அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே.
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே....
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்.
புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்
வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்.- திருவாசகம்
பேரறிவே மாற்றம் கண்டு எல்லா வகையான அறிவாகவும் மலர்ந்துள்ளதென திருவாசகப் பாடலின் சில வரிகளில் காணக் கிடைக்கும் விஞ்ஞான பரிணாம வளர்ச்சி தத்துவத்தோடு டார்வின் கோட்பாட்டோடு பொருத்திப் பார்த்தால் புரியும். அறியாமையான அஞ்ஞானத்தை மறைப்பது மன உணர்ச்சியான தான் என்ற அகந்தையும் தனக்கே எல்லாம் தெரியும் என்ற போக்கும்தான் அவற்றை தள்ளி வைத்து விட்டு வெற்றுக் கோப்பையாய் இக்கருத்தை உள் வாங்கி பாருங்கள் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளுங்களென வேதாத்ரி வழியில் நானும் சொல்கிறேன்
ஓரறிவு முதல் ஆறறிவு வரை விரிந்த இருத்தல் எது. அதுவே பேரறிவென்று இங்கே நாம் பகருகின்றோம். அதுதான் பாடலில் புல்லாகி பூடாகி...என ஆரம்பித்து மனிதனாக வந்த மாற்றமாம் வெவ்வேறே வந்தறிவே எனச் சொல்கிறார். மனிதனாக வந்தாலும் மனதின் உணர்ச்சி வேகமும் அறிவின் இயங்கு தன்மைக்கும் ஏற்ப அவனே பேயாய் முனிவராய் மிருகமாய் அசுரனாய் தேவராய் பல பரிமாண குண வேறுபாடடைந்து கடைசி வரை அறிவுத் தெளிவில்லாமல் இருந்து இறந்தும் போகிறான். தெளிவாக அறிவின் மனதின் இயக்கம் புரிந்து செயலாற்றி இறந்தும் இருக்கிறான். ஆக பேரறிவே பல பல வடிவம் கண்டு அதுவே எல்லா இயக்கமாகவும் வந்துள்ள பரிணாம வளர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும்.
பேரறிவே இயங்கி தன்னை இறுக்கி சுருக்கி சூழ்ந்தழுத்திக் கொண்டு அலையாக சுழன்று பரமானுவாக மாறி அவைகள் கூடி விண்ணென்ற அணுவாகி அணுக்கள் கூடி மூலகங்கள் பஞ்சபூதங்களாகி கோள்களாகி இயங்கி தன்மாற்றம் பெற்று ஓரறிவு முதல் ஆறறிவு வரை விரிந்து மலர்ச்சி பெற்று வந்துள்ளதை மிக எளிமையாக வேதாத்ரி விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் இணைத்து விளக்கமளிக்கிறார். இங்கே அவற்றை தொகுத்து பார்த்துக் கொள்ள வேண்டும். விஞ்ஞானத்தில் இப்போதுதான் அணுவுக்குள் ஓர் இயங்கா பகுதியும் அதுவே அணுவை இயக்கும் பகுதியாகவும் உள்ளதென கூறுகின்றனர். சில இடங்களில் விஞ்ஞானத்தாலும் மெய்ஞானத்தாலும் விளக்க முடியாத பகுதிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் எப்படி சடப்பொருளிலிருந்து உயிர்ப்பொருள் வந்திருக்குமென்ற கேள்வி. அதாவது அமீபா ஓருயிரி என்றால் அது எவ்வாறு நீர் என்ற சடப்பொருளிலிருந்து உருவாகியிருக்கும் அதற்கு சீவனைக் கொடுத்தது எது. அதுவே இங்கே பேரறிவென்று சொல்ல வேண்டுமென்று நமது முன்னோர்கள் சொல்கிறார்கள். இதற்கான விளக்கத்தை சிந்தனைக்கெடுத்துக் கொண்டு விரிவாக பேசுவோம்.
#அறிவைஅறி
#துவாரகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக