அறுபத்துநான்கு கலை தமிழ் விளக்கம்
மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்
அந்த அறுபத்துநாலுகலைகளின் பட்டியலை மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of the Tamil Language) Vol. 1 , Part - 1 பக்கம் 545-548 வரையிலும் கண்டுள்ளபடி இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
`காமசூத்திரம்' என்னும் பழைய சமற்கிருத நூலிற் சொல்லப்பட்டுள்ள அறுபத்துநான்கு கலைகளும் அறிவியல்களும்.
கலை தமிழ் விளக்கம்:-
1. அக்கர இலக்கணம் எழுத்திலக்கணம்
2. லிகிதம் (இலிகிதம்) எழுத்தாற்றல்
3. கணிதம் கணிதவியல்
4. வேதம் மறை நூல்
5. புராணம் தொன்மம்
6. வியாகரணம் இலக்கணவியல்
7. நீதி சாஸ்திரம் நய நூல்
8. சோதிடம் கணியக் கலை
9. தரும சாஸ்திரம் அறத்து பால்
10. யோகம் ஓகக் கலை
11. மந்திரம் மந்திரக் கலை
12. சகுனம் நிமித்தக் கலை
13. சிற்பம் கம்மியக் கலை
14. வைத்தியம் மருத்துவக் கலை
15. உருவ சாஸ்திரம் உருப்பமைவு
16. இதிகாசம் மறவனப்பு
17. காவியம் வனப்பு
18. அலங்காரம் அணி இயல்
19. மதுர பாடனம் இனிது மொழிதல்
20. நாடகம் நாடகக் கலை
21. நிருத்தம் ஆடற் கலை
22. சத்த பிரமம் ஒலிநுட்ப அறிவு
23. வீணை யாழ் இயல்
24. வேனு குழலிசை
25. மிருதங்கம் மத்தள நூல்
26. தாளம் தாள இயல்
27. அகத்திர பரீட்சை வில்லாற்றல்
28. கனக பரீட்சை பொன் நோட்டம்
29. இரத பரீட்சை தேர் பயிற்சி
30. கஜ பரீட்சை யானையேற்றம்
31. அசுவ பரீட்சை குதிரையேற்றம்
32. இரத்தின பரீட்சை மணி நோட்டம்
33. பூ பரீட்சை மண்ணியல்
34. சங்கிராம இலக்கணம் போர்ப் பயிற்சி
35. மல்யுத்தம் கைகலப்பு
36. ஆகர்ஷணம் கவிர்ச்சியல்
37. உச்சாடணம் ஓட்டுகை
38. வித்து வேஷணம் நட்பு பிரிக்கை
39. மதன சாஸ்திரம் மயக்குக் கலை
40. மோகனம் புணருங் கலை (காம சாத்திரம்)
41. வசீகரணம் வசியக் கலை
42. இரசவாதம் இதளியக் கலை
43. காந்தர்வ விவாதம் இன்னிசைப் பயிற்சி
44. பைபீல வாதம் பிறவுயிர் மொழி
45. தாது வாதம் நாடிப் பயிற்சி
46. கெளுத்துக வாதம் மகிழுறுத்தம்
47. காருடம் கலுழம்
48. நட்டம் இழப்பறிகை
49. முட்டி மறைத்ததையறிதல்
50. ஆகாய பிரவேசம் வான்புகுதல்
51. ஆகாய கமனம் வான் செல்கை
52. பரகாயப் பிரவேசம் கூடுவிட்டு கூடுபாய்தல்
53. அதிரிச்யம் தன்னுறு கரத்தல்
54. இந்திர ஜாலம் மாயம்
55. மகேந்திர ஜாலம் பெருமாயம்
56. அக்னி ஸ்தம்பம் அழற் கட்டு
57. ஜல ஸ்தம்பம் நீர்க் கட்டு
58. வாயு ஸ்தம்பம் வளிக் கட்டு
59. திட்டி ஸ்தம்பம் கண் கட்டு
60. வாக்கு ஸ்தம்பம் நாவுக் கட்டு
61. சுக்கில ஸ்தம்பம் விந்துக் கட்டு
62. கன்ன ஸ்தம்பம் புதையற் கட்டு
63. கட்க ஸ்தம்பம் வாட் கட்டு
64. அவத்தை பிரயோகம் சூனியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக