முக நூல்
எனது வன்மங்களை
பிரதியிடும்
போது
சில
விளம்பர
படுத்தலும் நிகழ்ந்து விடுகிறது
ஒவ்வொரு
முகஙகளிலும் தேடுகிறேன் நல்லவைகள் ஒட்டியிருக்கின்றதாயென
வலைத்தளங்களின்
வலைகளில்
இண்டு இடுக்கெல்லாம் ஒடுகிறது
எனது எலி மனம்
சில வேளைகளில் அங்கே கொட்டப்படும்
வன்மங்களின்
குப்பைகளில்
விசாரிப்புகளில்
விமர்சனங்களில்
புதைந்து
சிதைந்தும் விடுகிறேன்
மனச்சிக்களின்
கார்ணமாக அதன் நடுப்பக்கத்தில்
செருகப்பட்டுவிடுகிறேன்
சில சொடுக்குகளில் விபரீதம் நடத்துகிறேன்
சில இடுகைகளில்
உற்சாகமடைகிறேன்
கருப்பு,
சிகப்பு, வெள்ளை மஞ்சள் நீலமென நிரம்பி வழிகிறது
என் முகமெங்கும்
எல்லோருடைய
மனங்களில் எழும்
வெற்றிடத்தை
நிரப்பிக் கொள்ளும்
தொட்டியாய்
இந்த முக நூல்.........
துவாரகா சாமி
நாதன்
9629272185
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக