானதே.........


கீழானவையெல்லாம் உயர்வானதுமல்ல மேலானதெல்லாம் கீழானதே......... சரியென்றும் தவறு என்றும் ஒன்று எப்போதும் இந்த உலகில் கிடையாது... முன்பெல்லாம் கவிதை அனுப்பினால் தங்களால் பிரசூரிக்க முடியவில்லையானால் முடியவில்லை என்று சொன்னீர்கள். இப்போது.. சரியானவற்றை பிரசூரிக்க மட்டுமே மலைகள் என்கிறீர்கள். தரம் என்கிறீர்கள். என்னுடைய கவிதையை நீங்கள் தரமிட வேண்டாம்.....நான் குழந்தையாகவே இருந்துவிட்டு போகிறேன். இது ஒரு முயற்சிதான். தரத்தை யார் முடிவு பண்ண வேண்டும் வாசகனா...அல்லது நீங்களா?.. சரி நீங்கள் ஒரு நல்ல வாசகத்தளத்தை உண்டு பன்னுகிறீர்கள் என்றால்... அந்த தரத்தையும் நீங்கள் ஒரு ஆள் மட்டும் எப்படி முடிவு செய்யவது ஒரு ஜனநாயக முறையில் முடிவு செய்ய வேண்டுமென்றால் அதற்கு ஒரு குழு அமைக்க வேண்டுமல்லவா?.... அப்படியில்லை என்றால் இது ஒரு பாசிச செயலாகுமா? தரத்தின் உயரம் உங்கள் மலைகளல்ல..நானும் தவழ்ந்தாவது சில சிகரத்தை தொட முயற்சிக்கிறேன். எந்த அங்கீகாரத்தையும் பெற உங்களுக்கு நான் கவிதை அனுப்பவில்லை. இது ஒரு முயற்சி. முதலில் நமக்குள் ஒரு புரிதல் இல்லை நான் டமில் வாத்தியில்லை...ஒரு மேலாண்மையியல் படித்தவன்..மேலும் நீங்களெல்லாம் பாராட்டினால்தான், நான் தமிழில் நிறைய எழுத முடியும். நான் வேறு தவழும் குழந்தைதான். நான் வாசிப்பில் தவழ்ந்துதான். வருகிறேன்., உங்களுக்கு தமிழ் ஆசிரியருகளின் மேல் தீராத பகை இருக்கிறதென் புரிகிறது தோழர்.....எனக்கு சிலவற்றை தமிழில் சொல்ல வரவில்லை ஆதலால்தான் ஆங்கிலத்தில் எழுதினேன். ஒரு விதையின் முளையை வளரும்போதே வெட்டிய பாவம் உங்களை வந்து சேர வேண்டாம்..என்னை விட்டுவிடுங்கள். பாவம் நான் எந்த அகந்தையுமில்லாமல் சொல்லுகிறேன். நேரே பார்த்தும் இது பற்றி விவாதிப்போம். ஆனால் சண்டை போட என்னால் முடியாது. உங்கள் அளவு புத்தகம் படிக்கவில்லை. ஆனால் மனிதர்களை நிறைய படித்திருக்கிரேன். அதில் நீங்கள் சொல்லுவதுபோல் கூட்டம் சேர்க்கும் ஆள் நானில்லை. நீஙளுமில்லையென நம்புகிறேன்...எனது ஒரு முயற்சியில்தான் நான் எழுதியுள்ளேன், யாரையும் பின்பற்றில்லை. வாத்திக்கு மாணவரிடத்தில் காண்பிக்க என்ன இருக்கிறது. வாத்தியார்தனம் என்பதென்ன.....நான் ஒருபோதும் பெரியவனில்லை. இந்த பிரபஞ்சத்தில் நான் ஒரு கொசு போல...தவழ்ந்து வருகிறேன். அண்ணா நீங்கள் உங்கள் இலக்கியப் பணியை செவ்வனே செய்ய பிரார்த்திறேன். ஆனால் திரும்பவும் முதலில் சொன்னதுதான் தரம் பார்த்து பார்த்து எந்த கவிஞனும் எழுதவில்லை எல்லோரும் எழுதினார்கள். தரம் வாசகனால் கொடுக்கப் பட்டது..புதுபுது முயற்சி செய்தார்கள் வளர்ந்தார்கள். ஜெயமோகனும், சுந்தரராமசாமியும், சுஜாதாவும் குமுதத்திலும் சாதாரண பத்திரிக்கைகளிலும் எழுதிதான் இப்போது வளர்ந்து ஆலமரமாய் நிற்கிறார்கள்........ இது சிலருக்கு பதிலாக நான் எழுத நினைத்தது. மேலும் கலை யாருக்காக படைக்கிறோம், எதன் நோக்கில் எழுதுகிறோம் என்பதே தெரியாமலா? எழுதுவான் ஒருவன். எது? நல்ல இலக்கியம் என்பது இன்றளவும் எழுதுகின்ற ஒவ்வொருவரும் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாக உள்ளது. சிலர்தான் உலகத்திலேயே இலக்கியத்தை காக்க வந்த தூதுவர்களைப் போல ஆபத்பாந்தவர்கள் போல நடந்து கொண்டால் சாதரண மனிதர்களுக்கான் இலக்கியம் என்னாவது. எல்லொரும் கவிதையை அறிவுஜீவிக்களுக்கு மட்டுமெ எழுதினால் யார்தான் சாதாரண மக்களுக்கு எழுதுவது. சாதாரண் மக்கள் புரிந்து கொண்டால்தானே பல மாற்றாங்களைக் கொண்டு வர முடியும். தரம் என்று இவர்கள் எதை சொல்கிறார்கள். ஏதோ ஒரு மூளையில், யாரோ யாருக்கோ தந்த விருதுகளை வைத்தா? தரமிடுவது. சொல்லும் விசயத்தில் தரம் வேண்டுமா? கையாலும் வார்த்தையிலா?. என்னொவோ போங்கள்....இவர்களும்தான் பாசிசம் செய்கிறார்கள். கவிஞர். துவாரகாசாமிநாதன்.

மலடான கன்னிகளும் மற்றும் கடவுள்களும்...


உனக்கு அடிமையாகி நான் பூரணத்துவமடைவதை விட உன்னை விட்டு விலகி வெளியிலியிருந்து நான் முழுமையடைய விரும்புகிறேன். இயங்கும் பொருளே அழிக்கும் பொருளாகவும் இருக்கும் உண்மையை உணர்ந்த பின் இயங்காத உன்னை அழித்துவிட விரும்புகிறேன் பாறையில் படிந்த பாசியாய் நீ என்னுள் படிந்து என் சுயத்தையும் மறைத்துக் கொண்டு என்னை விட்டு போக மறுக்கிறாய். விடுதலையடையத் துடிக்கும் இதயத்திலிருந்து வலியும் இரத்தத்தில் அன்பும் கலந்துவிட்டால் உலக துன்பங்களனைத்திற்கும் தீர்வு கிடைத்துவிடும் ஆனால் என் மரணத்தின் பயத்தில் கூட நீதான் ஒளிந்திருக்கிறாய் உனை மரணிக்கச் செய்யும் வல்லமையை இன்னும் உலகம் பெறவில்லை உனை நம்பாததை விட நம்பித்தான் உன்னை அவமதிப்புக்குள்ளாக்குகிறேன் எல்லோரையும் போல.... உனை விட்டு விலகாதிருக்க மதம் ஏற்படுத்திய நுண்ணிய பயம்தான் என் செல்களை அரித்துக்கொண்டிருக்கிறது நிறைய நேரம் உயிர் பிசைந்து துன்ப்த்தில் அழுகிறேன். என்னுள் இருளைப் போர்த்துவது நீதானென வழிப்போக்கர்கள் சொல்லிவிட்டு போகிருக்கிறார்கள். ஆனால் நான் ஒளி பெறுவதற்கான ஆற்றல் எனக்கு வெளியில்லையென்பது மட்டும் புரிந்தாலும் இறுதியாக எனக்கான எல்லா தேடல்களுக்கும் விடை என்னுள்ளேயே கிடைத்துவிட்டன உனை விலகியதும்..... துவாரகாசாமிநாதன் - 9629272185

அந்த சிகப்பு பலூன்


எப்போது வெடித்துச் சிதறுமென தெரியாது முக்கி ஊதுகிறேன் பெரிதாகி சுருங்கும் கால இடைவெளியில் பலூன் விற்பவரின் உயிர் மூச்சுதான் இதய வடிவில்இ சிகப்பு நிறத்தில் பல நூற்றாண்டுகளாய் குழந்தைகளை குதூகலப் ப்டுத்துகிறதென்பதை அறியாது காள(ல)னின் கை வண்ணத்தில் உப்பை பலூன் மீது வீசுகிறோம் உயிர் பிரிந்த பலூன்கள் சிதலமடைந்து தொங்கின்றன. அந்த சிகப்பு பலூன் மட்டும் காற்றில் அங்குமிங்கும் அலைகிறது. ஏதோவொரு காரணத்தால் கையிலிருந்த பலூன் திடீரென வெடித்துச் சிதறியதைக் கண்டு திக்கித்து நிற்கும் குழந்தை போல அவர்களின் வாழ்க்கைத் துன்பங்கள் திருவிழாக்களில் ஓரமாய் கடை விரித்தே நிற்கின்றன. அவர்களுக்கு எந்த வண்ண பலூனும் நிறைவைத் தந்ததில்லை ஆனால் அந்த சிகப்பு பலூனிற்கு மட்டும் இதயத்தின் ஓரத்தில் இடம் தந்து விட்டார்கள் பின் தொடர்கிறது பலூன் வாழ்க்கையை எப்போது வெடித்துச் சிதறுமென தெரியாது பயணிக்கிறார்கள் பலூனுடன் அவர்களும்; நாமும்தான் அதன் வண்ணம்தான் மேலே பறக்கச் செய்கிறது என்று நினைந்து சிகப்பு பலூனை எல்லோரும் விரும்புகிறார்கள் விருப்பத்தினை யார் தடுக்க முடியும். எப்போது சுருங்கிவிடுமென யாருக்கும் தெரியாது ஆனாலும் முக்கி ஊதுகிறேன் நானும். அந்த சிகப்பு பலூனில்தான் எல்லோரது உயிர் மூச்சும் அடங்கியிருப்பதாக நினைந்து அந்த சிகப்பு பலூனை எப்போது வெடித்துச் சிதறுமெனத் தெரியாது ஊதுகிறேன்...... ஊதுவேன்...... ஊதுவார்கள் பெரிதாகி சுருங்குகிறது கால இடைவெளியில் அந்த சிகப்பு பலூனிற்கு மட்டும் இதயத்தின் ஓரத்தில்லை முழுவதும் இடம் தந்து விட்டோம் எப்போது வெடித்துச் சிதறுமெனத் தெரியாது... ஆனாலொன்று அதற்கு மட்டும் அழிவே இருக்காது....... அதை அழிக்கவும் முடியாது... அது எங்கள் உயிர்மூச்சில் கலந்தால்.... துவாரகாசாமி நாதன் 9629272185 Previous Next

முட்டத்தட்டு எங்கப்பன் தட்டு


'அப்பன் தட்டை எடுத்து போடா' ஆத்தா சொல்லிச்சு தட்டுக்கு நான் போட்ட சண்டையெலாம் நினைவுக்கு வந்துச்சு அண்ணமாரு சாப்பிட்ட அதே தட்டுதான் முட்ட வடிவ தட்டுக்கு குட்டு வாங்கி அழுத ஞாபகம் வந்துச்சு தாய் மாமன் பேரு வடிச்சிருக்கும் எத்தன காலமது பரணியில கிடந்துச்சு அப்பன் போன கவலயெல்லாம் ஆத்தா கண்ணீரா அந்த தட்டில் வடிச்சிருப்பா... அண்ணமாரு சாப்பிட்டது அவுகளும் இப்போ அக்கர சீமையில அப்போ படிக்க 'ஆஸ்டலுக்கு' போனயென்ன ஆத்தா சொன்னிச்சு "அப்பன் தட்ட எடுத்துப் போடா' தட்டுக்குச் சண்டயிட்ட நாங்க சொத்துக்கும் சண்டையிட்டு தனியாக போறப்ப ஆத்தா சொன்னிச்சு "அப்பன் தட்ட எடுத்துப் போடா' மோர் பிசைந்து சாப்பிட்டப்ப அப்பன் சாப்பிட்ட அலகயும் ஆத்தா நெனவயும் அந்த தட்டு காட்டிச்சி.. அப்பன் ஆத்தா கூடயில்லஇ தட்டுமட்டுமிருக்கு தட்டுல ஒன்னுமில்ல உசிருல நெனவிருக்க கன்னுக்குள்ள அப்பன் முகம் தட்டுலயும் தெரிஞ்சிச்சு எம்புள்ள சாப்பிட எடுத்து வைக்க ஆசப்பட்டன் எம்புள்ள சாப்டும்போது எம்மொகம் வருமான்னு தெரியிலயே எத்தன நா இச்சோகம் இருக்குமுன்னு அறியலயே நெனவ வச்சு உசிர ஏம்படச்சான் அப்பன் சோறூட்ட அதே தட்டுல சாப்பிடுறா எம்மக இப்போ தட்டுல உப்பா எங்கண்ணீரு.....

புதன், 28 ஜனவரி, 2015

இனி தமிழ் மெல்லச் சாகாது


எங்கள் கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனத்தில் கொண்டாடப்பட்ட தமிழ்ப் பண்பாட்டு மீட்பு விழா காட்சிகள்...... இதில் மாணவர்கள் மகிழ்ச்சியாக பங்கேற்ற விதம் அருமை, இனி தமிழ் மெல்லச் சாகாது என் அடித்துச்சொல்வேன் நான் காரணம் இதில் மாணவ, மாணவிகள் காண்பித்த ஈடுபாடு அசாத்தியமானது, ஆர்வம் சிறப்பானது, மேலும் 45 வகையான பாரம்பரிய உணவு வகைகள், மறந்து போன விளையாட்டுகள், அளவை முறைகள், பொருட்கள், ஆடல், பாடல், பழமொழி சொல்லுதல், விடுகதை போடுதல் என ஒரே கோல கல கொண்டாட்டம்தான்..

திங்கள், 26 ஜனவரி, 2015

சங்க இலக்கியத்தில் உணவு வகைகள்


சங்க இலக்கியத்தில் உணவு வகைகள் உயிர்வாழ இன்றியமையாத பொருள் உணவு ஆகும். அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ உணவையே சார்ந்திருக்கின்றன. ஆகவே அவற்றின் செயல்பாடுகள் உணவு தேடுவதையே அடிப்படையாக கொண்டுள்ளன. பண்டைத் தமிழர்கள் சுவைமிக்க உணவுப் பொருள்களை சமைப்பதில் தேர்ந்திருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. அவரவர் வாழ்ந்த நிலத்திற்கேற்ப உணவு வகைகளும் உணவு முறைகளும் வேறுபட்டு இருந்தன. அவரவரின் பொருளாதார நிலையை ஒட்டியும் உணவின் தரம் வேறுபட்டிருந்தது. சங்கத் தமிழர் மரக்கறி உணவைக் காட்டிலும் புலால் உணவையும் விரும்பியுண்டனர் என்பதை இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. சங்கத்தமிழர் பலவகையான மதுவகைகளையும் பருகுநீர் வகைகளையும் விரும்பிப் பருகும் வழக்கத்தையும் மேற்கொண்டிருந்தனர். சங்க இலக்கியங்கள் உணவின் தேவையை எடுத்து விளக்குவதோடு அந்த உணவை மற்றவர்களுக்கும் கொடுத்து வாழ்வது இன்றியமையாத செயல் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்துகின்றன. உண்ணும் உணவினைப் பல்வேறு பகுதிகளாக பிரித்துக் சுவைபடச் சமைத்து உண்பதில் அறிவையும் உணர்வையும் தமிழர்கள் ஒருசேரப் பயன்படுத்தியுள்ளனர். சங்க இலக்கிய உணவு வகைகள்: இயற்கையாக அமைந்த நிலப்பாகுபாடுகளில் ஆங்காங்கு கிடைக்கப்பெற்ற பொருள்களையும் தங்கள் முயற்சியால் தட்பவெட்ப நிலைக்கேற்ப உற்பத்தி செய்த பொருள்களையும் கொண்டு பண்டைத்தமிழர்கள் தங்கள் உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டனர் என்பதற்குச் சங்க இலக்கியத்தில் பல சான்றுகள் உள்ளன. உணவுப் பொருள்களை நல்ல முறையில் பக்குவம் செய்து சுவையேற்றி உண்டும் மகிழ்ந்திருக்கிறார்கள். இத்தகைய உணவு வகைகள் வருமாறு. 1. மரக்கறி உணவு 2. கனி உணவு 3. இறைச்சி உணவு 4. அரிசி உணவு 5. பிற உணவு 6. பருகுநீர் 7. மது. மரக்கறி உணவு: சங்ககால தமிழர்கள் காய், கிழங்கு, கீரை, பருப்பு போன்ற தாவரங்களிலிருந்து கிடைக்கக் கூடிய உணவுப்பொருள்களை உண்டு வாழ்ந்திருக்கின்றனர் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் தருகின்றன. பண்டைத் தமிழர்கள் நண்டுக் கறியுடன் பீர்க்கங்காயை இணைத்து உண்டுள்ளனர் என்ற செய்தியை சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. பொதுவாக மரக்கறி உணவோடு இறைச்சி உணவைச் சேர்த்து உண்ணும் வழக்கம் இல்லை. ஆனால் மருத நிலத்து மக்கள் பீர்க்கங்காயோடு நண்டுக்கறியையும் இணைத்து உண்ட செய்தி புதுமையானதாகும். இப்புதிய உணவுப் பழக்கம் பற்றி சிறுபாணாற்றுப்படையின் பின்வரும் பாடலடி குறிப்பிடுகிறது. கவைத்தா ளலவன் கலவையொரு பெறுகுவீர் (சிறுபாண 195) இதற்கு கவைத்த காலினையுடைய நண்டும், பீர்க்கங்காயும் கலந்த கலப்புடனே பெறுகுவீர் என்று நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார். இதன் மூலம் பண்டைத் தமிழர் நண்டுக்கறியுடன் பீர்க்கங்காயையும் சேர்த்து உண்டுள்ளனர் என்ற செய்தியைத் தெரிந்து கொள்ள முடிகிறது. பீர்க்கங்காயையும் நண்டையும் கலந்து செய்யும் சமையற் குறிப்பினை நச்சினார்க்கினியர் உரையின் வாயிலாகவே அறிய முடிகின்றது. மேலும் மாதுளங்காய், மாங்காய், வெள்ளரிக்காய் போன்ற பல காய்களையும் உண்டுள்ள செய்தி சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. கனி உணவு:- சங்க இலக்கியங்களில் ஆசினிப்பழம், களாம்பழம், காரைப்பழம், துடரிப்பழம், நாவற்பழம், நெல்லிக்கனி, பலாப்பழம் போன்ற பழங்களைச் சங்ககால மக்கள் பெரிதும் விரும்பியுண்டனர் என்ற செய்தியை அறியமுடிகிறது. பெரும்பெயர் ஆதி என்ற மன்னனுடைய நாட்டிலுள்ள மக்கள் மணல் குவிந்து கிடக்கும் மணல் மேட்டில் ஏறி நின்று நாவற்பழத்தை கொய்து உண்டனர் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடலடிகள் தருகின்றன. ”கருங்கனி நாவலி லிருந்து கொய் துண்ணும் பெரும்பெய ராதி பிணங்களிற் குட நாட் டெயினர்………………………………” (புறம் 177 11-3) உண்டவரை நீண்டநாள் வாழவைக்கும் ஆற்றல் கொண்டது நெல்லிக்கனி என்ற செய்தியை ”சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா தாத னின்னகத் தடக்கிக் சாத னீங்க வெமக்கீந் தனையே (புறம் 91 9-11) எனவரும் ஒளவையார் பாடிய புறப்பாடல் வழி அறியலாம். இறைச்சி உணவு: சங்ககால மக்கள் புலால் உணவை விரும்பியுண்டனர். போரும் வீரமும் பேணுவதற்கு இப்புலால் உணவு ஊக்கமளிக்கும் உணவு ஆகும். போரெனின் உவக்கும் சங்ககால இயல்புக்குப் புலால் உணவே பொருத்தமான உணவாயிற்று. மான் இறைச்சி: கோப்பெருநற்கிள்ளி தீக்கடைக்கோலால் தீயை உண்டாக்கி அதில் கொழுத்த மானின் இறைச்சியைக் சுட்டுப் பதப்படுத்தி வழி தப்பிச் சென்ற மறவர்கள் வந்து கூடுவதற்கு முன் உண்க எனப் புலவர்களுக்குக் கொடுத்தான் என்றும், அதனை உண்டு புலவர்கள் பசி தீர்ந்தனர் என்றும் பின்வரும் புறநானூற்றுப் பாடலடிகள் காட்டுகின்றன. இழுதினன்ன வானினக் கொழுங்குறை அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி” (புறம் 150) அம் மன்னன் தான் வேட்டையாடிய மான் தசையைப் புழுக்கி அதனை நெய்போன்ற மதுவுடன் புலவர்களுக்குக் கொடுத்தான். இச் செய்தியை ”தானுயிர் செகுந்த மானினப் புழுக்கோ டானுவருக் கன்ன வேரியை நல்கி” (புறம் 152) என்ற புறப்பாடல் வழி அறியலாம். மேலும் மானிறைச்சி மட்டுமின்றி ஆட்டிறைச்சி, உடும்பு, இறைச்சி, பன்றி இறைச்சி, பறவை இறைச்சி, போன்ற பல்வேறு இறைச்சிகளையும் உண்டதாகச் சங்க இலக்கியக் குறிப்புகள் கூறுகின்றன. அரிசி உணவு: சங்க காலத் தமிழர் சுவையும் பயனும் கெடாவண்ணம் இருக்கக் கைக்குற்றல் அரிசியையே பயன்படுத்தியுள்ளனர். இது தொடிமாண் உலக்கைப் பருஊக் குற்றரிசி (புறம் 399 2) என்று அழைக்கப்பட்டது. கொழுத்த ஊன் துண்டங்களைத் தீயிலிட்டுச் சுட்டு அவற்றுடன் தினைச் சோற்றைச் சொரிந்து பாணர்கள் உண்டனர். ”செந்தீ அணங்கிய கொழுநிணக் கொழுங்குறை மென் நினைப் புன்கம் உதிர்ந்த மண்டையொரு ………………. பருக்கும் ……………….. ” (அகம் 237.9.13) பிறஉணவு: பலவகையான சுவையையுடைய பொருட்களைச் சேர்த்து பலவகைத் திண்பண்டங்களைச் சங்ககால மக்கள் உண்டுள்ளனர். அவை அப்பம், பண்ணியம், மோதகம், துவையல், மீன்குழம்பு, தயிர்க்குழம்பு போன்றவையாகும். நெல்மாவில் இனிப்புச் சுவையான பொருட்களைச் சேர்த்து ஆக்கப்படும் ஒரு வகை சிற்றுண்டி பண்ணியம் எனப்படும். ஊனையும் சோற்றையும் உண்டு வெறுத்த மக்கள் அவ்வெறுப்பை மாற்றுவதற்கு வெல்லப்பாகையும் பாலையும் அளவாகக் கலந்து செய்யப்பட்ட பண்ணியங்களைத் தின்றனர் என்பதை. ”உனு மூணு முனையி னினிதெனப் பாலிற்பெயதவும் பாகிற் கொண்டனவும்” என்ற புறப்பாடல் தெரிவிக்கிறது. பருகுநீர்: இளநீர், கரும்புச்சாறு, அருவிநீர், சுனைநீர், பால், தயிர், மோர் போன்றவற்றை சங்க கால மக்கள் பருகியுள்ளனர். அருவிநீர்: பலவகையான உணவுகளை உண்டபின்னர், மலையுச்சியில் இருந்து கீழே பாய்ந்து வரும் குளிர்ச்சியான அருவிநீரை குறிஞ்சி நில மக்கள் அருந்தினர். ”அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி நன்மர னளிய நறுந்தண் சாரற் கன்மிசை யருவி தண்ணெனப் பருகி” (புறம் 150 14-16) கரும்புச்சாறு: இனிமையான சுவை நீர்களில் கரும்பின் சாறும் அடங்கும். அதியமான் நெடுமான் அஞ்சி (கரும்பை விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத்திற்குக் கொணர்ந்து கொடுத்தான் என்பது ஒரு தொன்மச் செய்தியாகும் இதனை, ”அறபெரன் மரபிற் கரும்பி வட்டந்தும்” (புறம் 99 2) ஆலை இயந்திரங்களில் கரும்பை இட்டு ஆட்டினர் என்ற செய்தியை கரும்பி னெந்திரங் கட்டினோதே என்று மதுரைக் காஞ்சி புலப்படுத்துகிறது. மது: வீரநிலைக் காலத்தில் மதுவும் கள்ளும் உண்ணல் சமுதாயத் தகுதியாகத் கருதப்பட்டன. மதுவும் கள்ளும் ஆற்றல் பானங்களாகப் போற்றப்பட்டன. ஒளவையார் தம்மைப் போற்றிச் சிறப்பு செய்த அதியமான நெடுமான் அஞ்சி இறந்தபோது அவர் தமக்குச் செய்த சிறப்புகளுள் இக்கள்ளினைத் தமக்குக் கொடுத்துக் தானும் உண்ட செயலைப் பாராட்டிக் கையறுநிலையாகப் பாடியுள்ளார். சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தாம் மகிழ்ந்துண்ணும் மன்னே – (புறம் 23 1-3) மேலும் சங்ககால மக்கள் மயக்கமும் உற்சாகமும் கொடுக்கக்கூடிய பானங்கள் பலவற்றை உண்டு மகிழ்ந்திருக்கின்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் தெளிவாகச் சுட்டுகின்றன. அவைகள் நறவு, மது மட்டு, தேறல் போன்றவையாகும். முடிவுரை:- பண்டைத்தமிழர்களால் பலவகை உணவுகள் தயாரிக்கப்பட்டன. அவர்களால் தயார் செய்யப்பட்ட அனைத்து உணவு வகைகளும் அவர்களால் விரும்பி உண்ணப்பட்டன. தினையரிசியும் பாலும் கலந்து பால்சோறு, அவரைப்பருப்பும் அரிசியும் கலந்த பருப்புச் சோறு, இறைச்சியும் அரிசியும் கலந்து ஊன்துவை அடிசில், புளியும் மோரும் மூங்கிலரிசியோடு கலந்து ஆக்கப்பட்ட புளியங்கூழ் ஆகியன சங்ககால உணவு வகைகளுள் குறிப்பிடத்தக்கவை. நன்றி: முன்னைத் தமிழிலக்கியம், – த. தவமணி,https://thoguppukal.wordpress.com/2011/01/30

தமிழர்கள் உண்ட உணவைப்பார்ப்போம்


குறிஞ்சி,பாலை,முல்லை,மருதம்,நெய்தல் என்ற ஐவகை நிலத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.அந்த தமிழர்கள் உண்ட உணவைப்பார்ப்போம். குறிஞ்சி நிலத்தவர் உணவு: சோழ நாட்டு குறிஞ்சி நில மக்கள் தேனையும்,கிழங்கையும் உண்டார்கள்.பிற நிலத்தாருக்கும் விற்று மீன்,நெய்யையும் நறவையும் வாங்கி வந்தார்கள்.-(பொருநாநூற்றுப்படை.213-214.) திணைச் சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டனர்.(மலைபடுகடாம்-168-169) குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும்,பன்றி இறைச்சியையும் உண்டனர். ( மலைபடுகடாம்-171-183) மலை நாட்டை காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர்.மலை மீது நடந்து சென்ற கூத்தர் தினைப்புனத்து காவலனால் கொல்லப்பட்ட காட்டுப்பன்றியின் மயிரைப்போக்கி மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி உண்டனர்.(243-249 ). பாலை நிலத்தார் உணவு: ஓய்மானாட்டுப் பாலை நில மக்களான வேட்டுவர்கள்,இனிய புளிங்கறி எனப்படும் சோற்றையும் ஆமாவின் சூற்றிறைச்சியையும் உண்டனர். (சிறு நாநூற்றுப் படை-175-177).தொண்டை நாட்டு பாலை நில மக்கள் புல்லரிசியை சேர்த்து நில உரலில் குத்திச் சமைத்த உணவை உப்புக்கண்டத்துடன் சேர்த்து உண்டனர். (பெ.ஆ.படை.95-100).மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசி சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டனர். (பெ.ஆ.படை.130-133). முல்லை நிலத்தார் உணவு; பொன்னை நறுக்கினார்ப் போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் (சங்ககால பிரியாணி) திணை மாவையும் உண்டனர். (440-445). மருத நிலத்தார் உணவு; மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்கு கொடுத்து மான் கறியையும், கள்ளையும் பெற்றுக்கொண்டனர்.(பெ.ஆ.படை. ( 216-217).ஒய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்க்காயும் கலந்த கூட்டையும் உண்டனர். (சி.ஆ.படை.193-195).தொண்டை நாட்டு மருத நிலத்தார் நெல் சோற்றை பெட்டைக்கோழி பொரியலுடன் உண்டனர்.(பெ.ஆ.படை.254-256). நெய்தல் நிலத்தார் உணவு; நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச் சியையும் உட்கொண்டனர்.(சி.ஆ.படை.(156-163).தொண்டைநாட்டுப் பட்டினத்தில்(மாமல்லபுரம்) நெல்லை இடித்து மாவாக்கி ஆண் பன்றிகளுக்கு கொடுத்து கொழுக்க வைத்து அதன் இறைச்சியை சமைத்து உண்டனர்.காவிரிபூம்பட்டினத்து மீனவர் கடல் இறா,வயல ஆமை இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (பட்டினப்பாலை.63-64).கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியையும், விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. (பட்டினப்பாலை- (176-178).

தமிழ் அளவைகள் - 2


தமிழ் அளவைகள் - 1 புதுவை ஞானம் அளவைகள் 1. எண் அளவைகள் 2. அற்புத யெண்வாய் தன்னில் தத்தம றாத தெல்லாங் கற்புடை மானே கேளு கற்பமே நாற்பத் தேழு புற்புதம் நாற்பத் தொன்று புணரியே முப்பத் தேழு பற்பமுப் பத்திமூன்று பனிச்சங்க முப்பத் தொன்றே. 3. தாயிருபத் தொன்பது தந்தை யிருப்பத்தேழு தனிவருக்கம் இருபத்தி மூன்று பாயல் முத்தொகை பத்தொன்பது பதினேழு பந்தம் பதினஞ்சு சின்னமாய் குணமும் மூன்று சிந்தைபதி மூன்று கும்மி பதினொண்று பாகம் நாலு அணிவெளிம்மி இருபத் தொன்றே (இள்) கற்பம் 47 கொண்டது பற்பதம்; புற்பதம் 41 கொண்டது புணரி, புணரி 37 கொண்டது பற்பம், பற்பம் 33 கொண்டது பனிச்சங்கம்; பனிச்சங்கம் 31 கொண்டது தாய்; தாய் 29 கொண்டது தந்தை; தந்தை 27 கொண்டது தனி வருக்கம்; தனி வருக்கம் 23 கொண்டது முத்தொகை; முத்தொகை 19 கொண்டது பந்தம்; பந்தம் 17 கொண்டது சிந்தம்; சின்னம் 15 கொண்டது குணம்; குணம் 3 கொண்டது சிந்தை; சிந்தை 13 கொண்டது கும்மி; கும்மி 11 கொண்டது இம்மி; இம்மி 21 கொண்டது அணு; 4. எண்ணுக்கும் பொன்னுக்கும் முடியும் அதிநுட்பம் சின்ன மென்றுபே ராம். 5. ஆனாதி சாரம் நாற்பத் தஞ்சதே சார மாகும் தானாதி சாரம் நாலோ டரையதிற் அற்ப மாகும் ஊனமில் அதிலற் பந்தான் ஓங்கியவை ஐந்தே யாகில் மானிகர் கண்ணாய் அற்பம் எனநீயும் மதித்துச்சொல்லே. 6. சொல்லிய மஞ்சு துய்யதற் பனரத னக்கு வல்லதிங் கறுமூன் றென்று வகுத்ததற் பரைய தாகும் நல்லதற் பரையி ரேழு நாடதி நுட்ப மாகும் மெல்லதி நுட்பந் தோறும் ஏழரை நுட்பந் தானே. 7. நுட்பமூன் றரையே யிம்மி நொய்யபத் தரையே கொண்டால் முட்கரை பெறுத மூன்றுங் கீழின்முந் திரிகை யாகும். வடக்குமுந் திரிகை முன்னூற் றிருபதே விரும்புங் காலை புட்செரி குழலாய் ரண்டாய் கீழின்முந் திரிகை யாமே. 8. ஆமென விரண்டாங் கீழோர் ஆணிமுந் திரிகை தானும் மாமரை குழலாய் முன்னூற் றிருபதே விளங்குங் காலே பாமன்றல் தெரியு மிக்கோர் பகர்வரே முதற்கீ ழன்றி தேமன்றல் தானு முன்னூற் றிருபதேமுந் திரிகை தானே. (இ.ள்) அதிசாரம் 45 கொண்டது சாரம்; சாரம் 4 1/2 கொண்டது அதியற்பம்; அதியற்பம் 25 கொண்டது அற்பம்; அற்பம் 5 கொண்டது அதிதற்பரை; அதிதற்பரை 22 கொண்டது தற்பரை; தற்பரை 14 கொண்டது அதிநுட்பம்; அதிநுட்பம் 7 1/2 கொண்டது மூன்றாங் கீழ் முந்திரிகை; மூன்றாங் கீழ் முந்திரிகை 320 கொண்டது இரண்டாம் கீழ் முந்திரிகை; இரண்டாம் கீழ் முந்திரிகை 320 கொண்டது முதலாம் கீழ் முந்திரிகை ; முதற் கீழ் முந்திரிகை 320 கொண்டது முந்திரிகை என்றவாறு. 9. சின்னம்பத் தேமுக்கால் செப்புந் தொகை நுண்மை நுண்மையில் மூன்று நுவல் இம்மி - இம்மி இருபத் தரையொன்றாங் கீழாக வேதான் வருமுந் திரியெனவே வாட்டு. (எ.து) சின்னம் 10 1/2 கொண்டது நுண்மை முந்திரி; நுண்மை முந்திரி 3 கொண்டது இம்மி முந்திரி; இம்மி முந்திரி 10 1/2 கொண்டது கீழ்முந்திரி 320 கொண்டது மேல் முந்திரி; மேல் முந்திரி 320 கொண்டது ஒன்றெனப்படும். இதுவுமது ---- 10. இம்மிதான் ஈரைந் தரையெனவே ' வைத்திதனைச் செம்மைதருங் கீழ்முந் திரிசெய்து - பின்னவை மூன்றுபடி பத்திரட்டி முந்திரியே ஒன்றென்றார் ஆன்ற அற்வி னவர் 2. இதுவுமது ---- 11. இம்மி பத்தரை யென்னா ரிழிவுரைக்க செம்மையின் கீழ் முந்திரிகை செப்புங்கால் - நன்மையுடன் கேளீர் ' சிறுதுகையைக் கேட்டறியச் சொல்லுகிறேன் ஆளீர் ' கணக்கை அறிந்து. இதுவுமது ---- 12. இம்மி பத்தரை கீழ்முந் திரியது யெண்ணாற்பது தும்மிய மேல்முந் திரிகையு முன்னூற் றிருபத்தொன்று அம்மிய பத்துட னாறாயிர மும்பதி னாயிரமும் விம்மிய லஷமும் பத்தெலை லஷமும் நூறெனுமே. இதுவுமது ---- 13. ஒன்றுவ திம்மி ஒருபத் தரைகொண்டால் நின்றாடும் கீழ்முந் திரிகையாம் - மொன்றாய்க்கீழ் முந்திரிகை முன்னூற் றிருபதே கூடினால் வந்துமே முந்திரையென் றோது. ஒன்று வரும் வழி ---- 14. ஒன்றே வரும்வா றுரைப்பதற்கு முந்திரிகை நன்றே அரைக்காணி நல்காணி - குன்றாது அரைமாவாய் மாவாகிக் கையொரு மாக்காலால் திருமாதே நாலொன்றாய்ச் செப்பு. (இ.ள்) முந்திரி 2 கொண்டது அரைக்காணி ; அரைக்காணி கொண்டது காணி; காணி 4 கொண்டது கால்; கால் 4 கொண்டது ஒன்று எனப் பெறும். இதுவுமது ---- 15. முந்திரிய ரைக்காணி முன்னிரண்டு பின்னிரண்டாய் வந்ததோர் காணிநான் மாவாக்கி - ஒன்றோடு நாலாக்கி காலாக்கி நண்ணுதலாய் காலதனை நாலாக்கி ஒன்றாக நாட்டு. (இ.ள்) முந்திரி 2 கொண்டது அரைக்காணி; அரைக்காணி கொண்டது காணி 4 கொண்டது கால்; கால் 4 கொண்டது ஒன்று எனப்பெறும். இப்படிப்பட்ட பின்ன அளவைகளையும் இதற்கான வாய்ப்பாடுகளையும் தமிழர்கள் எதற்காகப் பயன்படுத்தினார்கள் ? இது பற்றி எல்லாம் தெரிந்த தமிழறிஞர்கள் யாராவது ஆய்வு செய்வதும் ஏற்கெனவே ஆய்வு நூல்கள் வந்திருந்தால் அவற்றைப் பற்றிய தகவல் தெரிவிப்பதும் பெரிய உதவியாக இருக்கும். ஆ. முழு எண்களின் இலக்கணம் காணல் ---- 16. கோடி யுடன்சங்கம் விந்தம்சூழ் பதுமம் நாடு சமுத்திரத்தின் மேல்வெள்ளம் - நீடு பிரளயமா மென்றவற்றின் பேர்தோறும் பெற்ற புரளயமா மென்றே புகல். 17. மாகழுந் தன்பனையு மற்புதழு முற்பலமும் ஏக அனந்தமுடன் வேணுவுமாந்1 - தேகாய் சலஞ்சலமு மந்தாரைய்ந் 2 தாரைகையு மேரு வலம்புரியின் பின்புகல்வோர் மாட்டு 3 இதுவுமது ---- 18. நற்கோடி நற்சங்கு நல்விந்தம் நல்பதுமம் மற்கோ சமுத்திரம் வெள்ளம் பிரளையம் சஞ்சலம் வலம்புரி கள்ள விழங்கு அமுர்தங் காண அகற்பணி கற்பம் கூட்டிய தண்பனை யுற்பதாய் அனந்தம் கறவைக் கறிவோர் அறிந்தவை யானவர் இன்னம் பெறுவர் அறிந்து. (இ.ள்) நூறுநூறாயிரம் கொண்டது கோடி; கோடி நூறுநூறாயிரம் கொண்டது பகாகோடி; மகாகோடி நூறுநூறாயிரம் கொண்டது சங்கம்; சங்கம் நூறுநூறாயிரம் கொண்டது மகா சங்கம்; மகாசங்கம் நூறுநூறாயிரம் கொண்டது விந்தம் விந்தம் நூறுநூறாயிரம் கொண்டது மகாவிந்தம்; மகாவிந்தம் நூறுநூறாயிரம் கொண்டது பதுமம்; பதுமம் நூறுநூறாயிரம் கொண்டது மகாபதுமம்; மகாபதுமம் நூறுநூறாயிரம் கொண்டது குமிர்தம்; குமிர்தம் நூறுநூறாயிரம் கொண்டது மகாகுமிர்தம் ; மகாகுமிர்தம் நூறுநூறாயிரம் கொண்டது சமுத்திரம்; சமுத்திரம் நூறுநூறாயிரம் கொண்டது மகாசமுத்திரம்; மகாசமுத்திரம் நூறுநூறாயிரம் கொண்டது வெள்ளம்; வெள்ளம் நூறுநூறாயிரம் கொண்டது மகாவெள்ளம்; மகாவெள்ளம் நூறுநூறாயிரம் கொண்டது பிரளயம்; பிரளயம் நூறுநூறாயிரம் கொண்டது மகாபிரளயம்; மகாபிரளயம் நூறுநூறாயிரம் கொண்டது சஞ்சல்ம்; சஞ்சலம் நூறுநூறாயிரம் கொண்டது மகாசஞ்சம்; மகாசஞ்சலம் நூறுநூறாயிரம் கொண்டது வலம்புரி; வலம்புரி நூறுநூறாயிரம் கொண்டது மகாவலம்புரி; மகாவலம்புரி நூறுநூறாயிரம் கொண்டது தண்பனை; தண்பனை நூறுநூறாயிரம் கொண்டது மகாதண்பனை; மகாதண்பனை நூறுநூறாயிரம் கொண்டது கனவளை; கனவளை நூறுநூறாயிரம் கொண்டது மகாகனவளை; மகாகனவளை நூறுநூறாயிரம் கொண்டது அற்புதம்; அற்புதம் நூறுநூறாயிரம் கொண்டது மகாஅற்புதம்; மகாஅற்புதம் நூறுநூறாயிரம் கொண்டது உற்பலம்; உற்பலம் நூறுநூறாயிரம் கொண்டது நூறுநூறாயிரம் கொண்டது அனந்தம். அதற்குமேல் கணக்கு இல்லையெனப்படும். அச்சுநூல் மேற்கூறப்பட்டுள்ள எண்களில் இருந்து மாறுபட்ட பேரெண்கள் கூறப்பட்டுள்ளன. மகாவிந்தத்தையடுத்து சமுத்திரம், மகாசமுத்திரம், வெள்ளம், மகாவெள்ளம், பிரளயம், மகா பிரளயம், யோசனை, மகா யோசனை, கற்பம், மகாகற்பம், விகற்பம், மகா விகற்பம், மாகம், மகா மாகம், தன்பனை, மகா தன்பனை, அற்புதம், மகா அற்புதம், உற்பலம், மகா உற்பலம், வேணு, மகா வேணு, சஞ்சலம், மகா சஞ்சலம், மந்தாரை, மகா மந்தாரை, மேரு , மகாமேரு, வலம்புரி, மகாவலம்புரி, என்று வரிசைமுறை அமைந்துள்ளன. 19. கோடியும் சங்கமும் விந்தம் பதுமம் கூங்கடலும் நாடிய வெள்ளம் பிரளையம் தண்பனை நாயகத்தனை தேடிய யேர்தரும் மாதவ ராதித் திருவருளால் நீடிய லக்க முரைத்தது மாமிது நேரிழையே இ. தொகை எண் அறிதல் ---- 20. கரிபத்து தேர்மூன்று காலாளோர் ஆயிரம் பரிநூற தாகும் பதாதி - வருமவை கேள் எண்பத் திருமடங்கு தண்டா மினவனூறும் கொண்டது அக்குரோணி கூறு. அ) ஆனை 3, தேர் 10, காலாள் 1000, குதிரை 100 இவை கொண்டது ஒரு பதாதியென்றும், இவற்றை 82னால் பெருக்கி, பெரிக்கின தொகை ஒரு தண்டென்றும், இவற்றை 100னால் பெருக்கின துகை அக்குரோணி என்றும் சொல்லப்படும். ஆ) ஒரு தண்டு எத்தனையோ வென்னில் தேர் 246, ஆனை 820, குதிரை 8200, காலாள் 820 இப்படியான தண்டு 100 கொண்டது அக்குரோணி இந்த அக்குரோணிக்கு தேர் 24,600, குதிரை 82,000, ஆனை 8200, காலாள் 82,00,000 இவை கொண்டது அக்குரோணி என்று சொல்லப்படும். 21. ஒரு படைக் காலாள் ஒரு லட்சம் லடசம் கருதடைக் காயோ ரலகாகுந் திருகிலாப் பாருலகிற் பட்டிப் படிமுறுக்குள் மூவேழு சேருமது கோடியெனச் செப்பு. 1,00,000 காலாள் ஒரு லட்சமென்றும் 1,00,000 பாக்கு ஒரு அலகென்றும், 21 பட்டுப்பட்டாரம் ஒரு கோடியென்றும் சொல்லப்படும். 22. அத்தி யோரைந்து அணியாகும் அடல்பரி மொத்த மெண்ப தொருமொத்தம் - அத்தகையென் ஆடெருமை யாமென்ற வருகோ ரெண்பதாங் கூடிவத் திறமென்று கூறு. ஆனை 5 கொண்டது 1 அணியென்றும், குதிரை 80 கொண்டது 1 மொத்தமென்றும், ஆடு, எருமை, பசு உள்ளிட்ட வகை 80 கொண்டது ஒரு திறம் என்றும் சொல்லப்படும். திறம் கூடினது நிறை. ஆணை அணி கூடினது கடகம். குதிரை மொத்தம் கூடினது 1 பாண்டு. அச்சு வெல்லம் 6000 கொண்டது பொதி என்றும், கொட்டை பாக்கு 10,000 கொண்டது அவணம் என்றும், தேங்காய் 310 கொண்டது சட்டை என்றும் சொல்லப்படும். கொட்டைப்பாக்கு 20,000 கொண்டது அம்மணம் எனப்பலபல அளவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன இப்படிப்பட்ட கணக்கிடுவது எப்படி ? என்பது பற்றி க்ளாடியா ஜஸ்லாவ்ஸ்கி என்ற அறிஞர் சொல்கிறார் : 'ஒரு மக்கள் திரள் (இனம்) எண்ணிக்கை மற்றும் அளவுகள் பற்றி எந்த அளவு அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தால் - அவர்களது நாகரிகத்தின் வளர்ச்சியைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களது பொருளாதாரம், நிலையான பயிர்த்தொழிலைச் சார்ந்து இருந்ததா ? அல்லது மந்தைகளைச் சார்ந்து இருந்ததா ? அல்லது அவர்கள் மந்தைகளை மேய்த்துக்கொண்டு அடிக்கடி இடம் பெயரும் கூட்டமாக இருந்தார்களா ? என்பதும் தெரிய வரும். அந்த சமுதாயம் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் தாமே உற்பத்தி செய்து தங்களுக்குள்ளே விநியோகித்துக் (பரிமாறி -பண்டமாற்று செய்து) கொண்டார்களா ? அப்படியானால் வெகு சில வார்த்தைகள் மட்டுமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்ததா ? அல்லது மிகவும், நுட்பமாகவும் உயர் அளவிலும் பரந்த அளவில் பிணைக்கப்பட்ட குடிமக்களாக வாழ்ந்து தங்கள் பொருளாதாரத்தை வளர்க்கவும் வாணிபம் செய்யவும் ஏராளமான வார்த்தைகள்ப் பயன்படுத்தினார்களா ? அந்த இனக்குழுவின் எண் வரிசையில் அயல்மொழிப் பெயர்கள் கலந்தனவா ? அப்படியானால் அதன் முக்கியத்துவமும் காரணமும் என்ன ? அவர்கள் அன்னிய மக்களோடு நட்பு முறையில் உறவுகொண்டு இருந்தனரா ? வாணிபம் செய்தனரா ? அல்லது அன்னிய மக்கள் மீது படையெடுத்து வெற்றிகண்டு ஆக்ரமிப்பு செய்தார்களா ? எண்ணுவதற்கு அவர்கள் எத்தகைய சைகைகளையும் சாதனங்களையும் பயன்படுத்தினார்கள் ? பண்டமாற்று அல்லது செலவாணி முறை எவ்வாறு இருந்தது ? எத்தைகைய எடைகளையும் அளவைகளையும் பயன்படுத்தினர் ? அவர்கள் பயன்ப டுத்திய எண்களுக்கும் பின்பற்றிய சமயத்துக்கும் (மதத்துக்கும்) ஏதாவது முக்கிய தொடர்புகள் இருந்தனவா ? ' இந்த மேற்கோளும் தமிழர்கள் பயன்படுத்திய 'எண்வடிவம் ' அதன் பன்னாட்டுத் தொடர்பு ஏற்படுத்திய மாற்றங்கள், தமிழர்கள் கையாண்ட அளவைகள் பற்றியெல்லாம் 'ஆறாம்திணை ' என்ற இணையதளத்தில் விரிவாக விளக்கப்பட்டன. ஆனால் தமிழர்கள் பயன்படுத்திய நுண்ணிய அளவைகள் குறிப்பாக பின்ன அளவைகள் பற்றிய ஆய்வுகள் தொடரப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம் (காண்க : ஆறாம்திணை 5.5.2000) இதன் முக்கியத்துவமும் ஆழ அகலங்களும் அப்போது தெள்ளத் தெளிவாக விளங்கவில்லை தமிழர்கள் பயன்படுத்திய பின்ன அளவுகளில் 'அணு ' என்கிற ஒரு அலகு (Unit) வருகிறது அந்த அலகு மேலும் மேலும் சிறியனவாக பகுக்கப்படுகின்றன. ஆனால் 'அணு ' என்பது மேலும் பிரிக்கமுடியாத சிறுமை என்பதாக அகராதி சொல்கிறது என்றால் அணுவைப் பகுக்கும் அலகுகள் ஏன் புழக்கத்தில் இருந்தன ? அப்படி புழக்கத்தில் இல்லாத வெற்று யூகமான ( Speculative ) எண்களா ? ஆம் வெறுமனே இவை யூகக்கணக்குகள்தான் என்றனர் பல நண்பர்கள். ஓராண்டுகால சோர்வடையாத தேடல் இவை வெற்று யூகங்கள் அல்ல உண்மையிலேயே தமிழர்களுக்கு அணு அறிவு இருந்திருக்கிறது. தன்னையும் தன்னைச் சூழவுள்ள அகிலாண்டத்தையும் ஆய்வு செய்திருக்கிறான் தமிழன். அணுவாத சைவம் என்று சைவ மதத்தில் ஒரு உட்பிரிவு இருந்ததாக 'அபிதான சிந்தாமணி ' என்ற நூல் குறிப்பிடுகிறது. ஆனால் தமிழ்ப் பெரியார்கள் யாரைக் கேட்டாலும் (அதாவது எனக்குத் தெரிந்தவர்களை மட்டும்தான் நான் கேட்க முடியும். எனக்குத் தெரியாத அறிமுகம் இல்லாத யாருக்காவது தெரிந்திருக்கலாம்) தங்களுக்கும் தெரியவில்லை என்ற விடை தான் கிடைத்தது. இப்போது தமிழர்கள் பயன்படுத்திய பின்னங்கள் பற்றி பதிவு செய்து விடுவது நல்லது. ஏற்கெனவே இவை ஆறாம்திணையில் திண்ணைப்பள்ளிக்கூடம் பகுதி 8,9 யில் எடுத்துக்க்காட்டப்பட்டுள்ளன. 1 ஒன்று 1/2 அரை 1/4 கால் 1/8 அரைக்கால் 1/16 வீசம் 1/32 அரை வீசம் 1/320 முந்திரி இவை அநேகமாக அனைவருக்கும் கூட தெரிந்திருக்கலாம் ஆனால் 1/320 க்கும் கீழான சிறிய பின்னங்களைப் பொதுவாக கீழ்முந்திரி எனவும் கீழ்வாயிலக்கம் எனவும் சொல்வதுண்டு. கீழ்முந்திரி 1/102400 இம்மி 1/2150400 மும்மி 1/23654400 அணு 1/165580800 குணம் 1/1490227200 பந்தம் 1/7451136000 பாகம் 1/44706816000 விந்தம் 1/312947772000 நாகவிந்தம் 1/5320111104000 சிந்தை 1/7448155,5456000 கதிர்முனை 1/1489631109120000 குரள்வளைப்பிடி 1/5958524436480000 வெள்ளம் 1/357511466188,80000 நுண்மணல் 1/3575114,6618880,0000 தேர்த்துகள் 1/23238245,3022720,0000 'அணு ' என்ற வார்த்தைக்கு ஒரு சொல்லுக்கு நான்கு பரிமாணங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. 1) ஒன்று அது கணிதத்தில் ஒரு அகலாக (Unit) பயன்படுத்தப்படுகிறது. 2) அணு என்பது சிவம் என ஆன்மீகத்தில் பயன்படுத்தப்படுகிறது. அணுவாதச்சைவம் என ஒரு உட்பிரிவு சைவ சமயத்தில் இருக்கிறது. 3) அணு என்பது சிறுமை பிரிக்க இயலாதது என்ற பொருளில் இயற்பியலில் வெளிப்படுகிறது. 4) கணிதம் ஆன்மீகம் இயற்பியல் இவை அனைத்தும் அணு பற்றிப் பேசுவதால் நமது கலாச்சார வரலாற்று தடத்தில் ஒரு மைல் கல்லாகிறது. எனவே கணிதம், இயற்பியல், ஆன்மிகம், வரலாறு என நான்கு துறை சார்ந்த பேராசிரியர்களும் இந்த அணு என்ற கோட்பாடு பற்றி ஆய்வு செய்வது ஒரு வரலாற்றுக் கடமையாகிறது என்பதாகத் தோற்றமளிக்கிறது.

அறுபத்துநான்கு கலை தமிழ் விளக்கம்


அறுபத்துநான்கு கலை தமிழ் விளக்கம் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் அந்த அறுபத்துநாலுகலைகளின் பட்டியலை மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of the Tamil Language) Vol. 1 , Part - 1 பக்கம் 545-548 வரையிலும் கண்டுள்ளபடி இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. `காமசூத்திரம்' என்னும் பழைய சமற்கிருத நூலிற் சொல்லப்பட்டுள்ள அறுபத்துநான்கு கலைகளும் அறிவியல்களும். கலை தமிழ் விளக்கம்:- 1. அக்கர இலக்கணம் எழுத்திலக்கணம் 2. லிகிதம் (இலிகிதம்) எழுத்தாற்றல் 3. கணிதம் கணிதவியல் 4. வேதம் மறை நூல் 5. புராணம் தொன்மம் 6. வியாகரணம் இலக்கணவியல் 7. நீதி சாஸ்திரம் நய நூல் 8. சோதிடம் கணியக் கலை 9. தரும சாஸ்திரம் அறத்து பால் 10. யோகம் ஓகக் கலை 11. மந்திரம் மந்திரக் கலை 12. சகுனம் நிமித்தக் கலை 13. சிற்பம் கம்மியக் கலை 14. வைத்தியம் மருத்துவக் கலை 15. உருவ சாஸ்திரம் உருப்பமைவு 16. இதிகாசம் மறவனப்பு 17. காவியம் வனப்பு 18. அலங்காரம் அணி இயல் 19. மதுர பாடனம் இனிது மொழிதல் 20. நாடகம் நாடகக் கலை 21. நிருத்தம் ஆடற் கலை 22. சத்த பிரமம் ஒலிநுட்ப அறிவு 23. வீணை யாழ் இயல் 24. வேனு குழலிசை 25. மிருதங்கம் மத்தள நூல் 26. தாளம் தாள இயல் 27. அகத்திர பரீட்சை வில்லாற்றல் 28. கனக பரீட்சை பொன் நோட்டம் 29. இரத பரீட்சை தேர் பயிற்சி 30. கஜ பரீட்சை யானையேற்றம் 31. அசுவ பரீட்சை குதிரையேற்றம் 32. இரத்தின பரீட்சை மணி நோட்டம் 33. பூ பரீட்சை மண்ணியல் 34. சங்கிராம இலக்கணம் போர்ப் பயிற்சி 35. மல்யுத்தம் கைகலப்பு 36. ஆகர்ஷணம் கவிர்ச்சியல் 37. உச்சாடணம் ஓட்டுகை 38. வித்து வேஷணம் நட்பு பிரிக்கை 39. மதன சாஸ்திரம் மயக்குக் கலை 40. மோகனம் புணருங் கலை (காம சாத்திரம்) 41. வசீகரணம் வசியக் கலை 42. இரசவாதம் இதளியக் கலை 43. காந்தர்வ விவாதம் இன்னிசைப் பயிற்சி 44. பைபீல வாதம் பிறவுயிர் மொழி 45. தாது வாதம் நாடிப் பயிற்சி 46. கெளுத்துக வாதம் மகிழுறுத்தம் 47. காருடம் கலுழம் 48. நட்டம் இழப்பறிகை 49. முட்டி மறைத்ததையறிதல் 50. ஆகாய பிரவேசம் வான்புகுதல் 51. ஆகாய கமனம் வான் செல்கை 52. பரகாயப் பிரவேசம் கூடுவிட்டு கூடுபாய்தல் 53. அதிரிச்யம் தன்னுறு கரத்தல் 54. இந்திர ஜாலம் மாயம் 55. மகேந்திர ஜாலம் பெருமாயம் 56. அக்னி ஸ்தம்பம் அழற் கட்டு 57. ஜல ஸ்தம்பம் நீர்க் கட்டு 58. வாயு ஸ்தம்பம் வளிக் கட்டு 59. திட்டி ஸ்தம்பம் கண் கட்டு 60. வாக்கு ஸ்தம்பம் நாவுக் கட்டு 61. சுக்கில ஸ்தம்பம் விந்துக் கட்டு 62. கன்ன ஸ்தம்பம் புதையற் கட்டு 63. கட்க ஸ்தம்பம் வாட் கட்டு 64. அவத்தை பிரயோகம் சூனியம்

தமிழ் எண்கள் மற்றும் தமிழ் அளவைகள்


தமிழ் எண்கள் மற்றும் தமிழ் அளவைகள் தமிழ் எண்கள் : ௧ = 1 ௨ = 2 ௩ = 3 ௪ = 4 ௫ = 5 ௬ = 6 ௭ = 7 ௮ = 8 ௯ = 9 ௰ = 10 தமிழ் அளவைகள் : (1) ஒன்று என்னும் முழுமையை இரண்டு இரண்டாகப் பகுத்துக்கொண்டு செல்லும் முறைமை. இதில்அரை – ½கால் – ¼அரைக்கால் – 1/8வீசம் (அல்லது) மாகாணி – 1/16அரைவீசம் – 1/32கால்வீசம் – 1/64அரைக்கால்வீசம் – 1/128எனப் பின்னத்தின் பெயரும் குறியீடும் அமையும். (2) ஒன்று என்னும் முழுமையை முதலில் ஐந்தாகப் பகுத்து அதன் பின்னத்தை இரண்டிரண்டாகப் பகுத்துக்கொண்டு சொல்லும் முறைமை. இதில்நான்மா - 1/5 இருமா - 1/10 ஒருமா – 1/20 அரைமா – 1/40 காணி – 1/80 அரைக்காணி – 1/160 முந்திரி – 1/320 எனப் பின்னத்தின் பெயர்கள் அமையும். நிலத்தின் வகைகள் 1. ஆற்றுவைப்பு - ஆற்றின் ஒதுக்கத்தால் சாகுபடியாகும் நிலம் 2. அருக்கக் கொல்லை - ஆற்றோரத்தில் உள்ள நிலம் 3. படுகை - ஆற்றோரத்து நிலம். 4. கரைவழி - ஆற்றோரமான நிலம். 5. காற்புரவு - ஆற்றுப் பாய்ச்சல் நிலம். 6. வெளிவாய்ப் படுகை - ஆறு, குளங்களை அடுத்துப் புறம்பாக உள்ள நிலம். 7. இறைப்புப் பட்டரை - கிணற்றுப் பாய்ச்சலுள்ள நிலம். 8. ஏற்றப்பட்டரை - ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழ்ந்த நிலம். 9. தூர்வை - கிணற்றைச் சேர்ந்த நிலம். 10. ஆயக்கட்டு - ஒரு நீர்நிலையை ஆதாரமாகக் கொண்ட நிலம். 11. நன்செய்நிலம் - நீர்வளம் நிறைந்துள்ள நிலம். 12. புன்செய் நிலம் - வானம் பார்த்த நிலம், கொல்லை நிலம். 13. அளக்கர் திணை - கடலாற் சூழப்பட்ட நிலம். 14. வானம் பார்த்த நிலம் - மழைநீரால சாகுபடி செய்யப்படும் நிலம் 15. எரங்காடு - பருத்தி விளையும் புன்செய் நிலம். 16. நாற்றங்கால் - விதைகளை விதைத்து நாற்று பயிரிடும் நிலம். 17. சாட்டி - அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம், உரமிடப்பட்டிருக்கும் நிலம். 18. குளக்கீர் - குளத்தில் மதகையடுத்துள்ள வயல், குளம் பார்த்த வயல் 19. நகரி - அரசுக்குரிய புறம்போக்கு. 20. பெரும்பேறு - அரசுக்குரிமையான நிலம். 21. சூன் - புறம்போக்கு நிலம். 22. குடிவார நிலம் - குடிகட்குப் பயிரிடும் உரிமையுள்ள நிலம். 23. பள்ளத்தாக்கு - இரண்டு மேடுகட்கு நடுவேயுள்ள நிலம். 24. பள்ளம் - பள்ளத்தில் உள்ள நிலம், தாழ்ந்த நிலம். 25. தில்லியம் - புதிதாகத் திருத்தப்பட்ட விளைபுலம். 26. உறாவரை - பிறர் உள்ளே வராத எல்லையை உடைய நிலம். 27. எடார் - வெளிநிலம். 28. செய்யுள் - விளைநிலம் 29. தொய்யில், செறிப்பு - உழுநிலம். 30. பண்ணை - வயல் 31. செந்திரம் - செய்தல் நிலம். 32. பாசல் - பசிய விளைநிலம் 33. நன்னிலம், நன்செய் - நெல் விளையும் புலம். 34. படப்பு - கொல்லை. 35. துடவை - உழவுக் கொல்லை. 36. விதைப்புனம் - புதுக்கொல்லை. 37. முதை - பழங்கொல்லை. 38. பின்ை - வீட்டுக் கொல்லை 39. திருத்து - நன்செய் நிலம். 40. தாக்கு - நெல் வயல். 41. வற்புலம் - மேட்டு நிலம். 42. தகர், தராய் - மேட்டு நிலம். 43. கருஞ்செய் - நன்செய் நிலம். 44. காங்கவீனம் - தினைவிளையும் நிலம். 45. தினைப்புனம் - தினைவிளையும் நிலம். 46. மலைப்புனம் - தினைவிளையும் நிலம். 47. சேற்றுப்புழி - உழப்பட்ட நிலம். 48. விரைகால் - விதைக்குரிய நிலம். 49. தடி - சிறு வயல். 50. காணியாட்சி - உரிமை நிலம். 51. காடாரம்பம் - நீர்ப்பாசனமில்லாத நிலம். 52. வட்டகை - அடைப்பு நிலம். 53. எகபலி - ஒருபோக நிலம். 54. ஓராண் காணி - ஒருவனுக்கே உரிய நிலம். 55. காணி நிலம் - நூறு குழி அளவுள்ள நிலம். 56. கந்தக விரைப்பாடு - ஐந்து ஏக்கர் அளவுள்ள நிலம். 57. முழுமனை - 60 அடி நீளமும் 40 அடி அகலமும் உள்ள நிலம். 58. அரைக்காணி - நூற்றறுபதில் ஒரு பங்கு.

தமிழர் அளவை முறைகள்


தமிழர் அளவை முறைகள் அளவைக்கருவிகளுள் ஒன்றான உழக்கு பண்டைய தமிழர்களின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலக்கட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று பல ஆய்வாளர்களும் , அறிஞர்களும் கூறுகின்றனர். பூச்சரங்கள் வாங்கும்போது நீட்டலளவான முழம் என்ற அளவினால் பயன்படுத்தும் முறையை இன்றும் வழக்கில் உள்ளதைப் பார்க்கலாம். பண்டைய கட்டடக்கலைகளிலும் முழம் என்ற அளவையே தமிழர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். இதற்குச் சான்றாகப் பல முழக்குச்சிகளை ( ஒன்று அல்லது இரண்டு முழம் நீளம் உள்ள) பயன்படுத்தியதாகத் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளார்கள். ஆகவே தமிழர்களின் நீள அளவை முறைகள் தரப்படுத்தப் பட்டுள்ளதை நாம் தீர்க்கமாகச் சொல்லமுடியும். தமிழ் நாட்டிலும், கேரளத்திலும் பெரும் அளவான கல்வெட்டுக்கள் இன்னும் படிக்கப்படாமலும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமலும், இருப்பதால் தென்னிந்தியாவின் அறிவியலை முழுதாக இன்னும் அறியமுடிவதில்லை.[1] பால், எண்ணெய்களை (நீர்மம்) அளப்பதற்குத் தமிழர்கள் உழக்கு என்ற அளவை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குச் சான்றாக ஓர் உழக்கு, இரு உழக்கு அளவிலான செப்பு, பித்தளை, வெள்ளிப் பாத்திரங்கள் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றும் பயன்படுத்துவதைக் காணலாம். ஆகவே தமிழர்களின் அளவை முறைகள் தனித்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. பின்வரும் பட்டியல், வாய்பாடுகள் பண்டைய தமிழர்கள் உருவாக்கிய அளவை முறைகள் ஆகும். பழந்தமிழர் அளவைகள், பெரும்பாலும் இக்காலத்திலும் உள்ள தமிழர் அளவைகள் ஆகும். அவை எண்ணல் நிறுத்தல் முகத்தல் பெய்தல் நீட்டல் தெறித்தல் சார்த்தல் பொருளடக்கம் 1 எண்ணலளவை 1.1 பேரிலக்கம் 1.1.1 எண் வாய்பாடு 1.2 சிற்றிலக்கம் 1.2.1 மேல்வாயிலக்கம் 1.3 மேல்வாயிலக்கம் குறிப்புகள் 1.3.1 கீழ்வாயிலக்கம் 1.4 எண் கூற்று வாய்ப்பாடு 2 நிறுத்தலளவை 2.1 அளவைகள் 2.2 பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு 2.3 பொன்னளவை 2.3.1 பொன்னிலக்க அலகுகள் 2.4 பொன்நிறுத்தல் வாய்ப்பாடு 3 முகத்தலளவை 3.1 முகத்தலளவை அலகுகள் 3.2 தனி முகத்தலளவைகள் 3.3 பெய்தல் அளவை 3.4 கரண்டி அளவுகள் 3.5 முகத்தல் (நீர்ம) வாய்ப்பாடு 4 நீட்டலளவை 4.1 வழியளவை 4.2 நிலவளவை 5 கால வாய்ப்பாடு / தெறிப்பு அளவை 5.1 சிறுபொழுது 5.2 பெரும்பொழுது 6 சார்த்தல் 7 நாணயம் 7.1 பிற்கால நாணய அளவை 8 காண்க 9 ஆதாரங்கள் 10 மேற்கோள்கள் எண்ணலளவை ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணாகவோ வீசம், அரைக்கால், கால் என்ற இலக்கமாகவோ, அல்லது பதாதி சேனாமுகம், குமுதமெனத் தொகையாகவோ எண்ணிக் கணக்கிடுவது எண்ணல் அளவை ஆகும்.இந்த எண்ணலளவை சிற்றிலக்கம், பேரிலக்கமென இருவகைப்படுகிறது. பேரிலக்கம் ஒன்று, இரண்டு, மூன்று முதலிய முழுவெண்கள் பேரிலக்கம் எனப்படும். Oldtamilcharactersold.jpg 1 - ஒன்று (ஒண்டு) 2 - இரண்டு 3 - மூன்று (மூண்டு) 4 - நான்கு 5 - ஐந்து 6 - ஆறு 7 - ஏழு 8 - எட்டு 9 - ஒன்பது 10 - பத்து 100 - நூறு 1000 - ஆயிரம் எண் வாய்பாடு 10கோடி - 1அற்புதம் 10அற்புதம் - 1நிகற்புதம் 10நிகற்புதம் - 1கும்பம் 10கும்பம் - 1கணம் 10கணம் - 1கற்பம் 10கற்பம் - 1நிகற்பம் 10நிகற்பம் - 1பதுமம் 10பதுமம் - 1சங்கம் 10சங்கம் - 1சமுத்திரம் 10சமுத்திரம் - 1ஆம்பல் 10ஆம்பல் - 1மத்தியம் 10மத்தியம் - 1பரார்த்தம் 10பரார்த்தம் - 1பூரியம் 10பூரியம் - 1 முக்கோடி 10 முக்கோடி - 1 மகாயுகம் சிற்றிலக்கம் அரை கால், அரைக்கால் வீசம்(மாகாணி) முதலிய பின்னவெண்கள் சிற்றிலக்கம் எனப்படும். சிற்றிலக்கத்தில் கீழ்வாயிலக்கமென்றும், மேல்வாயிலக்கமென்றும் இருவகையுண்டு. கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தோடு ஒப்பு நோக்கியே, அரை, கால்,அரைக்கால் முதலியன மேல்வாய்ச் சிற்றிலக்கமெனப்படும். மேல்வாயிலக்கம் மேல்வாயிலக்கம் என்பதில் அடங்கும் அலகுகள் மேலரை(அரை) மேற்கால்(கால்) மேலரைக்கால்(அரைக்கால்) மேல்வீசம்(வீசம்) 3/4 - முக்கால் 1/2 - அரைக் கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒரு மா 3/64 - முக்கால் வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீசம் 1/80 - காணி 3/320 - அரைக்காணி முந்திரி 1/160 - அரைக்காணி 1/320 - முந்திரி மேல்வாய்ச் சிற்றிலகத்தில் அடிமட்ட எண், மேல்முந்திரி /முந்திரி = 1/320 ஆகும். மேல்வாயிலக்கம் குறிப்புகள் மா: பரப்பளவில் மா என்பது ஒரு வேலியில் 1/20 ஒரு நில அளவான காணி அதிற் காற்பங்காயிருந்திருக்கலாம். இவ் வீரளவைப் பெயர்களும் நீட்டலளவையினின்று எண்ணலள வைக்கு எடுத்தாளப் பெற்றதாகத் தெரிகின்றது. மாத்தல் என்பது ஒரு வழக்கற்ற வினை. மாத்தல் அளத்தல். மா+அனம் = மானம் = அளவு, படி (மேலைவடார்க்காட்டு வழக்கு). மா+திரம் = மாத்திரம்-மாத்திரை. காணி காணிக்கப்பட்ட நிலஅளவு. காணித்தல்- மேற்பார்த்தல். வீசம்: பிசு-விசு-விசுக்கு-விசுக்காணி = சிறியது. விசு-வீசம்=சிற்றளவு. மாவும் காணியும் சேர்ந்தது மாகாணி. முந்திரி:முந்திரி என்னும் சொல் ஒரு சிற்றெண்ணையும் ஒரு பழவகையையுங் குறிக்கும். முந்திரிப்பழத்தின் கொட்டை பழத்திற்கு வெளியே முன் துருத்திக்கொண்டிருப்பதால், அப் பழம் அப் பெயர் பெற்றது. முன்+துரி = முந்துரி-முந்திரி-முந்திரிகை. முந்து உருத்தது முந்திரி என்றுமாம். உருத்தல்-தோன்றுதல். முந்திரி என்னும் கீழ்வாயிலக்கப் பெயரும் முந்தித் தோன்றியதென்னும் பொருளதே. கீழ்வாயிலக்கம் கீழரை = 1/640, கீழ்க்கால் = 1/1280 கீழரைக்கால் = 1/2560 கீழ்வீசம் = 1/5120 கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தில் அடிமட்ட எண், கீழ்முந்திரி = 1/102,400 ஆகும். கீழ்வாயிலக்கம் என்பதில் அடங்கும் அலகுகள். கீழ்வாய் இலக்கத்தின் எண்மதிப்பு கீழ்வாய் இலக்கத்தின் பெயர் 1/640 கீழரை 1/640 கீழரை 1/280 கீழ்க்கால் 1/2560 கீழரைக்கால் 1/5120 கீழ் வீசம் 1/102400 கீழ் முந்திரி 1/1075200 இம்மி 1/23654400 மும்மி 1/165580800 அணு 1/1490227200 குணம் 1/7451136000 பந்தம் 1/44706816000 பாகம் 1/312947712000 விந்தம் 1/5320111104000 நாகவிந்தம் 1/74481555456000 சிந்தை 1/489631109120000 கதிர்முனை 1/9585244364800000 குரல்வளைப்படி 1/575114661888000000 வெள்ளம் 1/57511466188800000000 நுண்மணல் 1/2323824530227200000000 தேர்த் துகள் குறிப்பு இம்மி என்பது மிகச் சிறிதான மத்தங்காய்ப் புல்லரிசி. அது எள் தினை என்பனபோல் சிற்றளவைப் பொருளாயிற்று. சிறுமையை உணர்த்தும் இல் என்னுஞ் சொல்லினின்று, இம்மி யென்னும் பெயர் தோன்றியிருக்கலாம்.[2] எண் கூற்று வாய்ப்பாடு 1 இம்மி 11 மும்மி 11 மும்மி 7 அணு 1 அணு 9 குணம் 1 குணம் 5 பந்தம் 1 பந்தம் 6 பாகம் 1 பாகம் 7 விந்தம் 7 விந்தம் 17 நாகவிந்தம் 1 நாகவிந்தம் 60 வெள்ளம் 1 குரல்வளைப்படி 60 வெள்ளம் 1 வெள்ளம் 100 நுண்மணல் நிறுத்தலளவை எடுத்தல் என்பது எடுத்து நிறுத்தல். எடுத்தலளவையில் பொன்னும் மணியும் நிறுக்க ஒன்றும், பிற பொருள்களை நிறுக்க ஒன்றுமாக இருவகையுண்டு. பொன்நிறை யளவைக்குப் பொன்னிலக்கம் என்று பெயர். பொன் ஏராளமா யிருப்பின், அதுவும் பிற பொருள்போல் நிறுக்கப்படும். குன்றிமணி, வராகனெடை, பலம், வீசை, துலாமெனப் படிக்கல் கொண்டு தராசிலிட்டு நிறுப்பது நிறுத்தல் அளவை ஆகும். இந்த எடுத்தலளவை பொன்னளவை,பிற பொருளளவையென இருவகைப்படுகிறது. அரசு முத்திரை இட்ட அளவுக்கல்லானது, குடிஞைக்கல், பாடிக்கல், பண்டாரக்கல் என்னும் பெயர்களுள் ஒன்றாற் குறிக்கப்பட்டது. அதே அளவுக்கல்லானது, நகரங்களில் நகரக்கல் எனப்பட்டது. நிறுத்தல் அளவுக்கான தராசு ஆறு வகைப்படும். மணித்தராசு - இது இரத்தினம் முதலியவற்றை நிறுக்கும் மிகச் சிறிய தராசு பொன் தராசு - தங்கம் போன்றவைகளை நிறுக்கும் சிறு தராசு உலோகத் தராசு - செம்பு, பித்தளை முதலியவற்றை நிறுக்கும் பெருந் தராசு பண்டத் தராசு - பலசரக்குகளை நிறுக்கும் தராசு கட்டைத் தராசு - விறகு அல்லது மூட்டைகளை நிறுக்கும் தராசு. இது இரு புறமும் சதுர மரப்பலகைகளைத் தட்டுக்களாகக் கொண்டிருக்கும். தூக்கு - காய்கறிகளை நிறுக்கும் தராசு. இது மரக்கம்பாலான துலாக் கோலின் ஒரு பக்கத்தில் மட்டும் தொங்கும் கூடைத் தட்டால் ஆனது. அளவைகள் உளுந்து (grain) - 65 மி. கி. குன்றிமணி - 130 மி. கி. மஞ்சாடி - 260 மி.கி. மாசம் - 780 மி.கி. பனவெடை - 488 மி.கி வராகனெடை - 4.2 கி. கழஞ்சு - 5.1 கி. பலம் - 41 கி. (35 கி.) கஃசு அல்லது கைசா - 10.2 கி. தோலா - 12 கி. ரூபாவெடை - 12 கி. அவுன்ஸ் - 30 கி. சேர் - 280 கி. வீசை - 1.4 கி.கி. தூக்கு - 1.7 கி.கி. துலாம் - 3.5 கி.கி. பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு பொன் அதிகமாக இருப்பினும், இந்த அளவையே பின்பற்றப்பட்டது. 32 குன்றிமணி 1 வராகன் 1.067 கிராம் 10 வராகனெடை 1 பலம் 10.67 கிராம் 8 பலம் 1 சேர் 85.33 கிராம் 5 சேர் 1 வீசை 426.67 கிராம் 1000 பலம் 1 கா 10.67 கிலோகிராம் 6 வீசை 1 துலாம் 2.560 கிலோகிராம் 8 வீசை 1 மணங்கு 3.413 கிலோகிராம் 20 மணங்கு 1 கண்டி (பாரம்) 68.2667 கிலோகிராம் பொன்னளவை பொன்னையும்,மணியையும் நிறுக்கப் பயன்படுகிறது. இது 'பொன்னிலக்கம்' எனப்பட்டது. பேரளவான பொன்னை நிறுக்க ஆணிக்கல்லும், மிகப்பேரளவான பொன்னை நிறுக்க, துலாம் கணக்கும் பயன்படுத்தப்பட்டது. பொன்னிலக்க அலகுகள் பொன்னிலக்கம் என்பதன் அலகுகள் 4 நெல்லெடை = 1 குன்றிமணி 2 குன்றிமணி = 1 மஞ்சாடி 2 மஞ்சாடி = 1 பணவெடை வல்லம் 5 பணவெடை = 1 கழஞ்சு 10 வல்லம் = ஒரு கழஞ்சு= 16அவுன்சு 8 பணவெடை = 1 வராகனெடை 4 கழஞ்சு = 1 கஃசு 4 கஃசு = 1 பலம் பொன்நிறுத்தல் வாய்ப்பாடு 1 நெல் (எடை) 8.33 மில்லிகிராம் 4 நெல் 1 குன்றிமணி 33.33 மில்லிகிராம் 2 குன்றிமணி 1 மஞ்சாடி 66.67 மில்லிகிராம் 2 மஞ்சாடி 1 பணம்(பணவெடை)* 133.33 மில்லிகிராம் 8 பணம்(பணவெடை) 1 வராகன் 1.067 கிராம் 5 வராகன் 1 கழஞ்சு 5.33 கிராம் 4 கழஞ்சு 1 கஃசு 10.4 கிராம் 4 கஃசு 1 பலம் 41.6 கிராம் 1.5 கழஞ்சு 8 கிராம் முகத்தலளவை முகத்தளலவைக் கருவிகளுள் ஒன்றான படி அல்லது நாழி பால், மோர், நெய் போன்ற நீரியல் பொருளை உழக்கு படிகளால் மொண்டு எடுத்து அளப்பது முகத்தல் அளவை ஆகும். முகந்து அளக்கப்படும் பொருள்களுள், நெல் பெரும்பான்மையாகவும், சிறந்ததாகவுமிருத்தல் பற்றி, முகத்தலளவை நெல்லிலக்கம் எனப்படும். முகத்தலளவை அலகுகள் 2செவிடு = பிடி 5செவிடு = 1 ஆழாக்கு 2ஆழாக்கு = 1 உழக்கு 2உழக்கு = 1 உரி 2உரி = 1 நாழி 8நாழி = 1 குறுணி(மரக்கால்) 2குறுணி = 1பதக்கு 2பதக்கு = 1தூணி(காடி) 3தூணி = 1 கலம் 400குறுணி = 1 கரிசை (பறை) தனி முகத்தலளவைகள் அரசு முத்திரையிட்ட அளவை நாழியும் மரக்காலும், அரச பண்டாரத்தில் அரசன் பெயரினைத் தாங்கியிருந்தன. (எடுத்துக்காட்டு:சோழாந்தகன் நாழி, அருண்மொழித்தேவன் மரக்கால்) கோயிற் பண்டாரத்தில் தெய்வப்பெயரினைத் தாங்கியிருந்தன. (எடுத்துக்காட்டு:ஆடவல்லான் மரக்கால்,செப்புக்கால் திருச்சிற்றம்பலமுடையான் மரக்கால்) ஒவ்வொரு நாட்டிற்கும், சிறப்பான பெருமுகத்தலளவும் உண்டு. 21மரக்கால் = கோட்டை என பாண்டி நாட்டில் அழைக்கப்பட்டது. 40மரக்கால் = புட்டி என வடசோழநாட்டில் அழைக்கப்பட்டது. பெய்தல் அளவை நெல் முதலியவற்றை படி, மரக்கால்களில் சொரிந்து அளப்பது பெய்தல் அளவை ஆகும். 360 நெல் = 1 செவிடு 5 செவிடு = 1 ஆழாக்கு 2 ஆழாக்கு = 1 உழக்கு 2 உழக்கு = 1 உரி 2 உரி = 1 படி 8 படி = 1 மரக்கால் 2 குறுணி = 1 பதக்கு 2 பதக்கு = 1 தூணி 5 மரக்கால் = 1 பறை 80 பறை = 1 கரிசை 48=96 படி = 1 கலம் 120 படி = 1 பொதி 1 படிக்கு அவரை = 1,800 மிளகு = 12,800 நெல் = 14,400 பயறு = 14,800 அரிசி = 38,000 எள் = 1,15,000 கரண்டி அளவுகள் 1 தேக்கரண்டி - 4 மி.லி 1 குப்பி - 175 தேக்கரண்டி ( 700 மி.லி) 1 தீர்த்தக்கரண்டி - 1.33 மி.லி 1 நெய்க்கரண்டி - தேக்கரண்டி (4.0 மி.லி) 1 உச்சிக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி) 1 மேசைக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி) 1 பாலாடை - 30 மி.லி 1 எண்ணெய்க்கரண்டி - 8 பாலாடை (240 மி.லி) முகத்தல் (நீர்ம) வாய்ப்பாடு 5 செவிடு = 1 ஆழாக்கு 2 ஆழாக்கு = 1 உழக்கு 2 உழக்கு = 1 உரி 2 உரி = 1 படி 8 படி = 1 குறுணி (மரக்கால்) 2 குறுணி = 1 பதக்கு 2 பதக்கு = 1 தூணி நீட்டலளவை விரல், சாண், முழம் என நீளத்தை கை அல்லது கால்களால் அளப்பது நீட்டல் அளவை ஆகும்.நீட்டலளவை வழியளவை, நிலவளவையென இருவகைப் படுகிறது. 10 கோண் = 1 நுண்ணணு 10 நுண்ணணு = 1 அணு 8 அணு = 1 கதிர்த்துகள் 8 கதிர்த்துகள் = 1 துசும்பு 8 துசும்பு = 1 மயிர்நுனி 8 மயிர்நுனி = 1 நுண்மணல் 8 நுண்மணல் = 1 சிறு கடுகு 8 சிறு கடுகு = 1 எள் 8 எள் = 1 நெல் 8 நெல் = 1 விரல் 12 விரல் = 1 சாண் 2 சாண் = 1 முழம் 4 முழம் = 1 பாகம் 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்) 4 காதம் = 1 யோசனை வழியளவை 8 தோரை(நெல்) = 1 விரல் 12 விரல் = 1 சாண் 2 சாண் = 1 முழம் 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம் 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல் 4 குரோசம் = 1 யோசனை 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்) 4840 சதுர கெசம் = 1 ஏக்கர் 436 குழி = 1 ஏக்கர் 5 பர்லாங்கு = 1 கிலோமீட்டர் 8 பர்லாங்கு = 1 மைல் நிலவளவை இது குழிக்கணக்கு எனப்படும். அவை வருமாறு;- 16 சாண் = 1 கோல் 18 கோல் = 1 குழி 100 குழி = 1 மா 240 குழி = 1 பாடகம் 20 மா = 1 வேலி 1 மரக்கால் வேலைபாடு (நெல் நடவுக்கு தேவையான விதைகள்) - 8 சென்ட் 12.5 மரக்கால் வேலைபாடு - 100 சென்ட் - 1 ஏக்கர் 40 மரக்கால் = 1 புட்டி 1 குழி - 100 சதுர அடி 1 மா - 100 குழி (10000 சதுர அடி) 1 காணி - 4 மா (40000 சதுர அடி = 92 சென்ட் = 0.92 ஏக்கர்) - 400 குழி 1 வேலி - 7 காணி (6.43 ஏக்கர் = 2.6 ஹெக்டர்) 1 பர்லாங்கு - 220 கெசம் (660 அடி) 1 நிலம் (ground) - 2400 சதுர அடி - 5.5 சென்ட் - 223 சதுர மீட்டர் குறிப்பு செய் என்ற ஒரு நில அளவு, சங்க காலத்தில் இருந்தது. நிலவரி முறை - நிலவரியை கணிக்க நிலவளவை நடத்தின அதிகாரி உலகளந்தான் எனப்பட்டான். அவன் கையாண்ட அளவுகோல், உலகளந்த கோல் எனப்பட்டது. இம்முறை முதலாம் இராசராசன் காலத்தில் ஒரு முறையும்,முதற் குலோத்துங்கன் காலத்தில் ஒருமுறையும், மூன்றாங்குலோத்துங்கன் காலத்தில் ஒரு முறையும் அளக்கப்பட்டது. இறையிறுக்குங்கோல், குடிதாங்கிக் கோல் எனப்படும் அளவைகள், நாட்டின் எல்லை மாறும் போதெல்லாம் அளக்க பயன்பட்டது. நிலங்கள் மிக நுட்பமாக அளக்கப்பட்டன. எடுத்துக்காட்டு “ ஆக இறையிலி நீங்கு நிலம் முக்காலே இரண்டு மாக்காணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் அரையே இரண்டுமா முக்காணிக் கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரைக் கீழ் நான்கு மாவினால் இறை கட்டின காணிக்கடன்"(சோ.,பக்.58) ” - இதில் குறிக்கப்பட்ட நில அளவு 1/52,428,800,000 வேலி. கால வாய்ப்பாடு / தெறிப்பு அளவை நொடி, நாழிகை, நாளெனக் காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும். அளவை அளவை முறை குறிப்புகள் 1 குழி(குற்றுழி) கார்த்திகை நாள்மீன் ஒரு முறை மின்னும் நேரம் 10 குழி 1 கண்ணிமை கண்ணை இமைக்கும் நேர அளவு 2 கண்ணிமை 1 கைந்நொடி[3] கையை நொடிக்கும் நேர அளவு 2 கைந்நொடி 1 மாத்திரை[3] 2 மாத்திரை 1 குரு[3] 2 குரு 1 உயிர்[3] 6 உயிர் 1 சணிகம்[3] தற்கால 2 நொடி அளவு 12 சணிகம் 1 விநாடி[3] தற்கால 24 நொடி அளவு 60 தற்பரை 1 விநாடி 60 விநாடி 1 நாழிகை(நாடி)[3] தற்கால 24 நிமிட அளவு 2 சணிகம் 1 அணு [சான்று தேவை] 6 கண்ணிமை 1 நொடி(சிற்றுழி) ஒரு நீருள்ள பாத்திரத்தில் மூங்கில் குழலால் ஊதும் பொழுது ஏற்படும் குமிழியானது ஒரு சாண் அளவு உயரும் நேரம் [சான்று தேவை] 2 நொடி 1 வினாடி ஒரு மனிதனின் இதயம் ஒரு முறை துடிக்கும் நேரம் [சான்று தேவை] 5 வினாடி 1 அணு [சான்று தேவை] 6 அணு 1 துளி(நாழிகை வினாடி) [சான்று தேவை] 15 அணு 1 நிமிடம் [சான்று தேவை] 60 அணு 1 கணம் [சான்று தேவை] 6 கணம் 1 நாழிகை [சான்று தேவை] 15 கணம் 1 ஓரை [சான்று தேவை] 2½ நாழிகை 1 ஓரை[4] 60 நிமிடம் தற்கால ஒரு மணிநேரம் 3¾ நாழிகை 1 முகூர்த்தம்[4] 1½ ஓரை 7½ நாழிகை 1 சாமம்[4] 3 ஓரை, 2 முகூர்த்தம் 10 நாழிகை 1 சிறும்பொழுது 4 ஓரை 4 சாமம் 1 பொழுது[4] 30 நாழிகை 2 பொழுது 1 நாள்(திகதி)[4] 60 நாழிகை, 6 சிறும்பொழுது கதிரவன் உதிக்கும் நேரம் நாளின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது தற்கால 24 மணிநேர அளவு(ஒரு நாள்) 7 நாள் 1 கிழமை(வாரம்)[4] கதிரவன் உதிக்கும் நேரத்தின்(ஒரு நாளின் தொடக்கம்) ஓரை(இராசி) ஞாயிறு ஓரை வரும் நாள்(ஞாயிற்றுக்கிழமை) வாரத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது தற்கால ஒரு வாரம் 15 நாள் 1 அழுவம்(பக்கம்)[4] 30 நாள் 1 திங்கள்(மாதம்)[4] கதிரவன், ஒரு சூரிய மாதத்தின் ஓரைக்குள்(இராசி) நுழையும் நேரம் அம்மாதத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது தற்கால ஒரு மாதம் 48 நாள் 1 மண்டலம் 2 திங்கள் 1 பெரும்பொழுது 60 நாள் 6 திங்கள் 1 அயனம்[4] 2 அயனம் 1 ஆண்டு(வருடம்)[4] 6 பெரும்பொழுது கதிரவன், சூரிய மாதங்களின்(இராசிச் சக்கரத்தின்) முதல் மாதத்தில்(மேழ ஓரையில்(இராசி)) நுழையும் நாள் ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இந்நாள், சந்திர மாதத்தில் சித்திரை முதல் நாள் ஆகும். தற்கால ஒரு ஆண்டு(365 நாள், 15 நாழிகை, 31 விநாடி, 15 தற்பரை) 64(82) ஆண்டு 1 வட்டம் 4096(84) ஆண்டு 1 ஊழி - உகம்(யுகம்) 17,28,000(8x2,16,000) ஆண்டு கிரேதாயுகம்[5] 12,96,000(6x2,16,000) ஆண்டு திரேதாயுகம்[5] 8,64,000(4x2,16,000) ஆண்டு துவாபரயுகம்[5] 4,32,000(2x2,16,000) ஆண்டு கலியுகம்[5] 4 உகங்கள்(43,20,000 ஆண்டு) 1 சதுர்யுகம்(மகாயுகம்)[6] 2000 சதுர்யுகம் 1 நான்முகன் பேராயுள்[6] 100 நான்முகன் பேராயுள் 1 ஆதிநான்முகன் யுகம்[6] சிறுபொழுது காலை - முதல் சிறுபொழுது - 1 சாமம் முதல் 4 சாமம் வரை ( 6 முதல் 10 மணி வரை) நண்பகல் - இரண்டாம் சிறுபொழுது - 5 சாமம் முதல் 8 சாமம் வரை (10 முதல் 2 மணி வரை) எற்பாடு - மூன்றாம் சிறுபொழுது - 9 சாமம் முதல் 12 சாமம் வரை (2 முதல் 6 மணி வரை) மாலை - நான்காம் சிறுபொழுது - 13 சாமம் முதல் 16 சாமம் வரை (6 முதல் 10 மணி வரை) யாமம் - ஐந்தாம் சிறுபொழுது - 17 சாமம் முதல் 20 சாமம் வரை (10 முதல் 2 மணி வரை) வைகறை - ஆறாம் சிறுபொழுது - 21 சாமம் முதல் 24 சாமம் வரை (2 முதல் 6 மணி வரை) பெரும்பொழுது கார் - ஆவணி, புரட்டாசி கூதிர் - ஐப்பசி, கார்த்திகை முன்பனி - மார்கழி, தை பின்பனி - மாசி, பங்குனி இளவேனில் - சித்திரை, வைகாசி முதுவேனில் - ஆனி, ஆடி சார்த்தல் சுரம், ஒலி, நிறம், உரு முதலியவற்றைக் கூறி “இப்படி”, “அதைப்போல” என்று ஒப்பிட்டு அளப்பது சார்த்தல் அளவை ஆகும். நாணயம் 1 பல் - 0.9 உளுந்து (கிரைன்) 8 பல் - 1 செங்காணி (செப்பு) - 7.2 உளுந்து (கிரைன்) 0.25 செங்காணி - 1 கால் காணி - 1.8 உளுந்து (கிரைன்) 64 பல் - 1 காணப்பொன் (காசுப்பணம் (பொன்)) - 57.6 உளுந்து (கிரைன்) 1 இரோமானிய தினாரியம் 2 காணப்பொன்னுக்கும், 1 செங்காணிக்கு கொடுத்து வர்த்தகம் செய்யப்பட்டது - 124 உளுந்து (கிரைன்) 12 பை - 1 அணா 16 அணா - 1 ரூபாய் பிற்கால நாணய அளவை 1 அணா - 3 துட்டு 1/4 அணா - 3/4 துட்டு 4 அணா - 25 பைசா 8 அணா - 50 பைசா பணம் - வெள்ளிக்காசு துட்டு - செப்புக்காசு காண்க தொல்காப்பியம் சுட்டும் அளவைப்பெயர்கள் ஆதாரங்கள் தேவநேய பாவாணரின் படைப்புகளிலிருந்து . அவரது படைப்புகளை இங்கு காணலாம்.இக்கட்டுரை தேவநேயம்-1 என்பதிலிருந்து எடுத்தாளப்படுகிறது. முனைவர் தமிழப்பன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் எனும் நூலில் அட்டவணைப் பக்கம் 18 முதல் 21 வரையுள்ள சா.கணேசன் எழுதிய தமிழகத்து அளவை முறை. சித்தமருத்துவத்தில் பயனாகும் அளவைகள் மேற்கோள்கள் Indian Institute Of Science, Landmarks of Science in Early India - Michael Danino http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=194&pno=148 நாழிகை அறிதல்(17), கணக்கதிகாரம், கொறுக்கையூர் காரிநாயனார் சாமம், நாள் முதலியன அறிதல்(18), கணக்கதிகாரம், கொறுக்கையூர் காரிநாயனார் உகங்கட்கு ஆண்டு அறிதல்(20), கணக்கதிகாரம், கொறுக்கையூர் காரிநாயனார் தேவகாலம் அறிதல்(21), கணக்கதிகாரம், கொறுக்கையூர் காரிநாயனார் தமிழ் அளவைகள் பகுப்புகள்: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் அளவை சங்க இலக்கியம் தமிழர் அளவியல்

வெள்ளி, 23 ஜனவரி, 2015

அனைவரும் வருக! தமிழ் உணர்வு பெறுக!


எங்கள் கல்லூரியில் கற்பக விநாயகா மேலாண்மை நிறுவனத்தில் நாங்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்ப் பண்பாட்டு விழா கொண்டாடவுள்ளோம். அனைவரும் வருக! தமிழ் உணர்வு பெறுக!

செவ்வாய், 13 ஜனவரி, 2015

பெண்களை போராட்டக் களத்தில் நிற்க வைத்த நாவல்


கீழுள்ள மக்களுக்கு விடுதலைப் பற்றிய உணர்வையும், விடுதலையும் அளிப்பதே ஆகச் சிறந்த பணியாகும். அப்படி பாட்டாளிகளாய் சுற்றித் திரியும் நிறைய தொழிலாளிகள் நம் நாட்டில் மிக அதிகம். ஒரு இடம் விட்டு பெயர்ந்து இன்னோர் இடத்திற்கு சென்று நிராதரவாக அண்டிப் பிழைக்கும் எத்தனையோ மக்கள் இருக்கும் இந்த நாட்டிலேயே அவர்கள் நிலமற்றவரிகளாகவும், எந்த அரசும் கண்டு கொள்ளாத, பராமரிக்கப்படாத, ஆதரவுமில்லாத, முதலாளிகளாலும் அரசினாலும் சுரண்டப்படும் தொழிலாளிகளைப் பற்றிய நாவல்தான் 'வந்தேறிகள்'. தொழிலாளிகள் என்றால் விவசாய கூலிகள், வீடுகட்டும், மீன் பிடி, தறியோட்டும்,நெசவு செய்யும், தச்சு வேலை செய்யும், துப்புரவு, பிணமெரிக்கும், டீ கடைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள், அச்சகத்தில் வெலை செய்யும்,கல்லுடைக்கும் தொழிலாளிகள், பாலியல் தொழிலாளிகள், இப்படி எல்லா தொழிலாளிகளின் வாழ்வியல் முறை, அவர்கள் பட்ட துன்பங்கள் என விரிவாக பேசுகிறது நாவல். சேலத்திற்கு அருகிலுள்ள மேட்டூர், மணியம்பாளையம்,கள்ளிப்பாளையம் போன்ற ஊர்களிலிருந்து வந்து சென்னைக்கும் சித்தூரையும் இணைக்கும் நகரம், பேட்டையில் நடக்கும் விசைத்தறி கூலித்தொழிலாளிகளைப் பற்றித்தான் ஆரம்பித்த கதை பின்பு பாலியல் தொழிலாளிகள் படும் வேதனைகளைப் பற்றி பேசி செல்கிறது. கதையில் முக்கிய கதாபாத்திரமே பெண்தான் அதுவும் பாலியல் தொழில் செய்யும் பெண் சரிதா மற்றும் சந்துரு பற்றியதுதான். தொழிலாளிகள் ஒன்று சேர்ந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு நிறைய உதாரணங்கள் நாவலெங்கும் விரவிக்கிடக்கிறது. அஸ்ஸாம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்து சோன் பப்டி, சோளப்பொறி விற்பவர்களாகவும், அழகு நிலையங்களில், பேக்கரியில் வேலை செய்பவர்களாகவும் இருக்கும் அவர்களைப்பற்றி நாம் இந்த நாவலைப் படித்தால் நினைந்து பார்ப்போம் அத்தோடு நில்லாமல் அவர்களுக்கு ஏதாவது செய்வோம். மலேசியாவில் வதைபடும் தமிழகத் தொழிலாளிகள், சவுதியின் அடிமைகளாக ஆசியத் தொழிலாளிகள், உலகெங்கும் சுரங்கங்களில் தம்முயிரை பணயம் வைக்கும் தொழிலாளர்கள், மலிவான சம்பளத்தில் மதிப்பற்ற உயிரைக் காப்பாற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், நோக்கியாவின் இலாபவெறிக்கு பலியான தொழிலாளி... உழைக்கும் மக்களுக்கு தலைமை தாங்க வேண்டிய தொழிலாளி வர்க்கம் தன் இலக்கை அடைவது எப்போது?அப்படி அணிதிரளும்போது மட்டுமே மக்களை இன்று கொடூரமாக வாட்டி வதைக்கும் மறுகாலனியாக்கத்தை தடுத்து நிறுத்த முடியும். இது போன்ற வர்க்க போராட்டத்தை கையிலெடுத்து அலசி ஆராயும் நாவல்தான் வந்தேறிகள். சிற்றிலயக்கியங்களிலும் இந்நாவல் போன்ற தொழிலாளிகளின் வாழ்வியல் முறை சொல்லப் பட்டுள்ளதற்கு ஒரு எடுத்துக் காட்டு பள்ளு நூலில் வேளாண் கூலியின் மதுப்பழக்கம், சக்களத்தியர் ஏசிக் கொள்ளுதல், நில உடைமையாளர் தொழிலாளியைத் தொழுவில் கட்டி அடித்தல் ஆகியன பாடப்பெறுகின்றன. குறவஞ்சி நூலில் மேட்டுக்குடியினரின் காதல், பிரிவுத் துன்பம் ஆகியன ஒருவகையாகவும் எளிய குடியினரின் காதல், பிரிவுத்துயர் ஆகியன வேறு வகையாகவும் காட்டப் பெறுகின்றன. பள்ளு என்பது சிற்றிலக்கியங்களில் ஒன்று. பள்ளங்களில் வேலை செய்யும் வேளாண் தொழிலாளியைப் பற்றியது இந்நூல். உண்மையில் இந்நூல் அக்காலச் சமய மாறுபாடுகளைத் தெளிவாகக் காட்டுகின்றது. இதோ முக்கூடற்பள்ளு நூலில் வேளாண் தொழிலாளி எப்படிச் சித்திரிக்கப் பெறுகிறான் பாருங்கள்! வேளாண் தொழிலாளி கறுக்கும் கிடாய் மருப்பின் முறுக்கு மீசையும் - சித்ரக் கத்தரிகை யிட்ட வன்னக் கன்னப் பரிசும் குறுக்கில் வளைதடி சேர்த்து இறுக்கும் கச்சையும் - செம்பொற் கோலப் புள்ளி உருமாலும் நீலக் கொண்டையும் சறுக்கும் தொறும் குதிப்பும் சுறுக்கும் தலை அசைப்பும் தடிசுற்றி ஏப்ப மிட்டே அடிவைப்பதும் மறுக்கும் மதுவெறிகொண்டு உறுக்கும் சிரிப்பும் தோன்ற வடிவழகக் குடும்பன் தோன்றி னானே. மேட்டுக்குடி முதலாளி அண்ணாமலை, சுந்தரி புருசன் மற்றும் ரவுடிகள்,நக்கல் காவல் அதிகாரி இணைந்து செய்யும் சூழ்ச்சி, எதிரிகளை ஒழிக்க நினைக்கும் உத்தி, சுரண்டல் என உலகம் முழுவதும் இருக்கும் வர்க்க ஒற்றுமை இந்நாவலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சன்.டி.வி மெகா சீரியல் பார்க்கும் குடும்பத் தமிழன், கலைஞர் டி.வியின் மானாட மயிலாடவில் லயிக்கும் குதூகலத் தமிழன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல்லில் இரசிக்கும் லோக்கல் தமிழன், டெண்டுல்கர் சதமடித்தால் ஆர்ப்பரிக்கும் இந்தியத் தமிழன், ராணா படத்துக்காக நா தொ போட்டு காத்திருக்கும் இரசிகத் தமிழன், கமலின் அடுத்த கெட்டப்புக்காக தவம் இருக்கும் உலக சினிமாத் தமிழன், தினமலரின் ஜோசியப் பக்கத்தை காசு கொடுத்து நம்பும் மூடநம்பிக்கைத் தமிழன், சாய்பாபாவுக்காக கண்ணீர் விட்டு அழும் பக்தித் தமிழன், நித்தியானந்தாவுக்கு படம் போட்டு பிரச்சாரம் செய்யும் எழுத்தாளத் தமிழன், பால் தினகரனுக்காக பாக்கெட் மணி அனுப்பும் பரதேசித் தமிழன், விசா இல்லாமல் மலேசியா சென்று சிறையில் வாடும் கனவுத் தமிழன், விசாவோடு வளைகுடாவில் முடங்கிப் போன நனவுத் தமிழன், பச்சை அட்டையோடு அமெரிக்காவில் செட்டிலான பணக்காரத் தமிழன், தீக்குச்சி அடுக்கி பீடி சுருட்டும் ஏழை இளையத் தமிழன், பங்குச் சந்தையில் சூதாடி பணம் சேர்த்து முன்னேறும் காரியவாதத் தமிழன், பிசா – பர்கர்- கென்டகி சிக்கனோடு வாழும் சிட்டித் தமிழன், முறுக்கு சட்டியோடு ஆந்திராவுக்கு பிழைக்க போயிருக்கும் வில்லேஜ் தமிழன், தேயிலைத் தோட்டங்களில் பனியால் கருகும் தோட்டத் தமிழன், ஆர்கானிக் டீயைச் சுவைத்தவாறே நட்சத்திர விடுதியில் பிசினஸ் பேசும் முதலாளித் தமிழன், கரும்பலகை இல்லாத பள்ளிக்கூடத்தில் பயிலும் கிராமத்து தமிழன், கணினி – செல்பேசியோடு பள்ளிக்கு செல்லும் பட்டணத்து தமிழன், இலங்கை கப்பற்படையிடம் சிக்காமல் கடலில் தொழில் செய்ய பாடுபடும் மீனவத் தமிழன், ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடக்கும் மறத் தமிழன், கருணாநிதி குடும்ப அரசியல் தொழிலை ஏற்றுக் கொள்ளும் உடன்பிறப்புத் தமிழன், சோனியாவிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கும் வேட்டிக் கிழிப்புத் தமிழன்,இறுதியாக பதிவுலகில் ‘வட போச்சே’ என்று பின்னூட்டமிடும் வெட்டித் தமிழன் (நன்றி vinavu.com)இதில் யார் வந்தேறிகள் யார் தமிழன். இவர்கள் பண்பாட்டை மறந்த மகா பாவிகள். வந்தேறிகள் யாரும் அன்பு செய்ய மறப்பதில்லை என்று இந்த நாவல் குறிப்பாக சிலர் முகத்தில் காறித்துப்புகிறது. யார் வந்தேறிகள்? அஸ்ஸாமுக்கு வந்த வங்கதேசத்து முஸ்லீம்க்ளா?, அல்ல அங்கிருந்து இங்கே தமிழகத்துக்கு வந்தவர்களா? அல்ல பீகாரிலிருந்து அஸ்ஸாமுக்கு வந்தவர்களா? தமிழகத்திலிருந்து மும்பை, டெல்லி, பெங்களூர் நகரங்களுக்கு சென்றவர்களா? இல்லை தமிழகத்துக்குள்ளேயே திருவாரூரிலிருந்து திருப்பூருக்கு பிழைக்க சென்றவர்களா? இங்கிருந்து இலங்கைக்கு பிழைக்க போனவர்களா? அங்கிருந்து இங்கெ ஏதிழிகளாக வந்தவர்களா? இல்லை கீழத்தஞ்ஞையிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளில் வாடும் மக்களா? இல்லை இந்த கார்பரேட் பரதேசிகளா? யார் வந்தேறிகள் மொழிகள் நம்மை ஒரு வாரியாக பிரித்தாளும், இனம் நம்மை பிரித்தாளும்; ஜாதிகள் வழியாக, மதத்தின் வழியாக பிரிப்பது எது? யார் அதற்கு அடித்தளம்? எந்த பிரிவினர் மட்டும் அனைவரையும் கீழே தள்ளி மேல் உள்ளனர்? பழங்குடினர் ஆட்சி போய், மன்னர் ஆட்சி வந்த பின்னர், அவர்கள் தாங்கள் கடவுளுக்கு அடுத்தப் படியானவர்களாவும், ராஜ தந்திரங்கள் அறிந்தவராகவும் தெரிவிக்கப் பட்டனர். மன்னர்களை வைத்து தங்கள் மொழியையும், வழக்கங்களையும் வளர்த்தது மட்டுமின்றி தங்களுடைய கூட்டத்தாரின் வாழ்க்கை முறைகளையும் உழைப்பே இன்றி பெருக்கினர். இவர்கள் அனைவரும் இந்தியர்கள்தானே, எங்கே போனது இவர்களின் தேசப்பற்று என்று மிகப்பெரிய மில்லியன் டாலர் கேள்வியையும், இந்த நான்கு முகம் கொண்ட முகமூடி அணிந்த, பசுந்தோல் போர்த்திய சிங்கம் நாமனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த தேசத்தில் பிறந்து பொருளாதாரப் போரில் ஏதிலிகளாகி இங்கேயே நிலமற்று, நிராதரவாக நிற்கும் பாட்டாளி மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளைப் கடும் சாடலுடன் நகர்த்தி செல்கிறது இந்த நாவல். பாலியல் பாட்டாளிகளை சங்கம் கட்ட வைத்த முதல் நாவல் என இதை குறிப்பிடலாம். இரயிலை, அது ஏற்படுத்தும் சத்தத்தைக் கூட கதைக்கு தகுந்தாற் போல் எல்லா அத்தியாங்களிலும் வைத்துள்ளார் அருமை. மேலும் மயில், சரிதா, சந்துருவின் நட்பு அதில் ஒரு முரண் அனைவரும் வந்தேறிகள், அனைவரும் இந்த தேசத்தின் பறவைகள். அந்த புனைவுக்காகவே பாரதிநாதனை பாராட்டாமலிருக்க முடியாது. தறியுடன் நாவலில் இருந்த ஒரு கொதிப்பு இந்நாவலில் ஒரு ஏக்கமாக, சிந்திக்க வைக்கும் ஒரு முயற்சியாக நன்று. இந்த நாவலில் முழுக்க முழுக்க பெண்களை போராட்டக் களத்தில் நிற்க வைத்த உத்தி பாராட்டுக்குரியது. மேலும் திருப்பூர் குணா தனது புத்தகத்தில் கூறியுள்ளது போல் இந்த பின் நவீனத்துவ ஆட்கள் பெண்களை ஒரு போகப் பொருளாகவும், கவிதை, கட்டுரை எழுதினால் போதும் என்று முடக்கி வைத்துவிட்டனர். அவர்களை வெறும் சதைப் பிண்டமாக மட்டுமே பார்த்த கண்களுக்கு இந்த நாவல் திராவகம் ஊற்றி எரிக்கிறது. பெண்களை புரட்சிக்கும், ஆன் சமூகத்திற்கு எதிராக போராடவும் வைத்துள்ளது இந்த நாவலை பெண்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய நாவல். அதுவும் பாலியல் தோழர்களை போராட்ட களத்தில் நிறுத்தியது சிறப்பு. பெண் விடுதலையென்றால் மாடலாக துணி அணிந்தால் புரட்சி என்று நினைக்கும் பெண்களிடத்தில் இந்நாவலை கொடுக்கலாம். அன்னம்மாள், கோகிலாம்மாள் என விதவை பெண்கள் படும் ஏசல்கள், அவர்கலைப்பற்றிய தவறான் கதைகளை அவர்களே அறிந்தும் அதை அவர்களே கட்டுடைப்பது. ஓபுளி பேச்சு மாதிரிதான் என் பேச்சும் முக்கியான நேரத்தில் எனக்கும் பெயர் மறந்துவிடும். சிற்பியின் கலைக்குழு அமைப்பது அதை விவசாய தோழர்களோடு இணைப்பது. பெரும் புரட்சியாக பாலியல் தொழிலாளி வீட்டில் சாப்பாடு முட்டுமில்லாமல், அவளையே திருமணம் செய்யவது. சரிதாவின் காதைப்புலம் மிகக்கொடுமையானது. அவர்களுக்குள்ளும் மனமிருக்கிறது அந்த மனதிலும் ஆசைகளும் பாசங்களும் நிறைந்தும், அவர்களுக்கு கட்டுப்பாடு இருக்கிறது. சரிதா சந்துருவை விரும்பியதும் அவள் எப்போதும் செல்லும் ஆத்தங்கரைக்கு செல்லாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பது இது போன்ற படைப்பு மிகவும் புதுமை. பாலியல் தொழிலாளிகளைப் பற்றிய நாவல் என்றதும் விரசம், காமம் நிறைந்த நாவல் என யாரும் தப்பாக கருதி விட வேண்டாம் அப்படி ஒரு இடம் கூட பார்க்க முடியாது. அனுராதா, வசீகரன் உழைக்கும் மக்களுக்காக உழைப்பவர்கள் எல்லா ஊரிலும் உள்ளார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம். கடைசி அத்தியாயம் சுபம், சில பைண்டிங் குறைகள்தான் மற்ற குறைகளற்ற நாவல். பொருள் துறைக்கு ஆதார சாதனங்கள் புவிமீது பணமுடையோர்க்கு உரிமை யாச்சு; பொருள்தோற்றம் செல்வந்தர் வணிகர் என்போர் பொறுப்பினிலே வந்ததுபின் உழைப்போர் கட்கு பொருள்தோற்ற மூலதனம் கிட்ட வில்லை பொருளுடையோர்க்கு அடிமைசெய்து கூலி பெற்றார்; பொருள்தோற்ற விற்க சுதந்திரம் இல்லாமல் பொதுவாக உழைப்பாளர் நலிந்து விட்டார். மூலதனமெனில் பூமி, ஆ யுதங்கள், முற்கால அனுபவங்கள், திறமை ஆகும் மூலதனம் தனிமனிதன் உரிமை யானால் முயற்சி இன்றிப் பிறருழைப்பைக் கவர நேரும் மூலதனம் சமுதாய உரிமை யாக முழுவதுமே மதித்திடுதல் சமதர் மம் ஆம் மூலதனம் பணத்தாலே மதிக்கும் போக்கால் முடிவில்லாத் துன்பங்கள் வாழ்வில் கண்டோம். நன்றி - தத்துவஞானி யோகிராஜ் வேதாத்ரி இந்த நாவலுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ ஆனாலும் நாம் படிக்க வேண்டிய கவிதைப் பாட்டு எழுதப்பட்ட விசயம் மார்க்சியம் சார்ந்தது எழுதியவர் ஒரு ஞானி. நாமெல்லாம் சொல்லும் வார்த்தையில் கார்பெரேட் சாமியார் கருத்து எங்கே வேண்டுமானாலும் உதிக்கும் சொல்லப்பட்ட விசயம் பாட்டாளிகளைப் பற்றியது. அது போல இந்த நாவலும் எங்கே என்ன சார்பில் எழுதப் பட்டதென நாம் பார்க்காமல் என்ன எழுதியுள்ளார்கள், யாரைப் பற்றி எழுதியுள்ளார்கள் என பார்ப்போம். யாரோ புனைவு என்று குப்பைகளை நம் மீது பொதி சுமக்க எழுதும் எழுத்தாளர் அல்ல பாரதிநாதன். பாட்டாளிகளை, தொழிலாளிகளைப் பற்றி எழுதும் ஒரு முழு நேர தொழிலாளி.

திங்கள், 12 ஜனவரி, 2015


மூலதனமென்னும் விசம்.


மூலதனமெனில் பூமி, ஆ யுதங்கள், முற்கால அனுபவங்கள், திறமை ஆகும் மூலதனம் தனிமனிதன் உரிமை யானால் முயற்சி இன்றிப் பிறருழைப்பைக் கவர நேரும் மூலதனம் சமுதாய உரிமை யாக முழுவதுமே மதித்திடுதல் சமதர் மம் ஆம் மூலதனம் பணத்தாலே மதிக்கும் போக்கால் முடிவில்லாத் துன்பங்கள் வாழ்வில் கண்டோம். பொருள் துறைக்கு ஆதார சாதனங்கள் புவிமீது பணமுடையோர்க்கு உரிமை யாச்சு; பொருள்தோற்றம் செல்வந்தர் வணிகர் என்போர் பொறுப்பினிலே வந்ததுபின் உழைப்போர் கட்கு பொருள்தோற்ற மூலதனம் கிட்ட வில்லை பொருளுடையோர்க்கு அடிமைசெய்து கூலி பெற்றார்; பொருள்தோற்ற விற்க சுதந்திரம் இல்லாமல் பொதுவாக உழைப்பாளர் நலிந்து விட்டார். தத்துவஞானி யோகிராஜ் வேதாத்ரி மூல தனம் என்பது எவ்வளவு விளைவுகளை ஏறபடுத்தும் என்ற உண்மைதனை 50 வருடத்திற்கும் முன்பே ஆராய்ச்சி செய்து ஒருவர் எப்படி மார்க்சிய கருத்துக்களை எல்லோருக்கும் தெளிவாக புரியும் படி எழுதியிருப்பது ஒரு ஆன்மீக மகான் என்பதே இங்கு குறிப்பிடப்படவேண்டியது. அந்த மகான் என் வாழ்வையும் சிறிது பாதித்துள்ளார். அவரே வேதாத்ரி மகரிசி. துவாரகாசாமிநாதன்

செவ்வாய், 6 ஜனவரி, 2015

எங்கும் போராட்ட வரலாராக விரியும் நாவல்


ஆதி மனிதனின் இயக்கம் தேவையின் அடிப்படையிலும் அதனை ஒட்டிய உணர்ச்சி எழுச்சியும் ஆரம்பமானது உழைப்பு என்னும் தாரக மந்திரம், உழைப்பு எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்ட பின் அதனின் இயக்கத்தில் பொருள் உற்பத்தி ஆரம்பமானதும் பொருளாதாரம் வந்தது அதனை காக்க அரண் தேவைப்பட்டிருக்கும் அரசியல் வந்தது அரசனே கண்காணிக்க முடியாது என்பதால் அரச நிறுவனம் அமைக்கப்பட்டது, இன்று அரசியல் கட்சியும் சேர்ந்தே இருக்கிறது, கட்சி அரசியலைத்தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டுள்ளோம். சரி அரச நிர்வாகத்தில் உள்ளவர்களாவது சரியாக இருக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. நிதி நிர்வாகத்தில் ஊழல் மலிந்து விட்டன. நீதியோ இருதலை கொள்ளி எறும்பாக மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கிறது. எல்லாம் கிடைத்து தேவையும் நிறைவேறியவுடன் தத்துவ ஆராய்ச்சியில் மனிதன் இரங்கியிருப்பான், அன்று இருந்த அறிவு நிலையில் தத்துவங்கள் வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன் ஆனால் எல்லாம் மாறக்கூடியது என்பதில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஒவ்வோரு காலக்கட்டத்திலும் அறிவு நிலை ஆராய்ச்சிக்கு ஏற்ப மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்து இருந்தாலும். மனிதனின் மனம் பற்றியும் அதில் எழும் குணம் பற்றியும் எழுந்த ஆராய்ச்சி போத வில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து நிலை மேலும் கிழக்கும் மேற்கும் இனணந்தும் மேலும் தத்துவம், அரசியல், இயற்கை,பொருளாதாரம், மனவியல், உளவியல், பொருட்கள் பற்றிய விஞ்ஞானம், மெய்ஞானம் என விரிந்த நிலை ஒருங்கிணைந்த ஆராய்ச்சி தேவைப்படுவாதாகவே நான் கருதுகிறேன். இப்படி எதுவுமே நிகழாமல் தனிமனிதனின் குணம் மாற வாய்ப்பேது அவன் ஆசையிலும், பேராசைக்கொண்டும், பொருட்களை மேலும் தனக்கே சேர்த்துக்கொள்ள வேண்டும் என விரும்பி பிற மனிதனின் உரிமைகளையும், உடைமைகளையும் ப்றிக்க நினைக்கிறான். இதிலிருந்துதான் வர்க்க பிரிவினைகள் தோன்ற ஆரம்பிகின்றன. உழைப்பு பகிர்வு நடை பெறாமல் 20 சதவீதம் பேர் உழைக்காமல் சாப்பிட நினைப்பது என்ன நியாயம், இதில் நான் நிறைய படித்து விட்டேன் என்ற கெளரவம் வேறு நான் என் படிப்புக்கேற்ற வேலையைத்தான் செய்வேன் என்றும் எனக்கு உடனடியாக பணம் தரக்கூடிய வேலையை மட்டும்தான் செய்வேன் என்றும் அடம் பிடிக்கிறோம். தறியுடன் நாவலில் இப்படிபட்ட கருத்தக்களுடந்தான் ஆரம்பிக்கிறது ரங்கனும் சாதரணமாக பயந்துதான் கட்சிக்குள் வருகிறார் பிறகு அவர்தான் மக்கள் போராளியாகுகிறார். மக்களுக்காக படைப்பதுதான் இலக்கியம், மக்களுக்காக செய்வது, வாழ்வது, போராடுவது, என நாவல் எங்கும் சிறு விவசாயிகளின், பாட்டாளி மக்களின் வேதனைகளை எடுத்துரைக்கிறார். ஊடுயிளை பாவாக மார்க்சிய, நக்சல்பாரியின் செயலகளை வைத்துள்ளார். அரசியல் போராட்டம், பொருளாதார போராட்டம், தத்துவ போராட்டம், வாழ்க்கைப் போராட்டம் என எங்கும் போராட்ட வரலாராக விரிகிறது நாவல். அன்றும் இன்றும் போராட்டம் என்றாலே அரச இயந்திரம் அடக்கவும் மக்கள் அதனை அரசை எதிர்க்க வந்த போராளிகளை ரகசியமாக ஆதரிப்பதும் குறையவில்லை, என்றும் குறையாது. நாவலில் பாரதிநாதனே குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களும் அரசும் சேர்ந்து நடப்பவைகளை தவறாக சித்தரிக்க முயன்றாலும் மக்கள் அந்த போரட்டத்தின் உண்மை புரிந்து விடுகிறது. தோழர் ரங்கன் மாட்டுக்கறி தின்ன முடியாமல் இருந்து பின் சேலத்தில் ஒரு பன்றி மேய்க்கும் தலித் வீட்டில் ஊர் சாப்பாட்டை இன்முகத்தோடு சாப்பிடும் காட்சிகள் அருமை, பாரதி நாதன் சில இடங்களில் சினிமா சிகிரிப்டு எழுதுவது போல் நாவலை வடிவமைத்துள்ளார் . காலம் சில இடங்களில் குழம்பியுள்ளது முதலில் மழை ஆரம்ப அறிகுறிகள் சொல்லி வந்து விட்டு ராசாத்தி, கல்யாணி, ரங்கன் எல்லோரும் ஜ்ஸ் சாப்பிடுவது போல் எழுதியுள்ளார் கால வழு ஏற்பட்டுள்ளது. மேலும் கல்யாணியை நிறைய இடங்களில் வசந்தா என அழைத்துள்ளார் பாரதி நாதனின் மனைவி பெயராக இருக்குமோ? என்னவோ. ஆனால் நாவலின் எந்த இலக்கண சட்டகத்திலும் அடைக்க முடியாத நாவல் என்று இதைக் கூறலாம். அது ஏன் என்ற தெரியவில்லை எல்லாவற்றையும் மேற்கிலிருந்து சிந்தித்த நாம் நாவல், கதை, கட்டுரை பதிக்கும் போது மட்டும் நிறைய எழுத்து பிழைகளோடே வெளியிடுகிறோம். எனக்கு அது மட்டும் புரியவில்ல்லை. அதற்கு என்று ஒரு எடிட்டிங் வேலை செய்ய ஒருவ்ரை நாம் உருவக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். நாவலின் ஆரம்பம் முதல் கடைசி வரை ரத்தம், துணிச்சல், வீரத்தையே விதைத்துள்ள ஒரு நல்ல நாவல் இது. போராட்டக் குணத்தை இளைய சமூகத்திடம் வளர்த்தெடுக்க இந்த நாவலை படிக்க கொடுத்தால் போதும் அவன் அநியாயத்தைக் கண்டு கொதிக்க ஆரம்பிப்பான், முனை மலுங்கிய கத்தியையும் புத்தியையும் தீட்ட வேணடும். அதற்கு ஒரு நல்ல உறைக் கல்லாக இந்த நாவல் இருக்கும். நிறைய கட்டுரை, மார்க்சிய நெடி கொண்ட மிளகாயை நெருப்பில் போட்டு கொடுத்துள்ளார் பாரதிநாதனுக்கு ஒரு செவ்வணக்கம் தோழரே. துவரகாசாமிநாதன்

"சாமி கீர வாங்கலியோ கீர"


'டாலர்' மோகம் திருவிழா சந்தையில் வளர்ந்ததும் வங்கியின் லோன் மேளாவில் மிச்சத்தையும் விட்டு விட்டு கோவணமும் இல்லாமல் நான் அழகாயிருக்கிறேன் கொப்பரைத்தேங்காவாய் சுருண்டு போன நான் இன்னும் நீருக்காக எலியுடன் போராடிக்கொடிருக்கிறேன் சந்தையில் காய்ந்து போன முருங்கைக்காய் போல் முனகிக்கொண்டே என் நிலமும் பொறுக்குத்தட்டிப் போய்க் கிடக்கிறது 'ரியல் எஸ்டேட்' மார்க்கெட் செழித்து வளர்கிறது - ஆனால் என் குண்டிகள் போல நிறைய காய்ந்துக் கிடக்கின்றன வரிந்து கட்டிக்கொண்டு ஊடகக் கொம்புகள் என் முகத்தை கிழித்து விட்டன வரி கோடுகள் என் முகச்சுருக்கம் 'கார்பெரேட்' விவசாயிகள் கவலை கொள்கிறார்கள் விவசாயம் நலிந்து விட்டதாம் ஆடு நத்தையை சுட்டு தின்ன ஓநாய் அழவும் சரியாய் போனது போங்க 'ரிலையன்ஸ்' முதலாளிகள் தெருவில்..... துவாரகாசாமிநாதன்