வியாழன், 15 ஜூன், 2017

அறிவை அறி அதுவே அறம்

அறிவை அறி
அறிவே அறம்

அறிவு பற்றிய சிந்தனை இந்திய தமிழ் மரபிலும் அதே வேளையில் கிரேக்க மரபிலும் வெகு முன்பே சிந்திக்கப் பட்டு கோட்பாடாக வடிவமைத்துள்ளனர்.
அறிவு என்பது புலனுணர்வின் வெளிப்பாடாக மட்டுமே பார்க்கிறோம் இது நமது சித்த பௌத்த ஆதி மரபில் சிற்றறிவாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. பேரறிவென்று அதுவே அனைத்துக்குள்ளும் அறிவாக இயங்குகிறதென ஒரு தரப்பு சொல்லும் போது அதில் தனித்துவ கடவுள் எட்டி பார்த்து விடுகிறார். அப்படி ஒருவரால் எல்லாவற்றையும் படைத்து அதற்கான அறிவையும் தனித்தனியாக செயல் படுத்த முடியாது. இங்கே நாம் தான் விஞ்ஞான மரபையும் மெய்ஞான மரபையும் ஒன்றிணைக்க வேண்டுமென்கிறார் வேதாத்ரி. அப்படி இணைத்து விஞ்ஞான முறைப்படி விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்துள் செல்லும் முன் நாம் கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் பற்றி சிறிய அளவில் புரிந்து கொள்ள வேண்டும்.
கருத்து முதல் வாதமென்பது கடவுள் என்ற கருத்துதான் எல்லாவற்றையும் படைத்தன. உருவாக்கின.என்று சொன்னால் கடவுள் எங்கிருந்து கொண்டு இப்பிரபஞ்சத்தை படைத்திருப்பாரென்று ஒரு கேள்வி வருகிறது. புராணக் கட்டுக்கதைகள் முழுதும் தற்போது புனைவு என்ற பெயரிலும் இந்த புளுகையே அள்ளி விடுகிறார்கள்.
பொருள் முதல்வாதம் பொருளே முன்னம் இருந்து அதுவே இயங்கி பலவாறான படைப்பாக மாறியும் இயங்கிக் கொண்டும் உள்ளன என்று ஒரு கருத்து உள்ளது உங்கள் மனதிற்கும் புத்திக்கும் தெளியும் படி சொல்ல வேண்டுமென்றால் அணு என்ற பொருளே இயங்கி பல பரிமாண பரிணாம வளர்ச்சிக் கண்டுள்ளதென சொல்லலாம். அங்கே ஒரு கேள்வி அணுவுக்குள் நின்று இயங்குவது எப்பொருள் என்றால் அதைத்தான் நமது சித்த மரபில் பேரறிவு என்கின்றனர்.

மேலும் பொருள் முதல் வாதக் கருத்துப் படி புறவயச் சூழலே அறிவை புலனுணர்வு அனுபவமாகத் தருகிறது என்றும் அகத்திலே முன்னமே எந்த அறிவு செயல் இல்லை என்கிறது. அதுபோல இயற்பியல் தத்துவப்படி நமது அல்லது ஒரு பொருளின் இனர்சியாவை(அகவிசை) இயக்க ஒரு புற விசை அழுத்தம் தேவைப் படுகிறது.
இந்த இரு நிலைகளிலும் அறிவைப் பற்றிய சிந்தனைக்கு  எடுத்துக் கொண்டு பாருங்கள்.
திரும்பவும் நேற்றைய கேள்விக்கு வருவோம் சடப்பொருளில் எவ்வாறு அறிவு இயங்குகிறது. அணுவின் மேலும் பரமானுவின் எண்ணிக்கை இயக்கத்தை பொறுத்து அதன் தன்மாற்றம் பஞ்ச பௌதீக பொருள்களில் அழுத்தம் ஒலி ஒளி சுவை மணம் என்றும் உயிரில் மனமாகவும் அறிவுதான் தன்மாற்றமடைகின்றது. இன்னும் விரிவாக பேசுவோம்,
#அறிவைஅறி
#துவாரகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக