என் வாழ்வில் வந்த நிறைய பராசக்தி தாய்கள்
என் பிறப்பை தந்த தாய் கிருக்ஷ்ணவேணி, ஒரு வெகுளி, அப்பாவித் தாய், நிறைய
கடமைகள் செய்தாள். பால்,மோர், தயிர், முட்டை, கோழி, ஆடு, மாடு வளர்த்து
விற்று என்னை யும் வளர்த்தாள். அதன் பின் நான் வளரும் போது எங்கள்
வீட்டில் வந்து தங்கியிருந்த சிலோன் அக்கா நான் அவளை அப்படித்தான்
அழைப்பேன். அவள் பெயர் பிரேமா. என் மீது அளவு கடந்த அன்பு
வைத்திருந்தாள். இன்று அவள் உயிருடன் இருக்கிறாளா என்று கூட தெரியாது.
அவளின் அந்த பாசமான பரிவை அவள் என்னில் விதைத்த மொழியை, சொல்லை
வைத்திருக்கிறேன். அவள் அருமையாகத் தேங்காய் பாரை இனிப்பு செய்வாள். அது
எனக்கு ரொம்ப பிடிக்கும். அடுத்து என் நண்பனின் மனைவி விஜி இப்போது அவளை
நாங்கள் தங்கையாக தத்து எடுத்துள்ளோம். எனது வாழ்வை சந்தோசமான பாதையில்
மாற்றியவள். என் தயிர் குட்டி தங்கை, அவளை அப்படித்தான் செல்லமாக
கூப்பிடுவேன். தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறாள் இரண்டு
மகன்களுடன்.
அவளின் முதல் குழந்தை பிரசவிக்கும் போது நாங்கள் பட்ட துன்பம் அளவில்
அடங்காதது. பின்னர் நான் கல்லூரி படிக்கும் போது என்னுடைய ஜுனியராக வந்து
அந்த முட்டைக் கண் லாவண்யா. இப்போதும் அந்த முட்டைக்கண்ணில்தான் விழுந்து
கிடக்கிறேன். என் வாழ்வில் ஒளியேற்றிய ஒரு குடும்ப விளக்காக அவள்
என்னுடன் வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறாள். அடுத்து என் சிறந்த
மாணவர்களில் பெண்ணாக வந்தவள் குர்சியா பானு சிறந்த அறிவாளி பெண்ணவள்.
அடுத்து ஆயிசா, சிந்து,பூரணி, ப்ரியா, சோனியா இவர்கள் என்னிடம் சரிக்கு
சரி போட்டி போட்டுக் கொண்டு சிந்தித்தார்கள். என்னை கேள்வி கேட்டு
மாற்றினார்கள், என்னிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். அவர்களின்
அன்பு பரிசுத்தமானது. நான் தான் ஆயிசாவிடம் எக்கச்சக்கமான உரிமை
எடுத்துக் கொண்டேன். அது தவறு என்று இப்பொது உணர்கிறேன். ஆனாலும் அவர்கள்
என் மேல் செலுத்திய அன்பு உண்மையானது. இந்த உலகத்தின் பார்வைக்கு அது
எப்படி வேண்டுமானால்லும் தெரியலாம். அது ஒளி இல்லாத கண்களைக் கொண்டு
பார்க்க கூடியது. பின்னர் வேதாத்ரியை குருவாக ஏற்ற பின்னர் என்னை மாற்றிய
பெண்களில் முதலில் செயலெட்சுமி டீச்சர். அது ஒரு அன்பு கனியை மட்டுமே
தரும் ஒரு கற்பக தரு. வெள்ளை முடி, ஏந்திய நடை, எப்போதும் அமைதியான
பார்வை. என் பெண் குரு. அவர்களின் ஒரு ஸ்பரிசத்தை நான் இப்போதும்
உணர்கிறேன்.அங்கேயே நான் தவம் என்னை தம்பியாக தத்து எடுத்துக்கொண்டவள்
எனது அன்னை இந்திரா. அவள் ஒரு தோட்டியாள் என் மீது படிந்த கசடுகளை
களைந்தவள். பராசக்தி, ஆத்மீக பலம் கொணடவள், சிறந்த வடிகால், அன்பு
பொழியும் ஊற்று. ஆதி அன்னையின் குணம். எனக்கு வாழ்வின் பாதையை ஆன்மீகமாக
அமைத்து கொடுத்தவள்.தற்போது குழந்தைகளுடன் திருவாரூரில் வசித்து
வருகிறாள். அடுத்து என் ஞான குருவான முத்துகுமரேசன் அய்யாவின்
பதியும்,அன்னையுமானவள், என்னுக்கும் தாயானவள். பராசக்தி, காளித்தாய்.
கண்களில் ஒளி வீசியே கருவை சுத்தம் செய்பவள் கிருக்ஷ்ணவேணி. எனது
இரண்டாம் தாய். என்னோடே சக பயணி, சக தொழிலாளி, தோழி, சகோதரி, வீரமானவள்.
ஒரு நல்ல மனுக்ஷி.. அன்னை வேளாங்கன்னித்தாய், மாதா. தைரியமானவள். கடமை
தவறாதவள். அன்பான வார்த்தைகளைக் கொண்டே வேலை வாங்குபவள். அனிதாராணி.
தற்போது புதுக்கோட்டையில் என்னுடன் வேலை பார்த்து வருகிறாள். மேலே நான்
குறிப்பிட்ட பெண்கள் அனைவரும் அன்பு என்ற ஒரு மந்திர சொல்லையே வாழ்வாக
மாற்றி தன் சக பயணிகளையும் தன் அன்பால் மாற்ற தகுந்தவர்கள். எனக்கும்
அவர்களுக்குமான உறவு நிலை வயது வித்தியாசங்கள், பால் நிலைகள், காலங்கள்,
மனத்தடைகள், வேலிகள், குருடான பார்வைகள் எதுவுமே சொல்ல முடியாத, அனுகாத,
சுயநலமற்ற, சுத்தமான அன்பு நிலையல் உருவானது. என்றும் சாகாதது. அவர்களோ
யாருமோ எது செய்தாலும் அழியா நிலை பெற்றது. அது தாயுள்ளத்திலிருந்து
வரும் அருவி அது கடலில் சேரும் வரை ஓடிக் கொண்டேயிருக்கும். இவர்கள் என்
ஆன்மாவை சுத்தப் படுத்த வந்தவர்கள். பராசக்தியின் வடிவம், காளித்தாய்,
அன்னை மாதா. அன்பை இவர்களே நினைத்தாலும் அடைக்க முடியாது. அதற்கு
தாழில்லை. என்னை உருவாக்கி, செதுக்கி உலக்த்தில் உலவ விட வந்த தேவ
தூதர்கள். தேவதைகள்.
நன்றி
வாழ்க வளமுடன்
துவாரகாசாமிநாதன்.
9629272185
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக