செவ்வாய், 30 டிசம்பர், 2014

மாதொரு பாகன் நாவலில்


வரும் வரலாறு, மனிதன் குழுவாக வாழ்ந்த காலத்தில் இது நடந்தது மட்டுமில்லை திருவிழாவின் நோக்கமே கட்டற்ற் காமத்தை குறைக்கவும் அனுபவிக்கவுமே மேலும் கூத்தாண்டவர் கோயில், முருகன் கோயில் , திருச்சங்கோடு திருவிழவும் உண்டு இப்படி நிறைய கோயிலில் தேவரடியார்கள் இருந்து இத்தொண்டை செய்த்தற்கு கள ஆய்வுகள் உள்ளன...... தாங்கள் நிச்சயம் ஏங்கல்சின்'குடும்பம், அரசு, தனிச்சொத்து' புத்தகம் வாங்கி படித்துவிட்டும் ஏதாவது ஆதராம் கிடைக்குதன்னு பாருங்க தோழர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... இவற்றை கள ஆய்வு செய்தே பெருமாள் முருகன் எழுதியிருக்கிறார் என்று நம்புவாமாக.... இப்படி அதை எழுதாதே, இதை எழுதாதே என்றால் எழுத்து சுதந்திரம் என்னாவது? இவர்கள் சொல்லும் தேவ பாடையில் மட்டும் இதெல்லாம் இல்லையா என்ன? ஆட்ட கடிச்சி, மாட்டகடிச்சி இப்ப நம்பள கடிக்க வந்துட்டானுவோ... வுட முடியாதுங்கோ..... இந்த நாவல் பெண்களை இழிவு படுத்த அவர் எழுதவில்லை.... அப்போ இப்ப வித்து கடன் பெற்று குழந்தை பெறுவது மட்டும் என்ன?..... துவரகாசாமிநாதன்

திங்கள், 15 டிசம்பர், 2014

புதுத்துணி



புதுத்துணி எப்போதும் சூட்டில பிளக்கும்; எண்ணெய் குமிழியாய் கும்பல் கும்பலாய் தடுமாறித் தவிக்கும் தீபாவளி சவுளிக்கடையில் நானும் நண்பனும் ஏங்கித் தவிக்கிறது எழுபது ரூபாய் சட்டை பேத்திக்கு ஆடையெடுக்க அறுபது ரூபாயுடன் அலைபாயும் கிழவன் எதை எடுத்தாலும் ஒரே விலை எழுபது என்னையும் மனைவியையும் தவிர கூவியழைக்கும் தன் நெஞ்சம் பாராத வியாபாரி. துவாரகா சாமிநாதன் 9629272185

அழுக்குச் சட்டை கறை படிந்த சட்டைகளால் நிரம்பி வழிகிறது என் வீட்டு அறை துவைத்துப் பார்க்கிறேன் அலசி கழுவி கசக்கி பிழிகிறேன் நனைத்துத் திரும்பவும் ஊற வைக்கிறேன் நையப்புடைக்கிறேன். சட்டையின் கறை போகவில்லை மனைவியிடம் கொடுத்துப்பார்த்தேன் குழந்தையும் பழகிப் பார்த்தாள் சட்டையின் கறையைப்போக்க அம்மாவையும் அழைத்தேன் ஆடையின் கறை வெழுக்க முடியாதென்றதோடு தந்தையின் கறைப் பற்றியும் நொந்து கொண்டாள் உலகமய விளம்பரம் சொல்கின்றன கறை நல்லதாம் கை மடிப்பு கறை காக்கையின் எச்சம் இரத்தக் கறை மற்றும் தீக்கறை காலங்களின்;; எதிரெதிர் நிலையால் வாழ்வின் தத்துவங்கள் கறை படிந்த சட்டையில் பிரிந்த நூலாய் தொங்குகின்றன. கறையை மட்டுமே சுட்டிக்காண்பிக்கின்றது உலகம் கறை படிந்த உள்ளத்தை அணிந்து கொண்டு விரிகிறது என் வானம் சுருங்கிய சட்டையுடன். எந்த அவதார வண்ணானும் வராததால் வர்ண சட்டையின் கறையை போக்க முடியா கையாலாகத்தனத்துடன் நிர்வாணமாய் உலகத்தை பிரதிபலிக்கும் நான். துவாரகா சாமிநாதன் 9629272185

புதுத்துணி


புதுத்துணி எப்போதும் சூட்டில பிளக்கும்; எண்ணெய் குமிழியாய் கும்பல் கும்பலாய் தடுமாறித் தவிக்கும் தீபாவளி சவுளிக்கடையில் நானும் நண்பனும் ஏங்கித் தவிக்கிறது எழுபது ரூபாய் சட்டை பேத்திக்கு ஆடையெடுக்க அறுபது ரூபாயுடன் அலைபாயும் கிழவன் எதை எடுத்தாலும் ஒரே விலை எழுபது என்னையும் மனைவியையும் தவிர கூவியழைக்கும் தன் நெஞ்சம் பாராத வியாபாரி. துவாரகா சாமிநாதன் 9629272185

உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன...

உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன... இரவு வரும் வருத்தத்தில் மரங்கள் கனத்த இதயங்களுடன் அசைவின்றி அரவமின்றி ஊர்ந்து செல்கின்றன நரக ஊர்திகள் மாடுகள் வீடு திரும்புவது மறந்து புல் மேய்கின்றன. அணில் குட்டியொன்று என் வீட்டுத் தாவரத்தில் குதித்தோடிய போது மாலைச் சூரியனின் தங்க நிறம் பூசியதாய் மின்னுகிறது. அலைப்பேசிக் கம்பத்தில் அமரச்சென்ற ஊர்க்குருவிகள் அலைப்பேசி அழைப்பின் அதிர்வுகளில் கூடு திரும்புகின்றன. தூதுவளை குத்தின் அடியில் துணையைக் காணாது கானங் கோழிகள் எட்டி எட்டி பார்க்கின்றன. ‘பேப்பர’; தின்கின்றன ஊர் காளைகள்;. வயல் வெளிகளில் ‘பி;.டி’ நெல் விதைக்கப்பட்டுள்ளதாய் சுடுகாட்டு விளம்பர பலகை போல் ஒரு விபரீதப் பலகையில் உலகின் அழிவுப் பாதைகள் தெரிகின்றன அதன் விளிம்பில் தேன் சிட்டிற்கு விசம் கொடுக்கிறது ‘பிளாஸ்டிக் ரோசா’…… துவாரகா சாமிநாதன் 9629272185

வியாழன், 13 நவம்பர், 2014

என் வாழ்வில் வந்த நிறைய பராசக்தி தாய்கள்


என் வாழ்வில் வந்த நிறைய பராசக்தி தாய்கள் என் பிறப்பை தந்த தாய் கிருக்ஷ்ணவேணி, ஒரு வெகுளி, அப்பாவித் தாய், நிறைய கடமைகள் செய்தாள். பால்,மோர், தயிர், முட்டை, கோழி, ஆடு, மாடு வளர்த்து விற்று என்னை யும் வளர்த்தாள். அதன் பின் நான் வளரும் போது எங்கள் வீட்டில் வந்து தங்கியிருந்த சிலோன் அக்கா நான் அவளை அப்படித்தான் அழைப்பேன். அவள் பெயர் பிரேமா. என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாள். இன்று அவள் உயிருடன் இருக்கிறாளா என்று கூட தெரியாது. அவளின் அந்த பாசமான பரிவை அவள் என்னில் விதைத்த மொழியை, சொல்லை வைத்திருக்கிறேன். அவள் அருமையாகத் தேங்காய் பாரை இனிப்பு செய்வாள். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். அடுத்து என் நண்பனின் மனைவி விஜி இப்போது அவளை நாங்கள் தங்கையாக தத்து எடுத்துள்ளோம். எனது வாழ்வை சந்தோசமான பாதையில் மாற்றியவள். என் தயிர் குட்டி தங்கை, அவளை அப்படித்தான் செல்லமாக கூப்பிடுவேன். தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறாள் இரண்டு மகன்களுடன். அவளின் முதல் குழந்தை பிரசவிக்கும் போது நாங்கள் பட்ட துன்பம் அளவில் அடங்காதது. பின்னர் நான் கல்லூரி படிக்கும் போது என்னுடைய ஜுனியராக வந்து அந்த முட்டைக் கண் லாவண்யா. இப்போதும் அந்த முட்டைக்கண்ணில்தான் விழுந்து கிடக்கிறேன். என் வாழ்வில் ஒளியேற்றிய ஒரு குடும்ப விளக்காக அவள் என்னுடன் வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறாள். அடுத்து என் சிறந்த மாணவர்களில் பெண்ணாக வந்தவள் குர்சியா பானு சிறந்த அறிவாளி பெண்ணவள். அடுத்து ஆயிசா, சிந்து,பூரணி, ப்ரியா, சோனியா இவர்கள் என்னிடம் சரிக்கு சரி போட்டி போட்டுக் கொண்டு சிந்தித்தார்கள். என்னை கேள்வி கேட்டு மாற்றினார்கள், என்னிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். அவர்களின் அன்பு பரிசுத்தமானது. நான் தான் ஆயிசாவிடம் எக்கச்சக்கமான உரிமை எடுத்துக் கொண்டேன். அது தவறு என்று இப்பொது உணர்கிறேன். ஆனாலும் அவர்கள் என் மேல் செலுத்திய அன்பு உண்மையானது. இந்த உலகத்தின் பார்வைக்கு அது எப்படி வேண்டுமானால்லும் தெரியலாம். அது ஒளி இல்லாத கண்களைக் கொண்டு பார்க்க கூடியது. பின்னர் வேதாத்ரியை குருவாக ஏற்ற பின்னர் என்னை மாற்றிய பெண்களில் முதலில் செயலெட்சுமி டீச்சர். அது ஒரு அன்பு கனியை மட்டுமே தரும் ஒரு கற்பக தரு. வெள்ளை முடி, ஏந்திய நடை, எப்போதும் அமைதியான பார்வை. என் பெண் குரு. அவர்களின் ஒரு ஸ்பரிசத்தை நான் இப்போதும் உணர்கிறேன்.அங்கேயே நான் தவம் என்னை தம்பியாக தத்து எடுத்துக்கொண்டவள் எனது அன்னை இந்திரா. அவள் ஒரு தோட்டியாள் என் மீது படிந்த கசடுகளை களைந்தவள். பராசக்தி, ஆத்மீக பலம் கொணடவள், சிறந்த வடிகால், அன்பு பொழியும் ஊற்று. ஆதி அன்னையின் குணம். எனக்கு வாழ்வின் பாதையை ஆன்மீகமாக அமைத்து கொடுத்தவள்.தற்போது குழந்தைகளுடன் திருவாரூரில் வசித்து வருகிறாள். அடுத்து என் ஞான குருவான முத்துகுமரேசன் அய்யாவின் பதியும்,அன்னையுமானவள், என்னுக்கும் தாயானவள். பராசக்தி, காளித்தாய். கண்களில் ஒளி வீசியே கருவை சுத்தம் செய்பவள் கிருக்ஷ்ணவேணி. எனது இரண்டாம் தாய். என்னோடே சக பயணி, சக தொழிலாளி, தோழி, சகோதரி, வீரமானவள். ஒரு நல்ல மனுக்ஷி.. அன்னை வேளாங்கன்னித்தாய், மாதா. தைரியமானவள். கடமை தவறாதவள். அன்பான வார்த்தைகளைக் கொண்டே வேலை வாங்குபவள். அனிதாராணி. தற்போது புதுக்கோட்டையில் என்னுடன் வேலை பார்த்து வருகிறாள். மேலே நான் குறிப்பிட்ட பெண்கள் அனைவரும் அன்பு என்ற ஒரு மந்திர சொல்லையே வாழ்வாக மாற்றி தன் சக பயணிகளையும் தன் அன்பால் மாற்ற தகுந்தவர்கள். எனக்கும் அவர்களுக்குமான உறவு நிலை வயது வித்தியாசங்கள், பால் நிலைகள், காலங்கள், மனத்தடைகள், வேலிகள், குருடான பார்வைகள் எதுவுமே சொல்ல முடியாத, அனுகாத, சுயநலமற்ற, சுத்தமான அன்பு நிலையல் உருவானது. என்றும் சாகாதது. அவர்களோ யாருமோ எது செய்தாலும் அழியா நிலை பெற்றது. அது தாயுள்ளத்திலிருந்து வரும் அருவி அது கடலில் சேரும் வரை ஓடிக் கொண்டேயிருக்கும். இவர்கள் என் ஆன்மாவை சுத்தப் படுத்த வந்தவர்கள். பராசக்தியின் வடிவம், காளித்தாய், அன்னை மாதா. அன்பை இவர்களே நினைத்தாலும் அடைக்க முடியாது. அதற்கு தாழில்லை. என்னை உருவாக்கி, செதுக்கி உலக்த்தில் உலவ விட வந்த தேவ தூதர்கள். தேவதைகள். நன்றி வாழ்க வளமுடன் துவாரகாசாமிநாதன். 9629272185

சனி, 1 நவம்பர், 2014

எனக்கு கிடைத்த குருவினைப் பற்றி........

எனக்கு கிடைத்த குருவினைப் பற்றி........ நான் சிறிய வயதில் விவேகனந்தரை அவரது புத்தகத்தை குருவாக நினைந்து படித்தும் வணங்கியும் வந்தேன். அதன் பின் ஏசு நாதரை வணங்கினேன். அவர் வாசங்களை நான் பின் தொடர்ந்தேன். 1995 பத்தாவது மாதம் எனக்கு வேதாத்ரி கிடைத்தார் அதன் பின் தான் என் வாழ்க்கை திருப்புமுனையாக அமைந்தது, நான் 12ம் வகுப்பு தவறியிருந்தேன், தேறினேன். தொடர்ச்சியாக தவறான நண்பர்களால் வழி நடத்தப்பட்டு ஜெயிலுக்கும் சென்று வந்தேன். அத்தவறுகளை உணர்ந்தேன். இராச இராச சோழன் என்பவரை சந்தித்தேன் அவர்தான் எனக்கு காந்தியைப் பற்றி விரிவான விவாதம் நடத்த அனுமதி தந்து காந்தியின் அஹிம்சையை பின்பற்ற செய்தார். காமம் பற்றிய விரிவான கருத்துக்களை ஒசோவிடம் கற்றேன். அதை தொடர்ந்து வேதாத்ரிய சிந்தனைகளை ஆர்.வி.கணேசனிடம் நிறைய கேள்விகள் கேட்டு விவாதம் செய்தேன் குருவயே குறை கூறினேன். ஆனாலும் அவரையே பின் பற்றினேன். இப்படி நிறைய குருக்கள் எனக்கு கிடைத்தாலும். தற்போது கிடைத்த இருவர்தான் என்னை தெளிவான பாதையில் பயணிக்க செய்துள்ளர்கள்.. அவரில் ஒருவர் செசி அமைப்பு செயலாள்ர் திரு செயபிரகாசம், அவர் பாதையும் காந்திய பார்வைதான் மேலும் அமைதி, எளிமை, செயலின் முன்னுதாரன புருசர். அனுபூதியான ஞான பெட்டகம். அவர் ஒரு அறிவுக்களஞ்சியம், அறிவு ஜீவி. அவர் மாயா அன்னையைப் பற்றி சொல்லும் விதம், காந்தியைப் பற்றி பார்க்கும் கோணம் நம்மை திருத்தியமைக்கும். நம் வாழ்வின் பணியை உணர்த்தும். மதுரையில் வாழ்ந்து நிறைய பேரை வாழ்விலிருந்து பெருவாழ்விற்கு கொண்டு செல்லுகிறார். என்னையும் அப்படிதான் செய்தார். இரண்டாமவர் புதுக்கோட்டையில் இஞ்னியருக்கு படித்துவிட்டு விவசாயம் பண்ணிக்கொண்டு நிறைய பேரை வாழ வைத்துக் கொண்டுள்ளார். அவர்தான் முத்துகுமரேசன் அய்யா. எனது தற்போதய குரு என்னை செதுக்கும் சிற்பி, என் வாழ்வை செப்பணிடும் விவசாயி. மண்ணை செப்பணிடுவது போல். தன் வீட்டிலேயே தவ மையம் வைத்துக்கொண்டு அதை ஒரு பன் முக பல்கலைக்கூடமாக வைத்து பல வருடமாக நடத்தி வருகிறார். இவரின் ஆன்மீக மக்களின் சேவை மட்டுமே. குறையுடைய ஆன்மீகவதிகளை உலுக்கி எடுப்பார். அரைகுறைகளை தட்டி விடுவார். பயம் கொள்ளார். எங்களை போன்றோருக்கு வழி காட்டியாகவும், ஒரு லிடராகவும். பணிவு சொல்லி தரும் பண்பாளராகவும் இருக்கிறார். சிலர் மிளகாயை வடையில் போட்டு வேக வைப்பார்கள் காரம் கம்மியாகத்தான் இருக்கும், ஆனால் அதையே அடுப்பில், நெருப்பில் போட்டால் என்னாகும் பாருங்கள். அந்த வேலைத்தான் இந்த இருவரும் செய்கிறார்கள். எங்களை போன்றோரைப் பிடித்து நெருப்பில் போட்டு காரத்தை ஆன்மாவில் கூட்டுகிறார்கள். அது போல நிறை குடம் தழும்பாது என்பார்கள். ஓட்டை குடமும் தழும்பாது என்பதை புரிந்து கொண்டு இதுபோல நல்ல குருவினை தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றி பெறுங்கள். உங்கள் குரு நிறை குடமா? ஓட்டை குடமுமா? என்பதை உணருங்கள். அவர்களை நிறைய பரிசோதனை செய்யுங்கள் அதற்கு அனுமதி தருகிறார்களா? என்று பாருங்கள். ஒரு நல்ல குரு தன்னை மறைத்துக்கொண்டு மாணவரை முன்னிருத்துகிறார். நன்றி வாழ்க வளமுடன்... துவாரகா சாமி நாதன் 9629272185

செவ்வாய், 28 அக்டோபர், 2014

இருளுக்குள் ஒளிரும் மனிதர்கள்

இருளுக்குள் ஒளிரும் மனிதர்கள் அது ஒரு இருளான குகை உற்ற தோழனோடுதான் சென்றேன் இருவரும் இருளை படிக்க முற்பட்டோம் அதற்குள் இருள் என்னை அதனுள் அமிழ்த்தி விளையாடியது எனக்கோ மூச்சு முட்டிக்கொண்டு வந்தது நண்பன் சொன்னான் தான் இருளை நேசிப்பதாகவும் தன்னையே இருளாக்கி பார்ப்பதாகவும் அப்போது அவனுக்குள் மஞ்சள் ஒளி தெரிந்தது அந்த ஒளியைக்கொண்டுதான் நாங்கள் வீட்டுக்குள்ளிருந்த இருளைப்படித்தோம் தெரு ஓரத்திலிருந்த இருளையும் பார்த்தோம் என் ஆழ் மனத்திற்குள்ளிருந்த அம்மாவின் கருவறை இருளைக் கூட பார்த்தோம் மெல்ல இருள் இருளிலேயே கரைந்து மஞ்சள் ஒளி வெண்மையானது இதனைக்கொண்டுதான் நாங்கள் புதியவுலகை கட்டமைக்க இருக்கிறோம் புதியன நிறைய படைக்க இருக்கிறோம் அந்த ஒளியைக்கொண்டுதான் இவ்வுலகை இருளிலிருந்து ஒளிக்கும் வாழ்விலிருந்து பெரு வாழ்வுக்கும் கொண்டு செல்லயிருக்கிறோம் அந்த குகை இருளுக்குள்ளேதான் இந்த மஞ்சள் ஒளியும் ஒளிந்திருந்ததெனவும் ஒளிதான் இருளை மறைக்கிறதெனவும் செய பிரகாசம் சொன்னார் என் கண்ணில் ஊனம்... மனம் போலவே அந்த குகைக்குள்தான் ஒரு கருப்பு தேவதை பழக் கூடை சுமந்து வந்தாள் கண்ணாடியணிந்த கிழவர் தறி சுற்றிக்கொண்டிருந்தார் இவர்கள் தங்கள் ஒளியைக் கொண்டுதான் எங்களை அடையாளம் கண்டார்கள் அவர்களையும் இருளாகத்தான் பார்த்தோம் எங்களுக்குள் ஒளி வரும் வரை........... எப்படியோ நாங்கள் இருளை நேசிக்க கொஞ்சம் ஒளி பெற்று வந்தோம். எங்கள் மனத்தடியில் கிடக்கும் கசடை போக்க......... துவாரகா சாமி நாதன் 9629272185

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

திங்கள், 28 ஜூலை, 2014

குமிழ்- கனவுகளை வரிசையில் நின்று வாங்குகிறேன்


குமிழ்- கனவுகளை வரிசையில் நின்று வாங்குகிறேன்


 நேற்று நண்பனுடன் உரையாடிய பின்னும்
கற்பமான மனைவியைக் கூட்டிக்கொண்டு
அவளின்  'கார்' வாங்கும் கனவுடன்
அங்கு சென்றேன்
காத்திருப்பு
அங்காலாய்ப்பு இடையிடையே
காதல் தகிப்பு
ஊடல் பகிர்வு
சிறு எரிச்சல்
அவளுக்கு வியர்த்தது
எனக்கும்
அவளுக்கு பதிலாக வரிசையில்
என்னை போலவே கனவுகளை முதுகில் சுமந்து கொண்டு
 நிறைய பேர்
வேண்டாம் என்று தோன்றும் போது
'கார்' கனவு விண்ணப்பம்
அவளின் கண்ணுக்குள் தெரியும்
 நண்பனின் அலைபேசி அழைப்பு ஊடறுக்கும்
இடையில் குறுக்கிட்டு
அலுவலக த் தொழிலாளி வேறு
'கார்டு' வந்ததா?
எல்லாம் சரியாக உள்ளதா? என்று கேட்டான்
முகவரி மாறியதை எழுததாற்கு
என் அலைச்சல்களின் கோப அம்புகளை
அவன் மீது பாய்ச்சினேன்
துடைத்துக் கொண்டே அவன் ஒரே பாட்டையே
திரும்பவும் பாடினான்
முக்கியமான 'தாள்' இருக்கா என்றான்
குறைவாக உள்ள்து என்றேன்
எல்லாம் சரியாகி உள்ளே போகும் முன்
 நண்பன் வேகமாக வந்து
விண்ணப்பத்தை கிழித்துப்போட்டு
மனைவியையும் இழுத்துக் கொண்டு சென்றான்
 நான் மட்டும்
வேகா தலையுடனும் சாகா காலுடனும்
கீழ் கொட்டிய மன அதிர்வுகளை
பொறுக்கிக் கொண்டே
வெளி வந்தேன்
அந்த ஊனமுற்றோர்களுக்கான
சிறப்பு வேலை வாய்ப்பு
அலுவலகத்தை விட்டு..........................

துவாரகாசாமிநாதன்
9629272185  

ஒளிர்ந்த பின் எங்கே போகிறாய்

ஒளிர்ந்த பின் எங்கே போகிறாய்

மெழுகு வர்த்தியா?
தங்க நிறமப் பிரகாசமா?
செந்நிறப்பிரிகையோ?
கரும்புகையோ?
 நீலமோ?
இதில் எது 'நான்'?

உரையாடலிலா?
ஆழ் மெளனத்திலா?
இதில் என்னுடைய 'நான்'
எங்கிருந்து பிறக்கிறது

எல்லோருக்குமாய் உருகினால் எனக்கு
என்ன பெயர்?
பிரகாசிப்பதிலும்
பிரகாசிக்க வேண்டுமென்பதிலும்
அடங்கிருக்கின்றன‌வா?எல்லோருடைய‌  'நானும்'

உண்மையில் நானே உருகும் போது
என்னவாகின்றேன்
இருளின் பரந்த வெளியில் மருளும் வாழ்க்கை
மெழுகின் ஒளியில் மிரண்டு
உருகினால் வருமோ? ஞானம்.

மெழுகு தீர்ந்தால் சகிக்க முடியாமல்
வந்தே தீரும் மரணம்
உருகும் எல்லா மெழுகுமே
இருள் போக்கத்தான் உருகுமோ?

ஒவ்வொரு முறையும்
என் வாழ்வு
விட்டில் பூச்சியாய் மாறும் போது
உன் அதிர்வுகளை
அடர்ந்த காட்டில்
நீரருந்தும் மான் போல
உணர்கிறேன்
எப்பொதுமே நிதர்சனமாய் ஒளிரும் நீ
ஒளிர்ந்த பின் எங்கே போகிறாய்
உன் ஆத்ம விளக்கை ஏற்ற.........

துவாரகாசாமிநாதன்
9629272185

சனி, 8 பிப்ரவரி, 2014

இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது

இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது


எதைக்கொண்டும் 
நிரப்பி விட முடிவதில்லை 
எனது வெற்றிடத்தை...!

வியர்த்து வெளியேறுகிறது 
எனது வெறுமை....!

கோப்பைகளனைத்தும்
சங்கடங்களால் நிரம்பி வழிகின்றன...!
உரித்த கோழியாய் 
தொங்கி கொண்டிருக்கிறேன் 
அதன் விளிம்பில்....!

கவிதை கொண்டு நிரப்பிவிட முயல்கிறேன் 
எனது வெற்றிடத்தை...!

வெறுமை 
எல்லா உணர்வுகளின் 
கலவையாக வெறுமை 
விருப்பிலும்...... வெறுப்பிலும்....
பிறப்பெடுக்கிறது.

கிளைகளில்லா மரம் போல 
மரத்துப்போகிறது மனம் 
உணர்ச்சியற்று.......!
'நம்பிக்கை' நினைவுகளாலேயே
நிரம்பி விடுகின்றன 

ஒவ்வொரு முனைகளிலும் இரத்தம் 
வடியும் கதியை மனம்...!
பேய்க்காற்று வீசுகிறது என் மூச்சில் 
ஏக்கங்களின் சளி ஒழுகுகிறது...!
காறித்துப்புகிறேன்
இந்த வாழ்வின் வெறுமையை...!

வெற்றிடம் 
தோன்றி மறைகிறது 
இருட்டின் இரு முனைகளிலும் 
இருள்தான் மிஞ்சுகிறது 
மெதுவாக வெளிச்சம் பரவுகிறது 
வெறுமை அகன்றோடுகிறது....
பூக்கள் பூக்கின்றன 
கவிதையால்.....!

துவராகா சாமிநாதன்  
9629272185

திரும்பவும் நேசிக்கிறேன் மரணத்தை

திரும்பவும் நேசிக்கிறேன் மரணத்தை

எந்த குறுக்கீடுகளுமில்லாமல்
எனது ஆன்மாவை 
மீட்டுகின்றன மரங்கள்....!
தனிமையில் 
எனது உணர்வு நரம்புகள் 
அறுந்து விழுகின்றன...!

நான் திரும்பவும் 
நேசிக்கிறேன் 
மரணத்தையும்
தனிமையும் 
நம் வாழ்வையும்....!

எனது ஆன்மா 
கண்ணாடித்துகல்களாய்....!
உடைந்து நொறுங்கி 
விழுகிறது 
ஒரே நிசப்தம்...!

கடைசியாய் ஒன்று 
நீதானே 
எனது புதிய சொர்க்கத்தை 
கண்டு கொடுத்தாய்

மெதுவாக மூழ்குகிறேன்....! 
உன்னில் நான். 

துவாரகா சாமிநாதன் 
9629272185

என் கவிதைகள்

துன்பத்திலிருந்து
விடுதலை வேண்டி
கதறி அழுகிறேன் ....!
ஆழ்ந்த மவுனம்.
வீரிட்டு எழுகிறேன் பாதியில்
காமத்தின் உட்புகுந்து தேடுகிறேன்
என்னை ....!
உயிர் சிதறி
தெறித் தோடுகிறது பிரபஞ்சத்தில்
(ழி)(லி)யின்றி....!

அவள்  உடல் பியித்து போடுகிறாள்
எங்கும் நிலை கொள்ளாமல்
அலைகிறது மனம்
பிய்ந்து தொங்குகிறது கலையில் கொஞ்சம்.

உடல் சிராய்த்து சிவப்பில் தேடுகிறேன்
என்னை எங்கு தொலைத்தாள்? அவள்.

நீரின்றி வாடுகிறது வேர்
மலர் இன்னும் மலரவில்லை....!

ஆணவப் பூச்சில் முகம் விகாரமானது
ஆழ உட்புகுந்து போய்க்கொண்டிருக்கிறேன்
இன்னும் தேடிய பாடில்லை...! இருத்தலை
என்னை எங்கு தொலைத்தாள்? அவள்.

தற்செயலாய் பிரபஞ்ச நுனி எட்டிப்
பார்க்கிறது என்னுள் .....!
காலத்தின் வேகத்தினை  எட்டி
பிடிக்க முடியவில்லை
என்னை திறந்து மூடவே
நேரம் சரியாகிவிடுகிறது

திறந்து போடவா ? மூடவா? குழப்பத்தில் நான்!

கடைசியில் வாழ்வே மாயம்
கால வெளிதனில்
துன்பமும் இன்பமும்
திறந்து மூடுகிறது என் வாழ்வை..!

துவாரகா சாமிநாதன்
9629272185

நரகத்தின் வாயிலிலிருந்து

நரகத்தின் வாயிலிலிருந்து
 
 நான் ஏன் அப்படி செய்தேன்?
என்னுள் அது எப்படி நிகழ் ந்தது?
யாவரும் அடக்கி வைத்த காமத்தை
என்னுள் புதைத்து விட்டார்களோ?
மனித காமத்தின் மொத்த வடிகாலாய்
 நான் மாறி விட்டேனா?
புராதன நகரத்தில் பிறந்த நானா அப்படி செய்தேன்?
ந் நகரத்தின் இசை கேட்காமல் இப்படி ஆகி விட்டேனொ?
 
எந்த பழத்தை தின்றதற்காக
எனக்கு இந்த தண்டனை...
 
யோனிகளில் வேறுபாடு பார்க்காமல் விட்டுவிட்டேனா?
மனித ஆன்மாவில் இன்னும் மிருகம் ஒட்டிக்கொண்டிருப்பதற்கு உதாரணமாகி விட்டேனா?
 
அய்யகோ! பாதகி....எனக்கு மகளாய் வந்து பிற ந்தாளே!
மகளே ஆயிசா என்னை மன்னித்து விடு....
சட்டங்களை விட மன்னிப்புதான் மாற்றம் தரும்.
எந்த கடவுளாவது இந்த திருவிளையாடலை நடத்தியதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளுமா?
விதியே! எந்த நேரத்தில் எனை கருவுற்றாய்
ஊடகத்தில் தங்கமீன்களை பார்க்காமல்
தகாதவற்றை பார்த்து தொலைத்தேனே...
 
இந்த சமூகத்தின் இழிவான பார்வை என் மகள் பெற்ற மகவுகளின் மேல் விழாமல் மறைத்து வையுங்கள் இந்த கவிதையை
எந்த முறையிலும் ஆவணப்படுத்தாதீர்..
 நானே கடைசியாய்
 நரகத்தின் வாயிலில்
இனி இந்த உடலும் இந்த பிறப்பும் வேண்டாம்
காசிக்கு போவதற்குள்
இங்கேயே பிணமாய்
உலகத்தின் ஒட்டு மொத்த அழுத்தத்தால்....
துவாரகாசாமி நாதன்
9629272185

வியாழன், 30 ஜனவரி, 2014

முக நூல்

முக நூல்
 
எனது வன்மங்களை
பிரதியிடும் போது
சில
விளம்பர படுத்தலும் நிகழ்ந்து விடுகிறது
 
ஒவ்வொரு முகஙகளிலும் தேடுகிறேன் நல்லவைகள் ஒட்டியிருக்கின்றதாயென
வலைத்தளங்களின் வலைகளில்
இண்டு இடுக்கெல்லாம் ஒடுகிறது
எனது எலி மனம்
 
சில வேளைகளில் அங்கே கொட்டப்படும்
வன்மங்களின் குப்பைகளில் 
விசாரிப்புகளில்
விமர்சனங்களில்
புதைந்து சிதைந்தும் விடுகிறேன்
 
மனச்சிக்களின் கார்ணமாக அதன் நடுப்பக்கத்தில்
செருகப்பட்டுவிடுகிறேன்
 
சில சொடுக்குகளில் விபரீதம் நடத்துகிறேன்
சில இடுகைகளில் உற்சாகமடைகிறேன்
 
கருப்பு, சிகப்பு, வெள்ளை மஞ்சள்  நீலமென நிரம்பி வழிகிறது
என் முகமெங்கும்
 
எல்லோருடைய மனங்களில் எழும்
வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ளும்
தொட்டியாய் இந்த முக நூல்.........
 
துவாரகா  சாமி நாதன்
9629272185