இந்த வலைப் பூ என்னுடைய மேலாண்மை மற்றும் வேதாத்ரிய கருத்துகளை பதியவும் எழுதவும் வைத்திருக்கிறேன். நான் மேலாண்மை மாணவர்களுக்கு பதினைந்து ஆண்டுகளாகவும், 20 ஆண்டுகளாக வேதாத்ரிய கருத்தை பேசி வருவதாலும் அதை எல்லாம் எழுத்தாக இந்த சமூகத்திற்கு சொல்லவே இவ்வலைப்பூ புதிப்பிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், 28 அக்டோபர், 2014
இருளுக்குள் ஒளிரும் மனிதர்கள்
இருளுக்குள் ஒளிரும் மனிதர்கள்
அது ஒரு இருளான குகை
உற்ற தோழனோடுதான் சென்றேன்
இருவரும்
இருளை படிக்க முற்பட்டோம்
அதற்குள்
இருள் என்னை அதனுள் அமிழ்த்தி விளையாடியது
எனக்கோ மூச்சு முட்டிக்கொண்டு வந்தது
நண்பன் சொன்னான்
தான் இருளை நேசிப்பதாகவும்
தன்னையே இருளாக்கி பார்ப்பதாகவும்
அப்போது
அவனுக்குள்
மஞ்சள் ஒளி தெரிந்தது
அந்த ஒளியைக்கொண்டுதான்
நாங்கள்
வீட்டுக்குள்ளிருந்த இருளைப்படித்தோம்
தெரு ஓரத்திலிருந்த இருளையும் பார்த்தோம்
என் ஆழ் மனத்திற்குள்ளிருந்த
அம்மாவின் கருவறை இருளைக் கூட பார்த்தோம்
மெல்ல இருள் இருளிலேயே கரைந்து மஞ்சள் ஒளி
வெண்மையானது
இதனைக்கொண்டுதான்
நாங்கள்
புதியவுலகை
கட்டமைக்க இருக்கிறோம்
புதியன நிறைய
படைக்க இருக்கிறோம்
அந்த ஒளியைக்கொண்டுதான்
இவ்வுலகை
இருளிலிருந்து ஒளிக்கும்
வாழ்விலிருந்து பெரு வாழ்வுக்கும்
கொண்டு செல்லயிருக்கிறோம்
அந்த குகை இருளுக்குள்ளேதான்
இந்த மஞ்சள் ஒளியும்
ஒளிந்திருந்ததெனவும்
ஒளிதான் இருளை மறைக்கிறதெனவும்
செய பிரகாசம் சொன்னார்
என் கண்ணில் ஊனம்... மனம் போலவே
அந்த குகைக்குள்தான்
ஒரு கருப்பு தேவதை பழக் கூடை சுமந்து வந்தாள்
கண்ணாடியணிந்த
கிழவர் தறி சுற்றிக்கொண்டிருந்தார்
இவர்கள் தங்கள் ஒளியைக் கொண்டுதான்
எங்களை அடையாளம் கண்டார்கள்
அவர்களையும் இருளாகத்தான் பார்த்தோம்
எங்களுக்குள் ஒளி வரும் வரை...........
எப்படியோ
நாங்கள் இருளை நேசிக்க
கொஞ்சம் ஒளி பெற்று வந்தோம்.
எங்கள் மனத்தடியில் கிடக்கும்
கசடை போக்க.........
துவாரகா சாமி நாதன்
9629272185
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக