ஜெ.சி.குமரப்பா பொருளாதார கோட்பாடுகள் காந்திய வழியில் அஹிம்சையை அடிநாதமாக கொண்டது இஒரு நிலையான பொருளாதார சூழல் என்பது இயற்கைக்கு மாறாக இயங்க முடியாது இஇயற்கையின் நியதிகள் சமூகத்தில் ஒருவித சமநிலையை உருவாக்கி நிலைநிறுத்துகிறது இஅதனால் அனைத்து தரப்பினருமே இயந்து வாழும் வாய்ப்பு இருக்கிறது இபரஸ்பர உதவிகளின் மூலம் சமூகம் ஒட்டுமொத்தமாக வளர்கிறது இஆனால் அதே ஒரு சீர்கெட்ட பொருளாதாரம் தனது லாபத்தை மட்டுமே சுயநல நோக்கில் முன்வைத்தது இஅது வன்முறையை ஊக்குவித்தது இஇயற்கையை அது சுரண்டியது. இதனால் இயற்கை வளங்களனைத்தையும் வாழ்வின் வளங்களாக மாற்றும் மகத்துவத்தை புரிந்தும்
பொருளாதாரம் தொடர்பாக ஜே.சி.குமரப்பா முன்வைத்த சில கருத்துகள்:
வேட்டைப் பொருளாதாரம்: விலங்குகள் தங்கள் உள்ளுணர்வுக்கு ஏற்ப ஒரு வாழ்க்கையை வாழ்கின்றன. சிங்கம் புலி என வன் மிருகங்கள் இருக்கின்றன. அவை கைக்குக் கிடைக்கும் மான்இ முயல்இ எருமை என அனைத்தையும் கொன்று தின்கின்றன. தான் தின்றது போக மிச்சத்தை அழியவிட்டுச் செல்கின்றன. இந்த வகையில்இ எல்லாமே எனக்கு என்ற உரிமை மட்டுமே காணப்படும். கடமை என்று ஒன்றுமே இருக்காது. கொல்லப்படும் உயிர்கள் பற்றி அவற்றுக்குச் சிறிதும் கவலை கிடையாது. முழுவதும் சுயநலமான விலங்குகள் அவை. வன்முறையையே தங்கள் வழிமுறையாகக் கொண்டவை. பேராசை பிடித்த வியாபாரிகள்இ போதைப் பொருட்கள் விற்பவர்கள்இ இயற்கை வளங்களைச் சுரண்டுபவர்கள்இ இயற்கைச் சீர்கேட்டை விளைவிக்கும் தொழில் செய்பவர்கள் இந்த வகையில் வருவார்கள்.
சேகரிப்புப் பொருளாதாரம் : குரங்குகள் மரங்களில் வளர்ந்திருக்கும் காய்இ கனிகளை உண்டு வாழ்கின்றன. அந்த மரங்களை அவை நட்டு வளர்க்கவில்லை. ஆனால்இ அதன் கனிகளை மட்டும் பறித்து உண்ணுகின்றன. இவையும் சுயநலமானவையே. இங்கும் உரிமை மட்டுமே இருக்கும். கடமை இருக்காது. ஆனால்இ இவற்றினால் பெரிய அழிவுகள் நடப்பதில்லை. வன்முறையும் பெருமளவுக்கு இருக்காது. உற்பத்தியில் பங்கு பெறாமல் லாபத்தை மட்டும் பெற்றுச் செல்லும் நவீன நிதியாளர்கள்இ திருடர்கள்இ பிக் பாக்கெட்கள் இந்த வகையில் வருவார்கள்.
உழைப்புப் பொருளாதாரம்: முதலில் கூறிய இரண்டும் விலங்கு நிலையிலானவை. முன்றாவது வகையில் கடமையும் உரிமையும் கல்ந்து காணப்படும். ஒரு விவசாயி நிலத்தை சீர்திருத்திஇ பயிர் நட்டுஇ நீர் பாய்ச்சிஇ களை பறித்துஇ உரம் போட்டு கடைசியில் அறுவடை செய்து எடுத்துக்கொள்வதைப் போன்றது. பேராசை இல்லாத வியாபாரிஇ குறைந்த லாபம் வைத்துத் தொழில் செய்பவர் இந்த வகைக்குள் வருவார்கள்.
கூட்டுறவுப் பொருளாதாரம்: இதற்கான மிகச் சிறந்த உதாரணம் தேனீக்கள். அவை தமக்காக உழைப்பதில்லை. அவை செய்வது எல்லாமே சமூகத்தின் நலனுக்காகத்தான். கூட்டுக்குடும்ப வாழ்க்கை இதைப் போன்றதுதான். குடும்பத்தின் நலனுக்கு ஏற்ப தனி நபர் விருப்பு வெறுப்புகள் வரையறுக்கப்பட்டிருக்கும். சமூகம்இ தேசம் என எந்த அடையாளத்துடன் உங்களை இணைத்துக் கொள்கிறீர்களோ அதன் நலன் இதில் உங்களை ஒழுங்குபடுத்துவதாக இருக்கும்.
சேவைப் பொருளாதாரம்: மிகவும் உயர்வான பொருளாதாரம் இதுவே. ஒரு தாய்தான் இதற்கான மிகச் சிறந்த உதாரணம். குழந்தைக்காக அவள் உழைக்கிறாள். எந்த பிரதிபலனும் எதிர்பார்ப்பதில்லை. குழந்தைக்கு பணிவிடை செய்வதே அவளுக்கான சன்மானம். காந்தியடிகள் இப்படியானதொரு நிலையை நோக்கித்தான் நகர்ந்துகொண்டிருந்தார்.
நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் இந்த ஐந்து நிலைகளும் இருக்கவே செய்யும். நாளொன்றில் நாம் எத்தனை தடவை புலியாக வாழ்கிறோம். எத்தனை தடவை குரங்காக வாழ்கிறோம். எத்தனை தடவை விவசாயிபோல் வாழ்கிறோம். எத்தனை தடவை தேனீ போல் வாழ்கிறோம். எத்தனை தடவை ஒரு தாயாக வாழ்கிறோம் என்பதை நமக்கு நாமே அலசிப் பார்த்துக்கொள்ள வேண்டும். தாய்மை நிலை நோக்கி நகர்கிறோம் என்றால்தான் நாம் நாகரிகமாகி வருகிறோம் என்று அர்த்தம். இல்லையேல் நாம் மீண்டும் மிருக நிலைக்குத் திரும்புகிறோம் என்றுதான் அர்த்தம்.
அவர் ஒரு பெறும் கனவை கண்டார் .காந்தியின் கூற்றுப்படி கிராமங்கள் அனைத்தும் விழிப்படைந்தால் இகம்யுனிசம் கொடுப்பதாக சொல்லும் அனைத்தையும் மக்களுக்கு கொடுக்க முடியும் அதை விட முக்கியமாக கத்தியின்றி ரத்தமின்றி சத்தியத்தின் வழியில் அதை செய்து இருக்க முடியும் .அவரது கனவு நிறைவேறி இருந்தால் ஒரு வேளை இந்தியாவின் ஆன்மா பூரணமாக விழித்துகொண்டு இருக்கும் .ஒரு தன்னிறைவு கொண்ட தற்சார்பு கொண்ட சமூகம் எழுந்து இருக்கும் .காந்தியுடன் வாழ்ந்தவர்கள் இஇருந்தவர்கள் அனைவரும் காந்தியர் ஆகிவிட முடியாது .இங்கு காந்தியை போல் இறுதி வரை தான் நம்பிய மகத்தான கனவிற்கு வாழ்நாள் முழுவதும் உழைத்த ஒரு மகத்தான ஆத்மாவை ஜெ.சி.குமரப்பா வடிவில் நாம் காண்கிறோம். இவற்றைப் பற்றி அறியாமலேயே அந்த வழியில் ஒரு தன்னிறைவு கொண்ட தற்சார்பு கொண்ட கிராம சமூகத்தைக் கட்டி எழுப்ப இருக்கும் இந்த முத்துக்குமரேசன் அவர்கள் ஒரு பொறியாளராவர் மேலும் சென்னையில் ஒரு வெளி நாட்டு நிறுவனத்தில் மேலாளராகவும் வேலை செய்தவர் தனது வேரான கிராம விவசாயத்தை தேர்ந்தெடுத்து அதில் தனது தொழில் நுட்பத்தையும் இணைத்து கேரள வெள்ளரியை இரண்டு ஏக்கரில் ஆண்டுக்கு சுமார் எட்டு லட்சம் ரூபாய்க்கு உற்பத்தி செய்து வருகிறார் மேலும் புதுக்கோட்டையை அடுத்துள்ள தன் கிராமமான முள்ளூரிலுள்ள இருபது பெண்களுக்கு வேலை கொடுத்து வருகிறார்.
அவரை புதுக்கோட்டை கற்பகவிநாயகா மேலாண்மை நிறுவனமும்இ மதுரை செசியும் மாணவர்களுக்கு நடத்திய பட்டறை வகுப்பில் முத்துகுமரேசன் அவர்கள் ஆற்றிய உரையை கட்டுரையாக எழுதச் சொல்லி பல முறைக் கேட்டும் எனது ஆய்வு சம்பந்தமான வேலைகளில் கவனம் செலுத்தியதால் இப்போதுதான் வடிவம் கிடைத்தது.
அவர் மாணவர்களுடன் உரையாடியதன் சாராம்சம் இதுதான். ஒவ்வொரு மாணவனும் தன் பணியைத் தேர்ந்த்டுக்கும் போதும் நன்றாக தீர்க்கமாக யோசித்துஇ தெளிவாக முடிவெடுக்க வேண்டும். நான் யானைக்கு தலையாக இருப்பதை விட புலிக்கு வாலாக இருக்கவே ஆசை கொள்கிறேன் ஆதலால்தான் எல்லோரும் விட்டுவிட்டு போய் விட்ட விவசாயத்தை கையில் எடுத்தேன். மேலும் நான் தோற்றவர்களிடமிருந்து ஆரம்பித்தேன். ஏன் அவர்கள் அத்தொழிலில் தோற்றார்கள் என ஆராய்ந்து அதை என்னிடம் சரி செய்தேன். விவசாயத்தில் இன்று கிராமத்தில் என்ன சிக்கல்கள் உள்ளன் என் மாணவர்களைக் கேட்டு அதற்கு தன்னிடம் விடையுள்ளது மேலும் அதற்கானத் தீர்வை நோக்கி நாம் பயணிப்போம் என்றார்.
விவசாயத்தின் சிக்கல்களென மாணாவர்கள் கூறியதாவது. தண்ணீர் பற்றாக்குறைஇ வேலை ஆட்கள் பற்றாக்குறைஇ உற்பத்தி செய்பவர் விலை நிர்ணயிக்க முடியாத நிலைகள்இ தொடர்ச்சியான் சந்தைஇ சந்தையின் தேவைக்கு சந்தை படுத்த முடியாமைஇ மேலும் வெளி நாட்டு ஏற்றுமதி அறியாமை மற்றும் தொழில் நுட்பம் அறியாமை.
விவசாயம் சார்ந்த சிக்கல்களை தான் எப்படி களைந்தெடுத்தேன் என்று விரிவாக உரையாடினார். அதாவது தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க இரு வழிகளை கண்டறிந்து அதனை சரி செய்துள்ளார். ஒன்று சொட்டு நீர் பாசண் முறை இர்ண்டு கிணறு தூர்வாரி அதிலிருந்து நீர் எடுத்தல் மேலும் தடை படும் மின்சாரத்தை தவிர்க்க சூரிய ஒளி மின்சாரத்தை பயன் படுத்த திட்டம் வைத்துள்ளார்.
தானே உற்பத்தியாளரகவும் வர்த்தகம் செய்பவராகவும் இருப்பதால் சந்தையில் தேவை அதிகரிக்கும் போது விலையை சராசரியாக உயர்த்தியும்இ தேவை சரியும் போது சராசரியாக சந்தையே விலையை நிர்ணயிக்கும் போக்கில் விட்டும் மேலும் ஆண்டுதோரும் பொருள் சந்தையில் கிடைக்கும்படி சரியான அளிப்பை செய்து கொண்டு வருவதாலும் சந்தையிடுதலில் உண்டாகும் சிக்கலை தவிர்த்து லாபம் ஈட்டுகிறார்.
வேலையாட்கள் பற்றாக்குறைக்கு இவர் வைக்கும் தீர்வு மிகவும் யுக்தியுடனுள்ளது. பொதுவாக ஏன் கிராம மக்கள் வேலைக்கு நகரத்தை நோக்கி செல்கிறார்களென பார்த்தால் தொடர்ச்சியாக வேலை கிராமத்தில் கிடைக்காததுதான் அடிப்படைக் காரணம் என்றும் அதனை எப்படி சரி செய்துள்ளார் என்றால் விவசாயத்தில் உள்ள தினக் கூலி முறையை மாற்றி மாதச்சம்பளம் ஆக்கினர் மேலும் தொடர்ச்சியான வேலையும் அதற்கான பயிற்சியும் அளித்து அச்சிக்கலை மிக எளிதாக போக்கியுள்ளர். மேலும் அவர்களுக்கு அந்த தொழில் நுட்பத்தையும் கற்றுக் கொடுத்துள்ளார். பந்தலில் படர்க்கை நிலையில் படரும் வெள்ளரியை செங்குத்தான நிலையில் படர விட்டு அதிக மகசூலை எடுக்கப்பதாகவும் கூறினார். மூலதனம் திரட்டும் போது ஒன்றுமே இல்லாத நிலையையும் நிறைய இருந்த நிலையையும் தான் கண்டுள்ளேன் என்றும் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் பல தவறுகளை செய்து திருத்திக் கொண்டுதான் இந்த நிலையை அடைந்துள்ளேன் ஆகையால் உழைக்காமல் இதனைஇ இந்த நிலையை பெறவில்லை அதே சமயத்தில் நாம் என்ன செய்கிறோம் ஒரு கீரை விற்கும் அம்மாவை கண்டால் அவர்களின் உழைப்பை மதிக்காமல் அவர்களிடம் பேரம் பேசியும் உதாசினப்படுத்துவோம்இ ஆனால் நாமே ஒரு வெளி நாட்டு கம்பெனியில் அடிமையாக கை கட்டி வாய் பொத்தி வேலை செய்ய விருப்பம் கொள்வோம் இந்த நிலைக்கு மாணவர்களை அனுப்ப ஆசைப்படும் பெற்றோரும் அதுபோன்ற கல்வியமைப்புமே காரணம்.
இந்த சமூகத்தில் சாமனியனும் சர்வ வல்லமை பொருந்தியவனும் உழைக்காமல் ஏதொன்றும் நமக்கு எளிதில் கிடைத்து விடாது ஆகையால் நாம் ஒவ்வொருவரின் உழைப்பை மதிக்க கற்றுக் கொண்டு அதே போல நாமும் உழைக்கமல் எந்தவொன்றையும் பெறவும் முடியாது என்றும் நினைத்தும் மதித்தும் வாழ வேண்டுமென மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். அதே போல் நாம் உழைக்கவும் வெட்கம் கொள்ளக் கூடாது. இன்றைய கல்வி முறையிலும் வளர்ப்பு முறையிலும் ஆதித் தொழில்களை கேவலமாக பார்க்கும் போக்கே மிகுந்துள்ளது இதனைப் போக்கி நாம் நம் கிராமத்தை சுய நிர்மாணம் செய்ய வேண்டும்இ சுய தொழில் ஒன்றை செய்து அதன் மூலம் நமது கிராமத்தை சுய சார்புள்ள கிராமமாக மாற்ற முயற்சிக்க வேண்டுமென அழுத்தம் திருத்தமாக சொன்னார்.
காரல்மார்க்ஸ் தனது பதினேழாவது வயதில் எழுதிய முதல் கட்டுரையில் கூறியதுபோல தற்சார்பு கொண்டு சுயமாக சிந்தித்து எந்த மாயவாதத்திற்கும் அடிமையாகமல் ஒரு இளைஞன்இ ஒரு இளைஞி தன் பணியைத் தேர்ந்தெடுத்தால் அவர்களும் சுயசர்புற்று அவர்களது கிராமத்தையும் சுயசார்புள்ளதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும் உரையாக இது அமைந்தது. மேலும் இந்திய நாட்டின் முதுகெழும்பான கிராமங்கள் சுயசார்புடையதாக மாறினால் நாட்டின் வளர்ச்சி படுகிடைக் கோணத்திலிருக்கும் இல்லையென்றால் செங்குத்து வளர்ச்சி வீக்கமாகிஇ புரையோடிப்போய் நாட்டை சீரழிக்கும். ஆகவே சமூக பிரக்ஞையுடைய ஒரு தொழில் முனைவோரை உருவாக்கும் விதமாக அவரது பேச்சு அமைந்தது ஆகச்சிறப்பானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக