செவ்வாய், 20 ஜூன், 2017

அறிவை அறி அதுவே அறம்

பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு -351குறள்.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு -355குறள்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. -423குறள்.

மெய்பொருள் என எதைச் சொல்கிறார் அப்படியான உண்மைப் பொருள் என்ன இந்த உலகில் உள்ளது. பொருள் என்று நாம் பார்க்கும் யாவையும் அணுவின் கூட்டு நிகழ்ச்சிதான் ஐந்து பௌதீகப் பொருளில் கூட அணுவின் கூட்டும் இருக்கையில் எல்லாமே நிகழ்ச்சிதான். நமக்கு கற்பிக்கப் பட்ட உண்மையை பகுத்தறிவு கொண்டு பகுத்துப் பார்த்துக் கொண்டே போனால் பொய்யான உண்மை உண்மையான உண்மை எல்லாம் இருக்கிறதாவென ஒரு கேள்வி எழுகிறது. இதுதான் வள்ளுவரின் பொருள் முதல்வாதமா. மெய்ப்பொருள் எல்லாவற்றுள்ளும் இருக்கும் அறிவை உணர்தல் அறிதல் என்று எடுத்துக்கொண்டால் நமது சிந்தனைக்கு உவப்பாய் இருக்குமென நினைக்கிறேன். நாம் முன்னமே சொன்ன பேரறிவு சிந்தனையே சரியான தெளிவான உண்மையான பொருளாக இருக்கும். அணுவே அலைதான் எனும் போது அணுவை இயக்கும் மூலப்பொருள் என்னவாக இருக்கும் அலையே அல்லது அலையில்லா தன்மை கொண்ட பேரறிவே அதையே பரமானு என்று சித்தர்கள் சொல்கிறார்கள். வேதாத்ரி இறைத்துகள் என்கிறார். நாம் இங்கே பேரறிவு என்று எடுத்துக் கொள்கிறோம்.

ஒரு செங்கல்லை எடுத்து கொண்டு இடித்து பொடியாக்கி காற்றில் தூவி விட்டு பார்த்தால்பொருளாக இருந்த பொருள் காற்றில் கலந்து பரமானுத் துகளாக மாறி விடுகின்றன. மனித உடலும் மரணித்த பின் இப்படியான நிகழ்வே நடக்கிறது. இவ்வணுவை கூட்டியோ பிரிப்பதே சித்து விளையாட்டான அகிமா மகிமா எல்லாம். தற்போதைய விஞ்ஞானம் காற்றில் அணு திணிவைக் கூட்டி திரையாக பயன்படுத்தும் தொழில் நுட்பமே அந்தரத்தில் சினிமா  முறை முயற்சி. (ஆய்வுக்குட்பட்டது).

அறிவு என்பது எப்போதும் மெய்யான பொருளை உணர்வதற்கான முயற்சியில் பகுத்தறிந்து பொருளில் நிகழ்வில் உயிரில் செயலில் இருக்கும் உண்மையான இருத்தலை பேரறிவை பேராற்றலை காலத்தை நுண்ணுணர்வை சமதளச்சீர்மை துல்லியத்தை உணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்பதே ஆகும்.

#அறிவைஅறிஅறிவேஅறம்
#துவாரகா

திங்கள், 19 ஜூன், 2017

அறிவை அறி அதுவே அறம்

அறிவை அறி அதுவே அறம்

ஞானம் வீட்டைக் கட்டும் மெய்யறிவு அதை உறுதியாக அமைக்கும். அருமையும் நேர்த்தியுமான பல பொருள்களால் அறிவு தன் அறைகளை நிரப்பும்.(20)

விவிலியம் நீதிமொழிகள் 24:20

அறிவை வளர்த்துக்கொள்வதென்பது மனதை அகலப்படுத்தும் வேலையே அறிவே மனதின் உள்ளத்தின் உயிரின் உடலின் மெய்ப்பொருளாக உட்பொருளாகயிருந்து செயல்படுகிறது
அறிவை வளர்ப்பதென்பது எழுத்தறிவு தொழிலறிவு பட்டறிவு மட்டுமல்லாது எல்லாவற்றிலும் அறிவாக இயங்கும் மெய்யறிவை உணர்வதே ஞானமென்கிறோம் அதுவே உனது மனதின் அறைகளை பல பொருட்களைக் கொண்டு நிரப்பும். பல வளங்களை கொண்டு வந்து சேர்க்கும். அவைகள் மனிதனை மனிதனாக நேசிக்கும் சுயமரியாதை சிந்தனையையும் பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டி பொருட்களில் உயிர்களில் பேரறிவு இயங்கும் சமநிலையை புரிந்து கொண்டு   தன் தேவையுணர்ந்து பிறர் தேவையை குறிப்பறிந்து கூட்டி குறைத்து செயலாற்றும் சமூகத்தொண்டாற்றும் அறப் பண்பை வளர்க்கும்.
தேவையுணர்ந்தால் உரிமைகள் சமநிலையடையும் இல்லையானால் உணராது அறிவற்ற பண்பற்ற செயலில் ஈடுபடும் பிறர் சுதந்திரத்தை பறித்தல் பிறர் தேவையைத் தடுத்து உரிமையையும் வாழும் நிலையையும் கெடுக்கும் மிருக பதிவில் இயங்கும் மனம். அவ்வழியான பழக்கத்தை பண்பாடாக கொண்ட போர்ப்பழக்கத்தை தாண்டி வந்தும் இன்னும் இடம் பொருள் சாதி மத இன மொழிப் பற்றில் மனம் குறுகி நின்று சிந்தித்து பிறரை துன்பத்திற்குள்ளாக்கிற குறையறிவை மாற்றவே புதிய பழக்கமான மெய்யறிவு பேரறிவு பகுத்தறிவு சிந்தனை பழக்கத்தை நம் முன்னோர்கள் எடுத்துச் சொன்னார்கள் பழக்கமே புதிய பண்பாடாக மாற வேண்டும். புதிய சிந்தனைக்கு மனதை பழக்கி அறிவை அறிவோம். எவ்வகையான பாகுபாடுமின்றி அற வழியில் வாழ்வோம்
#அறிவைஅறிஅறிவேஅறம்
#துவாரகா

அறிவை அறி அதுவே அறம்

அறிவை அறி அதுவே அறம்

ஞானம் வீட்டைக் கட்டும் மெய்யறிவு அதை உறுதியாக அமைக்கும். அருமையும் நேர்த்தியுமான பல பொருள்களால் அறிவு தன் அறைகளை நிரப்பும்.(20)

விவிலியம் நீதிமொழிகள் 24:20

அறிவை வளர்த்துக்கொள்வதென்பது மனதை அகலப்படுத்தும் வேலையே அறிவே மனதின் உள்ளத்தின் உயிரின் உடலின் மெய்ப்பொருளாக உட்பொருளாகயிருந்து செயல்படுகிறது
அறிவை வளர்ப்பதென்பது எழுத்தறிவு தொழிலறிவு பட்டறிவு மட்டுமல்லாது எல்லாவற்றிலும் அறிவாக இயங்கும் மெய்யறிவை உணர்வதே ஞானமென்கிறோம் அதுவே உனது மனதின் அறைகளை பல பொருட்களைக் கொண்டு நிரப்பும். பல வளங்களை கொண்டு வந்து சேர்க்கும். அவைகள் மனிதனை மனிதனாக நேசிக்கும் சுயமரியாதை சிந்தனையையும் பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டி பொருட்களில் உயிர்களில் பேரறிவு இயங்கும் சமநிலையை புரிந்து கொண்டு   தன் தேவையுணர்ந்து பிறர் தேவையை குறிப்பறிந்து கூட்டி குறைத்து செயலாற்றும் சமூகத்தொண்டாற்றும் அறப் பண்பை வளர்க்கும்.
தேவையுணர்ந்தால் உரிமைகள் சமநிலையடையும் இல்லையானால் உணராது அறிவற்ற பண்பற்ற செயலில் ஈடுபடும் பிறர் சுதந்திரத்தை பறித்தல் பிறர் தேவையைத் தடுத்து உரிமையையும் வாழும் நிலையையும் கெடுக்கும் மிருக பதிவில் இயங்கும் மனம். அவ்வழியான பழக்கத்தை பண்பாடாக கொண்ட போர்ப்பழக்கத்தை தாண்டி வந்தும் இன்னும் இடம் பொருள் சாதி மத இன மொழிப் பற்றில் மனம் குறுகி நின்று சிந்தித்து பிறரை துன்பத்திற்குள்ளாக்கிற குறையறிவை மாற்றவே புதிய பழக்கமான மெய்யறிவு பேரறிவு பகுத்தறிவு சிந்தனை பழக்கத்தை நம் முன்னோர்கள் எடுத்துச் சொன்னார்கள் பழக்கமே புதிய பண்பாடாக மாற வேண்டும். புதிய சிந்தனைக்கு மனதை பழக்கி அறிவை அறிவோம். எவ்வகையான பாகுபாடுமின்றி அற வழியில் வாழ்வோம்
#அறிவைஅறிஅறிவேஅறம்
#துவாரகா

வியாழன், 15 ஜூன், 2017

அறிவை அறி அதுவே அறம்

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே.

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே....

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்.

புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்
வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்.- திருவாசகம்

பேரறிவே மாற்றம் கண்டு எல்லா வகையான அறிவாகவும் மலர்ந்துள்ளதென திருவாசகப் பாடலின் சில வரிகளில் காணக் கிடைக்கும் விஞ்ஞான பரிணாம வளர்ச்சி தத்துவத்தோடு டார்வின் கோட்பாட்டோடு பொருத்திப் பார்த்தால் புரியும். அறியாமையான அஞ்ஞானத்தை மறைப்பது மன உணர்ச்சியான தான் என்ற அகந்தையும் தனக்கே எல்லாம் தெரியும் என்ற போக்கும்தான் அவற்றை தள்ளி வைத்து விட்டு வெற்றுக் கோப்பையாய் இக்கருத்தை உள் வாங்கி பாருங்கள் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளுங்களென வேதாத்ரி வழியில் நானும் சொல்கிறேன்
ஓரறிவு முதல் ஆறறிவு வரை விரிந்த இருத்தல் எது. அதுவே பேரறிவென்று இங்கே நாம் பகருகின்றோம். அதுதான் பாடலில் புல்லாகி பூடாகி...என ஆரம்பித்து மனிதனாக வந்த மாற்றமாம் வெவ்வேறே வந்தறிவே எனச் சொல்கிறார். மனிதனாக வந்தாலும் மனதின் உணர்ச்சி வேகமும் அறிவின் இயங்கு தன்மைக்கும் ஏற்ப அவனே பேயாய் முனிவராய் மிருகமாய் அசுரனாய் தேவராய் பல பரிமாண குண வேறுபாடடைந்து கடைசி வரை அறிவுத் தெளிவில்லாமல் இருந்து இறந்தும் போகிறான். தெளிவாக அறிவின் மனதின் இயக்கம் புரிந்து செயலாற்றி இறந்தும் இருக்கிறான்.    ஆக பேரறிவே பல பல வடிவம் கண்டு அதுவே எல்லா இயக்கமாகவும் வந்துள்ள பரிணாம வளர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும்.
பேரறிவே இயங்கி தன்னை இறுக்கி சுருக்கி சூழ்ந்தழுத்திக் கொண்டு அலையாக சுழன்று பரமானுவாக மாறி அவைகள் கூடி விண்ணென்ற அணுவாகி அணுக்கள் கூடி மூலகங்கள் பஞ்சபூதங்களாகி கோள்களாகி இயங்கி தன்மாற்றம் பெற்று ஓரறிவு முதல் ஆறறிவு வரை விரிந்து மலர்ச்சி பெற்று வந்துள்ளதை மிக எளிமையாக வேதாத்ரி விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் இணைத்து விளக்கமளிக்கிறார். இங்கே அவற்றை தொகுத்து பார்த்துக் கொள்ள வேண்டும். விஞ்ஞானத்தில் இப்போதுதான் அணுவுக்குள் ஓர் இயங்கா பகுதியும் அதுவே அணுவை இயக்கும் பகுதியாகவும் உள்ளதென கூறுகின்றனர். சில இடங்களில் விஞ்ஞானத்தாலும் மெய்ஞானத்தாலும் விளக்க முடியாத பகுதிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் எப்படி சடப்பொருளிலிருந்து உயிர்ப்பொருள் வந்திருக்குமென்ற கேள்வி. அதாவது அமீபா ஓருயிரி என்றால் அது எவ்வாறு நீர் என்ற சடப்பொருளிலிருந்து உருவாகியிருக்கும் அதற்கு சீவனைக் கொடுத்தது எது. அதுவே இங்கே பேரறிவென்று சொல்ல வேண்டுமென்று நமது முன்னோர்கள் சொல்கிறார்கள். இதற்கான விளக்கத்தை சிந்தனைக்கெடுத்துக் கொண்டு விரிவாக பேசுவோம்.
#அறிவைஅறி
#துவாரகா

அறிவை அறி அதுவே அறம்

அறிவை அறி

அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்துதான் மெய்பொருள் என்று எடுத்துக்காட்டி அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்.
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார் அறிஞர் திருமூலர்
அவ்வறிவில் ஆழ்ந்து ஆனந்த கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்தோர் அறம்வகுத்தோர் அதை வாழ்ந்து காட்டினோர் நினைவு கூர்வோம் - வேதாத்ரி
அவ்வழியே நானும் அறிவை விரிவு செய்த அனைவரையும் வணங்கியும். அறிவை ஆயுதமாக்கச் சொன்ன அம்பேத்கர்  வழியிலும். அனைத்தையும் பகுத்தறிய சொன்ன பகுத்தறிவு பகலவன் பெரியார் நிலையிலும் எல்லையில்லா அறிவு ஆய்வு செய்த மார்க்சிய அடித்தளத்தில் நின்றும் இவ்வாறு யாரெல்லாம் அறிவை அறிவாக அறிந்து அதன் வழியில் வாழ்ந்து சிந்தித்து இச்சமூகத்தை நல்வழியில் திருப்பிய அனைவரையும் வணங்கி மரபின் வேரிலிருந்தும் அதன் பூக்களின் வாசத்திலிருந்து தேன் சேகரித்து இக்கட்டுரையை தொடர்வோம்.

அறிவாகி ஆனந்தமயமாய் என்றும் அழியாத நிலையாகியாதின் பாலும்... என்று தொடங்குவோம் தாயுமானவரின் பாடலுடன் தொடங்கும். அறிவு என்பதை ஆங்கிலத்தில் Knowledge, wise, consciousness என பலவாறு கூறுகிறோமா. சரியான அறிவென்பது மூளைவழி சிந்திப்பதா. மனம் வழியாக வரும் சிந்தனையா. அப்புறம் புத்தி என்று வேறு சொல்கிறோம். புத்தி யுக்தி ஞானம்  சிந்தித்தல் என இவ்வாறாக சொல்வதெல்லாம் ஒன்றுதானா வெவ்வேறா. அறிவு என்பது தகவல்களின் சேகரிப்புதானா இல்லை அதையும் தாண்டியதா. இப்படியான நிறைய கேள்விகளோடு இன்றைய நாளை தொடங்கி நீங்கள் பள்ளியில் படித்த தாயுமானவர் பாடலை நினைவு கூர்ந்து சிந்தனையை தொடர்வோம்

அங்கிங் கெனாதபடி எங்கும் பிர காசமாய்
ஆனந்த பூர்த்தாகி அருளொடு நிறைந்ததெது தன்னரு வெளிக்குள்ளே அகிலாண்ட கோடியெலாம்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல் நின்றதெது சமயகோடிகளெலாம் நும்தெய்வம் எம் தெய்வமென் றெங்குந் தொடர்ந்தெதிர் வழங்கிடவும் நின்றதெது எங்கணும் பெரு வழக்காய் யயாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளதெது மேல் கங்குல்பகல் அறநின்ற எல்லையுள தெது அது கருத்திற் கிசைந்ததுவே
கண்டன எலாம் மோன உரு வெளிய தாகவும் கருதி அஞ்சலி செய்குவோம். - தாயுமானவர்

இப்பாடலுக்கு ஆயிரமாயிரம் விளக்கம் சொல்லலாம் மறுக்கலாம் ஆனால் அவர் எதுவென கேட்ட இடத்திலெல்லாம் அறிவுதான் அது எனப் பொருத்திப் பார்த்தால் விரிவானதொரு சிந்தனை தொடங்கும் அச்சிந்தனை வழி அறிவை அறிவோம் மேலும். எப்படி அறிவு உயிரற்ற பொருட்களில் இருக்க முடியும்.
#அறிவைஅறி
#துவாரகா

அறிவை அறி அதுவே அறம்

அறிவை அறி
அறிவே அறம்

அறிவு பற்றிய சிந்தனை இந்திய தமிழ் மரபிலும் அதே வேளையில் கிரேக்க மரபிலும் வெகு முன்பே சிந்திக்கப் பட்டு கோட்பாடாக வடிவமைத்துள்ளனர்.
அறிவு என்பது புலனுணர்வின் வெளிப்பாடாக மட்டுமே பார்க்கிறோம் இது நமது சித்த பௌத்த ஆதி மரபில் சிற்றறிவாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. பேரறிவென்று அதுவே அனைத்துக்குள்ளும் அறிவாக இயங்குகிறதென ஒரு தரப்பு சொல்லும் போது அதில் தனித்துவ கடவுள் எட்டி பார்த்து விடுகிறார். அப்படி ஒருவரால் எல்லாவற்றையும் படைத்து அதற்கான அறிவையும் தனித்தனியாக செயல் படுத்த முடியாது. இங்கே நாம் தான் விஞ்ஞான மரபையும் மெய்ஞான மரபையும் ஒன்றிணைக்க வேண்டுமென்கிறார் வேதாத்ரி. அப்படி இணைத்து விஞ்ஞான முறைப்படி விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்துள் செல்லும் முன் நாம் கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் பற்றி சிறிய அளவில் புரிந்து கொள்ள வேண்டும்.
கருத்து முதல் வாதமென்பது கடவுள் என்ற கருத்துதான் எல்லாவற்றையும் படைத்தன. உருவாக்கின.என்று சொன்னால் கடவுள் எங்கிருந்து கொண்டு இப்பிரபஞ்சத்தை படைத்திருப்பாரென்று ஒரு கேள்வி வருகிறது. புராணக் கட்டுக்கதைகள் முழுதும் தற்போது புனைவு என்ற பெயரிலும் இந்த புளுகையே அள்ளி விடுகிறார்கள்.
பொருள் முதல்வாதம் பொருளே முன்னம் இருந்து அதுவே இயங்கி பலவாறான படைப்பாக மாறியும் இயங்கிக் கொண்டும் உள்ளன என்று ஒரு கருத்து உள்ளது உங்கள் மனதிற்கும் புத்திக்கும் தெளியும் படி சொல்ல வேண்டுமென்றால் அணு என்ற பொருளே இயங்கி பல பரிமாண பரிணாம வளர்ச்சிக் கண்டுள்ளதென சொல்லலாம். அங்கே ஒரு கேள்வி அணுவுக்குள் நின்று இயங்குவது எப்பொருள் என்றால் அதைத்தான் நமது சித்த மரபில் பேரறிவு என்கின்றனர்.

மேலும் பொருள் முதல் வாதக் கருத்துப் படி புறவயச் சூழலே அறிவை புலனுணர்வு அனுபவமாகத் தருகிறது என்றும் அகத்திலே முன்னமே எந்த அறிவு செயல் இல்லை என்கிறது. அதுபோல இயற்பியல் தத்துவப்படி நமது அல்லது ஒரு பொருளின் இனர்சியாவை(அகவிசை) இயக்க ஒரு புற விசை அழுத்தம் தேவைப் படுகிறது.
இந்த இரு நிலைகளிலும் அறிவைப் பற்றிய சிந்தனைக்கு  எடுத்துக் கொண்டு பாருங்கள்.
திரும்பவும் நேற்றைய கேள்விக்கு வருவோம் சடப்பொருளில் எவ்வாறு அறிவு இயங்குகிறது. அணுவின் மேலும் பரமானுவின் எண்ணிக்கை இயக்கத்தை பொறுத்து அதன் தன்மாற்றம் பஞ்ச பௌதீக பொருள்களில் அழுத்தம் ஒலி ஒளி சுவை மணம் என்றும் உயிரில் மனமாகவும் அறிவுதான் தன்மாற்றமடைகின்றது. இன்னும் விரிவாக பேசுவோம்,
#அறிவைஅறி
#துவாரகா

அறிவை அறி அதுவே அறம்

அறிவை அறி அதுவே அறம்

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்அழிக்கல் ஆகா அரண்.

இக்குறளின் படி பார்த்தால் அறிவு நமது உள்ளத்துள் நின்று நமக்கு அரணாக நமது குற்றத்தை அழிவை தடுத்து காக்கும் கருவியாகும். அதன் படி பார்த்தால் நமக்குள் இருக்கும் மனசாட்சியே அறிவாக வந்து இடித்துரைக்கும் செயலை நாம் இங்கே நினைவு கூறலாம். மேலும் வள்ளுவரும் வேதாத்ரியும் நுண்மான்நுழைபுலன் அறிவு என்று ஒன்றைச் சொல்லி அது மிகவும் துல்லிய சமதளச் சீர்மையோடு இயங்குகிறதென்றும் விளக்குகிறார். ஒவ்வொன்றிலும் உள்ளிருந்து செயலுக்கு விளைவாக துல்லியமாகவும் சமதளத்தோடும் சீர்மையோடும் விளைவைத் தருகின்றது அறிவே. அவ்வறிவை மிக நுண்ணிய மன அலைச்சுழலில் நின்று கருத்துக்கிசைவாக்க வேண்டும். பழக்கத்தினால் உணரலாம். அவ்வியக்கத்தை பார்க்கவோ கருவியில் எட்டி விடவோ முடியாது. காலத்தினால் உணர்த்தப் பெறலாம். அவ்வறிவின் இயக்கத்தை அவ்வறிவைக் கொண்டே அறிதல் வேண்டும். நம்பிக்கை மட்டும் போதாது விளக்கம் பெற்று தெளிவாக உணர்ந்து முழுமையடைய வேண்டும்.

#அறிவைஅறி
#துவாரகா