அழுக்குச் சட்டை
கறை படிந்த சட்டைகளால்
நிரம்பி வழிகிறது என் வீட்டு அறை
துவைத்துப் பார்க்கிறேன்
அலசி கழுவி கசக்கி பிழிகிறேன்
நனைத்துத் திரும்பவும் ஊற வைக்கிறேன்
நையப்புடைக்கிறேன்.
சட்டையின் கறை போகவில்லை
மனைவியிடம் கொடுத்துப்பார்த்தேன்
குழந்தையும் பழகிப் பார்த்தாள்
சட்டையின் கறையைப்போக்க
அம்மாவையும் அழைத்தேன்
ஆடையின் கறை வெழுக்க முடியாதென்றதோடு
தந்தையின் கறைப் பற்றியும் நொந்து கொண்டாள்
உலகமய விளம்பரம் சொல்கின்றன கறை நல்லதாம்
கை மடிப்பு கறை
காக்கையின் எச்சம்
இரத்தக் கறை மற்றும் தீக்கறை
காலங்களின்;; எதிரெதிர் நிலையால்
வாழ்வின் தத்துவங்கள் கறை படிந்த சட்டையில்
பிரிந்த நூலாய் தொங்குகின்றன.
கறையை மட்டுமே சுட்டிக்காண்பிக்கின்றது உலகம்
கறை படிந்த உள்ளத்தை அணிந்து கொண்டு
விரிகிறது என் வானம்
சுருங்கிய சட்டையுடன்.
எந்த அவதார வண்ணானும் வராததால்
வர்ண சட்டையின் கறையை போக்க முடியா
கையாலாகத்தனத்துடன்
நிர்வாணமாய்
உலகத்தை பிரதிபலிக்கும் நான்.
துவாரகா சாமிநாதன்
9629272185
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக