திங்கள், 28 ஜூலை, 2014

ஒளிர்ந்த பின் எங்கே போகிறாய்

ஒளிர்ந்த பின் எங்கே போகிறாய்

மெழுகு வர்த்தியா?
தங்க நிறமப் பிரகாசமா?
செந்நிறப்பிரிகையோ?
கரும்புகையோ?
 நீலமோ?
இதில் எது 'நான்'?

உரையாடலிலா?
ஆழ் மெளனத்திலா?
இதில் என்னுடைய 'நான்'
எங்கிருந்து பிறக்கிறது

எல்லோருக்குமாய் உருகினால் எனக்கு
என்ன பெயர்?
பிரகாசிப்பதிலும்
பிரகாசிக்க வேண்டுமென்பதிலும்
அடங்கிருக்கின்றன‌வா?எல்லோருடைய‌  'நானும்'

உண்மையில் நானே உருகும் போது
என்னவாகின்றேன்
இருளின் பரந்த வெளியில் மருளும் வாழ்க்கை
மெழுகின் ஒளியில் மிரண்டு
உருகினால் வருமோ? ஞானம்.

மெழுகு தீர்ந்தால் சகிக்க முடியாமல்
வந்தே தீரும் மரணம்
உருகும் எல்லா மெழுகுமே
இருள் போக்கத்தான் உருகுமோ?

ஒவ்வொரு முறையும்
என் வாழ்வு
விட்டில் பூச்சியாய் மாறும் போது
உன் அதிர்வுகளை
அடர்ந்த காட்டில்
நீரருந்தும் மான் போல
உணர்கிறேன்
எப்பொதுமே நிதர்சனமாய் ஒளிரும் நீ
ஒளிர்ந்த பின் எங்கே போகிறாய்
உன் ஆத்ம விளக்கை ஏற்ற.........

துவாரகாசாமிநாதன்
9629272185

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக