உனக்கு அடிமையாகி
நான்
பூரணத்துவமடைவதை விட
உன்னை விட்டு விலகி
வெளியிலியிருந்து
நான் முழுமையடைய விரும்புகிறேன்.
இயங்கும் பொருளே
அழிக்கும் பொருளாகவும் இருக்கும் உண்மையை
உணர்ந்த பின்
இயங்காத உன்னை அழித்துவிட விரும்புகிறேன்
பாறையில் படிந்த பாசியாய்
நீ என்னுள் படிந்து என் சுயத்தையும் மறைத்துக் கொண்டு
என்னை விட்டு போக மறுக்கிறாய்.
விடுதலையடையத் துடிக்கும்
இதயத்திலிருந்து வலியும் இரத்தத்தில்
அன்பும் கலந்துவிட்டால்
உலக துன்பங்களனைத்திற்கும் தீர்வு கிடைத்துவிடும்
ஆனால்
என் மரணத்தின் பயத்தில் கூட நீதான் ஒளிந்திருக்கிறாய்
உனை மரணிக்கச் செய்யும் வல்லமையை
இன்னும் உலகம் பெறவில்லை
உனை நம்பாததை விட
நம்பித்தான்
உன்னை அவமதிப்புக்குள்ளாக்குகிறேன்
எல்லோரையும் போல....
உனை விட்டு விலகாதிருக்க
மதம் ஏற்படுத்திய
நுண்ணிய பயம்தான்
என் செல்களை அரித்துக்கொண்டிருக்கிறது
நிறைய நேரம்
உயிர் பிசைந்து துன்ப்த்தில் அழுகிறேன்.
என்னுள் இருளைப் போர்த்துவது நீதானென
வழிப்போக்கர்கள் சொல்லிவிட்டு போகிருக்கிறார்கள்.
ஆனால்
நான் ஒளி பெறுவதற்கான ஆற்றல்
எனக்கு வெளியில்லையென்பது மட்டும்
புரிந்தாலும்
இறுதியாக
எனக்கான எல்லா தேடல்களுக்கும் விடை
என்னுள்ளேயே கிடைத்துவிட்டன
உனை விலகியதும்.....
துவாரகாசாமிநாதன் - 9629272185
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக