திங்கள், 28 ஜூலை, 2014

குமிழ்- கனவுகளை வரிசையில் நின்று வாங்குகிறேன்


குமிழ்- கனவுகளை வரிசையில் நின்று வாங்குகிறேன்


 நேற்று நண்பனுடன் உரையாடிய பின்னும்
கற்பமான மனைவியைக் கூட்டிக்கொண்டு
அவளின்  'கார்' வாங்கும் கனவுடன்
அங்கு சென்றேன்
காத்திருப்பு
அங்காலாய்ப்பு இடையிடையே
காதல் தகிப்பு
ஊடல் பகிர்வு
சிறு எரிச்சல்
அவளுக்கு வியர்த்தது
எனக்கும்
அவளுக்கு பதிலாக வரிசையில்
என்னை போலவே கனவுகளை முதுகில் சுமந்து கொண்டு
 நிறைய பேர்
வேண்டாம் என்று தோன்றும் போது
'கார்' கனவு விண்ணப்பம்
அவளின் கண்ணுக்குள் தெரியும்
 நண்பனின் அலைபேசி அழைப்பு ஊடறுக்கும்
இடையில் குறுக்கிட்டு
அலுவலக த் தொழிலாளி வேறு
'கார்டு' வந்ததா?
எல்லாம் சரியாக உள்ளதா? என்று கேட்டான்
முகவரி மாறியதை எழுததாற்கு
என் அலைச்சல்களின் கோப அம்புகளை
அவன் மீது பாய்ச்சினேன்
துடைத்துக் கொண்டே அவன் ஒரே பாட்டையே
திரும்பவும் பாடினான்
முக்கியமான 'தாள்' இருக்கா என்றான்
குறைவாக உள்ள்து என்றேன்
எல்லாம் சரியாகி உள்ளே போகும் முன்
 நண்பன் வேகமாக வந்து
விண்ணப்பத்தை கிழித்துப்போட்டு
மனைவியையும் இழுத்துக் கொண்டு சென்றான்
 நான் மட்டும்
வேகா தலையுடனும் சாகா காலுடனும்
கீழ் கொட்டிய மன அதிர்வுகளை
பொறுக்கிக் கொண்டே
வெளி வந்தேன்
அந்த ஊனமுற்றோர்களுக்கான
சிறப்பு வேலை வாய்ப்பு
அலுவலகத்தை விட்டு..........................

துவாரகாசாமிநாதன்
9629272185  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக