செவ்வாய், 6 ஜனவரி, 2015

எங்கும் போராட்ட வரலாராக விரியும் நாவல்


ஆதி மனிதனின் இயக்கம் தேவையின் அடிப்படையிலும் அதனை ஒட்டிய உணர்ச்சி எழுச்சியும் ஆரம்பமானது உழைப்பு என்னும் தாரக மந்திரம், உழைப்பு எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்ட பின் அதனின் இயக்கத்தில் பொருள் உற்பத்தி ஆரம்பமானதும் பொருளாதாரம் வந்தது அதனை காக்க அரண் தேவைப்பட்டிருக்கும் அரசியல் வந்தது அரசனே கண்காணிக்க முடியாது என்பதால் அரச நிறுவனம் அமைக்கப்பட்டது, இன்று அரசியல் கட்சியும் சேர்ந்தே இருக்கிறது, கட்சி அரசியலைத்தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டுள்ளோம். சரி அரச நிர்வாகத்தில் உள்ளவர்களாவது சரியாக இருக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. நிதி நிர்வாகத்தில் ஊழல் மலிந்து விட்டன. நீதியோ இருதலை கொள்ளி எறும்பாக மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கிறது. எல்லாம் கிடைத்து தேவையும் நிறைவேறியவுடன் தத்துவ ஆராய்ச்சியில் மனிதன் இரங்கியிருப்பான், அன்று இருந்த அறிவு நிலையில் தத்துவங்கள் வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன் ஆனால் எல்லாம் மாறக்கூடியது என்பதில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஒவ்வோரு காலக்கட்டத்திலும் அறிவு நிலை ஆராய்ச்சிக்கு ஏற்ப மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்து இருந்தாலும். மனிதனின் மனம் பற்றியும் அதில் எழும் குணம் பற்றியும் எழுந்த ஆராய்ச்சி போத வில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து நிலை மேலும் கிழக்கும் மேற்கும் இனணந்தும் மேலும் தத்துவம், அரசியல், இயற்கை,பொருளாதாரம், மனவியல், உளவியல், பொருட்கள் பற்றிய விஞ்ஞானம், மெய்ஞானம் என விரிந்த நிலை ஒருங்கிணைந்த ஆராய்ச்சி தேவைப்படுவாதாகவே நான் கருதுகிறேன். இப்படி எதுவுமே நிகழாமல் தனிமனிதனின் குணம் மாற வாய்ப்பேது அவன் ஆசையிலும், பேராசைக்கொண்டும், பொருட்களை மேலும் தனக்கே சேர்த்துக்கொள்ள வேண்டும் என விரும்பி பிற மனிதனின் உரிமைகளையும், உடைமைகளையும் ப்றிக்க நினைக்கிறான். இதிலிருந்துதான் வர்க்க பிரிவினைகள் தோன்ற ஆரம்பிகின்றன. உழைப்பு பகிர்வு நடை பெறாமல் 20 சதவீதம் பேர் உழைக்காமல் சாப்பிட நினைப்பது என்ன நியாயம், இதில் நான் நிறைய படித்து விட்டேன் என்ற கெளரவம் வேறு நான் என் படிப்புக்கேற்ற வேலையைத்தான் செய்வேன் என்றும் எனக்கு உடனடியாக பணம் தரக்கூடிய வேலையை மட்டும்தான் செய்வேன் என்றும் அடம் பிடிக்கிறோம். தறியுடன் நாவலில் இப்படிபட்ட கருத்தக்களுடந்தான் ஆரம்பிக்கிறது ரங்கனும் சாதரணமாக பயந்துதான் கட்சிக்குள் வருகிறார் பிறகு அவர்தான் மக்கள் போராளியாகுகிறார். மக்களுக்காக படைப்பதுதான் இலக்கியம், மக்களுக்காக செய்வது, வாழ்வது, போராடுவது, என நாவல் எங்கும் சிறு விவசாயிகளின், பாட்டாளி மக்களின் வேதனைகளை எடுத்துரைக்கிறார். ஊடுயிளை பாவாக மார்க்சிய, நக்சல்பாரியின் செயலகளை வைத்துள்ளார். அரசியல் போராட்டம், பொருளாதார போராட்டம், தத்துவ போராட்டம், வாழ்க்கைப் போராட்டம் என எங்கும் போராட்ட வரலாராக விரிகிறது நாவல். அன்றும் இன்றும் போராட்டம் என்றாலே அரச இயந்திரம் அடக்கவும் மக்கள் அதனை அரசை எதிர்க்க வந்த போராளிகளை ரகசியமாக ஆதரிப்பதும் குறையவில்லை, என்றும் குறையாது. நாவலில் பாரதிநாதனே குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களும் அரசும் சேர்ந்து நடப்பவைகளை தவறாக சித்தரிக்க முயன்றாலும் மக்கள் அந்த போரட்டத்தின் உண்மை புரிந்து விடுகிறது. தோழர் ரங்கன் மாட்டுக்கறி தின்ன முடியாமல் இருந்து பின் சேலத்தில் ஒரு பன்றி மேய்க்கும் தலித் வீட்டில் ஊர் சாப்பாட்டை இன்முகத்தோடு சாப்பிடும் காட்சிகள் அருமை, பாரதி நாதன் சில இடங்களில் சினிமா சிகிரிப்டு எழுதுவது போல் நாவலை வடிவமைத்துள்ளார் . காலம் சில இடங்களில் குழம்பியுள்ளது முதலில் மழை ஆரம்ப அறிகுறிகள் சொல்லி வந்து விட்டு ராசாத்தி, கல்யாணி, ரங்கன் எல்லோரும் ஜ்ஸ் சாப்பிடுவது போல் எழுதியுள்ளார் கால வழு ஏற்பட்டுள்ளது. மேலும் கல்யாணியை நிறைய இடங்களில் வசந்தா என அழைத்துள்ளார் பாரதி நாதனின் மனைவி பெயராக இருக்குமோ? என்னவோ. ஆனால் நாவலின் எந்த இலக்கண சட்டகத்திலும் அடைக்க முடியாத நாவல் என்று இதைக் கூறலாம். அது ஏன் என்ற தெரியவில்லை எல்லாவற்றையும் மேற்கிலிருந்து சிந்தித்த நாம் நாவல், கதை, கட்டுரை பதிக்கும் போது மட்டும் நிறைய எழுத்து பிழைகளோடே வெளியிடுகிறோம். எனக்கு அது மட்டும் புரியவில்ல்லை. அதற்கு என்று ஒரு எடிட்டிங் வேலை செய்ய ஒருவ்ரை நாம் உருவக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். நாவலின் ஆரம்பம் முதல் கடைசி வரை ரத்தம், துணிச்சல், வீரத்தையே விதைத்துள்ள ஒரு நல்ல நாவல் இது. போராட்டக் குணத்தை இளைய சமூகத்திடம் வளர்த்தெடுக்க இந்த நாவலை படிக்க கொடுத்தால் போதும் அவன் அநியாயத்தைக் கண்டு கொதிக்க ஆரம்பிப்பான், முனை மலுங்கிய கத்தியையும் புத்தியையும் தீட்ட வேணடும். அதற்கு ஒரு நல்ல உறைக் கல்லாக இந்த நாவல் இருக்கும். நிறைய கட்டுரை, மார்க்சிய நெடி கொண்ட மிளகாயை நெருப்பில் போட்டு கொடுத்துள்ளார் பாரதிநாதனுக்கு ஒரு செவ்வணக்கம் தோழரே. துவரகாசாமிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக