சனி, 8 பிப்ரவரி, 2014

இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது

இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது


எதைக்கொண்டும் 
நிரப்பி விட முடிவதில்லை 
எனது வெற்றிடத்தை...!

வியர்த்து வெளியேறுகிறது 
எனது வெறுமை....!

கோப்பைகளனைத்தும்
சங்கடங்களால் நிரம்பி வழிகின்றன...!
உரித்த கோழியாய் 
தொங்கி கொண்டிருக்கிறேன் 
அதன் விளிம்பில்....!

கவிதை கொண்டு நிரப்பிவிட முயல்கிறேன் 
எனது வெற்றிடத்தை...!

வெறுமை 
எல்லா உணர்வுகளின் 
கலவையாக வெறுமை 
விருப்பிலும்...... வெறுப்பிலும்....
பிறப்பெடுக்கிறது.

கிளைகளில்லா மரம் போல 
மரத்துப்போகிறது மனம் 
உணர்ச்சியற்று.......!
'நம்பிக்கை' நினைவுகளாலேயே
நிரம்பி விடுகின்றன 

ஒவ்வொரு முனைகளிலும் இரத்தம் 
வடியும் கதியை மனம்...!
பேய்க்காற்று வீசுகிறது என் மூச்சில் 
ஏக்கங்களின் சளி ஒழுகுகிறது...!
காறித்துப்புகிறேன்
இந்த வாழ்வின் வெறுமையை...!

வெற்றிடம் 
தோன்றி மறைகிறது 
இருட்டின் இரு முனைகளிலும் 
இருள்தான் மிஞ்சுகிறது 
மெதுவாக வெளிச்சம் பரவுகிறது 
வெறுமை அகன்றோடுகிறது....
பூக்கள் பூக்கின்றன 
கவிதையால்.....!

துவராகா சாமிநாதன்  
9629272185

திரும்பவும் நேசிக்கிறேன் மரணத்தை

திரும்பவும் நேசிக்கிறேன் மரணத்தை

எந்த குறுக்கீடுகளுமில்லாமல்
எனது ஆன்மாவை 
மீட்டுகின்றன மரங்கள்....!
தனிமையில் 
எனது உணர்வு நரம்புகள் 
அறுந்து விழுகின்றன...!

நான் திரும்பவும் 
நேசிக்கிறேன் 
மரணத்தையும்
தனிமையும் 
நம் வாழ்வையும்....!

எனது ஆன்மா 
கண்ணாடித்துகல்களாய்....!
உடைந்து நொறுங்கி 
விழுகிறது 
ஒரே நிசப்தம்...!

கடைசியாய் ஒன்று 
நீதானே 
எனது புதிய சொர்க்கத்தை 
கண்டு கொடுத்தாய்

மெதுவாக மூழ்குகிறேன்....! 
உன்னில் நான். 

துவாரகா சாமிநாதன் 
9629272185

என் கவிதைகள்

துன்பத்திலிருந்து
விடுதலை வேண்டி
கதறி அழுகிறேன் ....!
ஆழ்ந்த மவுனம்.
வீரிட்டு எழுகிறேன் பாதியில்
காமத்தின் உட்புகுந்து தேடுகிறேன்
என்னை ....!
உயிர் சிதறி
தெறித் தோடுகிறது பிரபஞ்சத்தில்
(ழி)(லி)யின்றி....!

அவள்  உடல் பியித்து போடுகிறாள்
எங்கும் நிலை கொள்ளாமல்
அலைகிறது மனம்
பிய்ந்து தொங்குகிறது கலையில் கொஞ்சம்.

உடல் சிராய்த்து சிவப்பில் தேடுகிறேன்
என்னை எங்கு தொலைத்தாள்? அவள்.

நீரின்றி வாடுகிறது வேர்
மலர் இன்னும் மலரவில்லை....!

ஆணவப் பூச்சில் முகம் விகாரமானது
ஆழ உட்புகுந்து போய்க்கொண்டிருக்கிறேன்
இன்னும் தேடிய பாடில்லை...! இருத்தலை
என்னை எங்கு தொலைத்தாள்? அவள்.

தற்செயலாய் பிரபஞ்ச நுனி எட்டிப்
பார்க்கிறது என்னுள் .....!
காலத்தின் வேகத்தினை  எட்டி
பிடிக்க முடியவில்லை
என்னை திறந்து மூடவே
நேரம் சரியாகிவிடுகிறது

திறந்து போடவா ? மூடவா? குழப்பத்தில் நான்!

கடைசியில் வாழ்வே மாயம்
கால வெளிதனில்
துன்பமும் இன்பமும்
திறந்து மூடுகிறது என் வாழ்வை..!

துவாரகா சாமிநாதன்
9629272185

நரகத்தின் வாயிலிலிருந்து

நரகத்தின் வாயிலிலிருந்து
 
 நான் ஏன் அப்படி செய்தேன்?
என்னுள் அது எப்படி நிகழ் ந்தது?
யாவரும் அடக்கி வைத்த காமத்தை
என்னுள் புதைத்து விட்டார்களோ?
மனித காமத்தின் மொத்த வடிகாலாய்
 நான் மாறி விட்டேனா?
புராதன நகரத்தில் பிறந்த நானா அப்படி செய்தேன்?
ந் நகரத்தின் இசை கேட்காமல் இப்படி ஆகி விட்டேனொ?
 
எந்த பழத்தை தின்றதற்காக
எனக்கு இந்த தண்டனை...
 
யோனிகளில் வேறுபாடு பார்க்காமல் விட்டுவிட்டேனா?
மனித ஆன்மாவில் இன்னும் மிருகம் ஒட்டிக்கொண்டிருப்பதற்கு உதாரணமாகி விட்டேனா?
 
அய்யகோ! பாதகி....எனக்கு மகளாய் வந்து பிற ந்தாளே!
மகளே ஆயிசா என்னை மன்னித்து விடு....
சட்டங்களை விட மன்னிப்புதான் மாற்றம் தரும்.
எந்த கடவுளாவது இந்த திருவிளையாடலை நடத்தியதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளுமா?
விதியே! எந்த நேரத்தில் எனை கருவுற்றாய்
ஊடகத்தில் தங்கமீன்களை பார்க்காமல்
தகாதவற்றை பார்த்து தொலைத்தேனே...
 
இந்த சமூகத்தின் இழிவான பார்வை என் மகள் பெற்ற மகவுகளின் மேல் விழாமல் மறைத்து வையுங்கள் இந்த கவிதையை
எந்த முறையிலும் ஆவணப்படுத்தாதீர்..
 நானே கடைசியாய்
 நரகத்தின் வாயிலில்
இனி இந்த உடலும் இந்த பிறப்பும் வேண்டாம்
காசிக்கு போவதற்குள்
இங்கேயே பிணமாய்
உலகத்தின் ஒட்டு மொத்த அழுத்தத்தால்....
துவாரகாசாமி நாதன்
9629272185