அறிவை அறி
அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்துதான் மெய்பொருள் என்று எடுத்துக்காட்டி அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்.
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார் அறிஞர் திருமூலர்
அவ்வறிவில் ஆழ்ந்து ஆனந்த கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்தோர் அறம்வகுத்தோர் அதை வாழ்ந்து காட்டினோர் நினைவு கூர்வோம் - வேதாத்ரி
அவ்வழியே நானும் அறிவை விரிவு செய்த அனைவரையும் வணங்கியும். அறிவை ஆயுதமாக்கச் சொன்ன அம்பேத்கர் வழியிலும். அனைத்தையும் பகுத்தறிய சொன்ன பகுத்தறிவு பகலவன் பெரியார் நிலையிலும் எல்லையில்லா அறிவு ஆய்வு செய்த மார்க்சிய அடித்தளத்தில் நின்றும் இவ்வாறு யாரெல்லாம் அறிவை அறிவாக அறிந்து அதன் வழியில் வாழ்ந்து சிந்தித்து இச்சமூகத்தை நல்வழியில் திருப்பிய அனைவரையும் வணங்கி மரபின் வேரிலிருந்தும் அதன் பூக்களின் வாசத்திலிருந்து தேன் சேகரித்து இக்கட்டுரையை தொடர்வோம்.
அறிவாகி ஆனந்தமயமாய் என்றும் அழியாத நிலையாகியாதின் பாலும்... என்று தொடங்குவோம் தாயுமானவரின் பாடலுடன் தொடங்கும். அறிவு என்பதை ஆங்கிலத்தில் Knowledge, wise, consciousness என பலவாறு கூறுகிறோமா. சரியான அறிவென்பது மூளைவழி சிந்திப்பதா. மனம் வழியாக வரும் சிந்தனையா. அப்புறம் புத்தி என்று வேறு சொல்கிறோம். புத்தி யுக்தி ஞானம் சிந்தித்தல் என இவ்வாறாக சொல்வதெல்லாம் ஒன்றுதானா வெவ்வேறா. அறிவு என்பது தகவல்களின் சேகரிப்புதானா இல்லை அதையும் தாண்டியதா. இப்படியான நிறைய கேள்விகளோடு இன்றைய நாளை தொடங்கி நீங்கள் பள்ளியில் படித்த தாயுமானவர் பாடலை நினைவு கூர்ந்து சிந்தனையை தொடர்வோம்
அங்கிங் கெனாதபடி எங்கும் பிர காசமாய்
ஆனந்த பூர்த்தாகி அருளொடு நிறைந்ததெது தன்னரு வெளிக்குள்ளே அகிலாண்ட கோடியெலாம்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல் நின்றதெது சமயகோடிகளெலாம் நும்தெய்வம் எம் தெய்வமென் றெங்குந் தொடர்ந்தெதிர் வழங்கிடவும் நின்றதெது எங்கணும் பெரு வழக்காய் யயாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளதெது மேல் கங்குல்பகல் அறநின்ற எல்லையுள தெது அது கருத்திற் கிசைந்ததுவே
கண்டன எலாம் மோன உரு வெளிய தாகவும் கருதி அஞ்சலி செய்குவோம். - தாயுமானவர்
இப்பாடலுக்கு ஆயிரமாயிரம் விளக்கம் சொல்லலாம் மறுக்கலாம் ஆனால் அவர் எதுவென கேட்ட இடத்திலெல்லாம் அறிவுதான் அது எனப் பொருத்திப் பார்த்தால் விரிவானதொரு சிந்தனை தொடங்கும் அச்சிந்தனை வழி அறிவை அறிவோம் மேலும். எப்படி அறிவு உயிரற்ற பொருட்களில் இருக்க முடியும்.
#அறிவைஅறி
#துவாரகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக