எப்போது வெடித்துச் சிதறுமென தெரியாது
முக்கி ஊதுகிறேன்
பெரிதாகி சுருங்கும் கால இடைவெளியில்
பலூன் விற்பவரின் உயிர் மூச்சுதான்
இதய வடிவில்இ சிகப்பு நிறத்தில்
பல நூற்றாண்டுகளாய் குழந்தைகளை
குதூகலப் ப்டுத்துகிறதென்பதை அறியாது
காள(ல)னின் கை வண்ணத்தில்
உப்பை பலூன் மீது வீசுகிறோம்
உயிர் பிரிந்த பலூன்கள் சிதலமடைந்து தொங்கின்றன.
அந்த சிகப்பு பலூன் மட்டும் காற்றில்
அங்குமிங்கும் அலைகிறது.
ஏதோவொரு காரணத்தால்
கையிலிருந்த பலூன் திடீரென வெடித்துச் சிதறியதைக்
கண்டு திக்கித்து நிற்கும் குழந்தை போல
அவர்களின் வாழ்க்கைத் துன்பங்கள்
திருவிழாக்களில் ஓரமாய் கடை விரித்தே நிற்கின்றன.
அவர்களுக்கு எந்த வண்ண பலூனும் நிறைவைத் தந்ததில்லை
ஆனால்
அந்த சிகப்பு பலூனிற்கு மட்டும்
இதயத்தின் ஓரத்தில்
இடம் தந்து விட்டார்கள்
பின் தொடர்கிறது பலூன் வாழ்க்கையை
எப்போது வெடித்துச் சிதறுமென தெரியாது
பயணிக்கிறார்கள்
பலூனுடன் அவர்களும்; நாமும்தான்
அதன் வண்ணம்தான் மேலே பறக்கச் செய்கிறது
என்று நினைந்து
சிகப்பு பலூனை எல்லோரும் விரும்புகிறார்கள்
விருப்பத்தினை யார் தடுக்க முடியும்.
எப்போது சுருங்கிவிடுமென யாருக்கும் தெரியாது
ஆனாலும் முக்கி ஊதுகிறேன் நானும்.
அந்த சிகப்பு பலூனில்தான்
எல்லோரது உயிர் மூச்சும் அடங்கியிருப்பதாக
நினைந்து
அந்த சிகப்பு பலூனை
எப்போது வெடித்துச் சிதறுமெனத் தெரியாது
ஊதுகிறேன்...... ஊதுவேன்......
ஊதுவார்கள்
பெரிதாகி சுருங்குகிறது
கால இடைவெளியில்
அந்த சிகப்பு பலூனிற்கு மட்டும்
இதயத்தின் ஓரத்தில்லை
முழுவதும் இடம் தந்து விட்டோம்
எப்போது வெடித்துச் சிதறுமெனத் தெரியாது...
ஆனாலொன்று
அதற்கு மட்டும் அழிவே இருக்காது.......
அதை அழிக்கவும் முடியாது...
அது எங்கள் உயிர்மூச்சில் கலந்தால்....
துவாரகாசாமி நாதன்
9629272185
Previous Next
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக