கீழானவையெல்லாம் உயர்வானதுமல்ல
மேலானதெல்லாம் கீழானதே.........
சரியென்றும் தவறு என்றும் ஒன்று எப்போதும் இந்த உலகில் கிடையாது...
முன்பெல்லாம் கவிதை அனுப்பினால் தங்களால் பிரசூரிக்க முடியவில்லையானால் முடியவில்லை என்று சொன்னீர்கள். இப்போது.. சரியானவற்றை பிரசூரிக்க மட்டுமே மலைகள் என்கிறீர்கள். தரம் என்கிறீர்கள்.
என்னுடைய கவிதையை நீங்கள் தரமிட வேண்டாம்.....நான் குழந்தையாகவே இருந்துவிட்டு போகிறேன். இது ஒரு முயற்சிதான்.
தரத்தை யார் முடிவு பண்ண வேண்டும் வாசகனா...அல்லது நீங்களா?.. சரி நீங்கள் ஒரு நல்ல வாசகத்தளத்தை உண்டு பன்னுகிறீர்கள் என்றால்... அந்த தரத்தையும் நீங்கள் ஒரு ஆள் மட்டும் எப்படி முடிவு செய்யவது ஒரு ஜனநாயக முறையில் முடிவு செய்ய வேண்டுமென்றால் அதற்கு ஒரு குழு அமைக்க வேண்டுமல்லவா?....
அப்படியில்லை என்றால் இது ஒரு பாசிச செயலாகுமா?
தரத்தின் உயரம் உங்கள் மலைகளல்ல..நானும் தவழ்ந்தாவது சில சிகரத்தை தொட முயற்சிக்கிறேன்.
எந்த அங்கீகாரத்தையும் பெற உங்களுக்கு நான் கவிதை அனுப்பவில்லை. இது ஒரு முயற்சி.
முதலில் நமக்குள் ஒரு புரிதல் இல்லை நான் டமில் வாத்தியில்லை...ஒரு மேலாண்மையியல் படித்தவன்..மேலும் நீங்களெல்லாம் பாராட்டினால்தான், நான் தமிழில் நிறைய எழுத முடியும். நான் வேறு தவழும் குழந்தைதான். நான் வாசிப்பில் தவழ்ந்துதான். வருகிறேன்., உங்களுக்கு தமிழ் ஆசிரியருகளின் மேல் தீராத பகை இருக்கிறதென் புரிகிறது தோழர்.....எனக்கு சிலவற்றை தமிழில் சொல்ல வரவில்லை
ஆதலால்தான் ஆங்கிலத்தில் எழுதினேன். ஒரு விதையின் முளையை வளரும்போதே வெட்டிய பாவம் உங்களை வந்து சேர வேண்டாம்..என்னை விட்டுவிடுங்கள். பாவம் நான் எந்த அகந்தையுமில்லாமல் சொல்லுகிறேன். நேரே பார்த்தும் இது பற்றி விவாதிப்போம். ஆனால் சண்டை போட என்னால் முடியாது. உங்கள் அளவு புத்தகம் படிக்கவில்லை. ஆனால் மனிதர்களை நிறைய படித்திருக்கிரேன்.
அதில் நீங்கள் சொல்லுவதுபோல் கூட்டம் சேர்க்கும் ஆள் நானில்லை. நீஙளுமில்லையென நம்புகிறேன்...எனது ஒரு முயற்சியில்தான் நான் எழுதியுள்ளேன், யாரையும் பின்பற்றில்லை. வாத்திக்கு மாணவரிடத்தில் காண்பிக்க என்ன இருக்கிறது. வாத்தியார்தனம் என்பதென்ன.....நான் ஒருபோதும் பெரியவனில்லை.
இந்த பிரபஞ்சத்தில் நான் ஒரு கொசு போல...தவழ்ந்து வருகிறேன். அண்ணா நீங்கள் உங்கள் இலக்கியப் பணியை செவ்வனே செய்ய பிரார்த்திறேன்.
ஆனால் திரும்பவும் முதலில் சொன்னதுதான் தரம் பார்த்து பார்த்து எந்த கவிஞனும் எழுதவில்லை எல்லோரும் எழுதினார்கள். தரம் வாசகனால் கொடுக்கப் பட்டது..புதுபுது முயற்சி செய்தார்கள் வளர்ந்தார்கள். ஜெயமோகனும், சுந்தரராமசாமியும், சுஜாதாவும் குமுதத்திலும் சாதாரண பத்திரிக்கைகளிலும் எழுதிதான் இப்போது வளர்ந்து ஆலமரமாய் நிற்கிறார்கள்........
இது சிலருக்கு பதிலாக நான் எழுத நினைத்தது. மேலும் கலை யாருக்காக படைக்கிறோம், எதன் நோக்கில் எழுதுகிறோம் என்பதே தெரியாமலா? எழுதுவான் ஒருவன். எது? நல்ல இலக்கியம் என்பது இன்றளவும் எழுதுகின்ற ஒவ்வொருவரும் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாக உள்ளது. சிலர்தான் உலகத்திலேயே இலக்கியத்தை காக்க வந்த தூதுவர்களைப் போல ஆபத்பாந்தவர்கள் போல நடந்து கொண்டால் சாதரண மனிதர்களுக்கான் இலக்கியம் என்னாவது.
எல்லொரும் கவிதையை அறிவுஜீவிக்களுக்கு மட்டுமெ எழுதினால் யார்தான் சாதாரண மக்களுக்கு எழுதுவது. சாதாரண் மக்கள் புரிந்து கொண்டால்தானே பல மாற்றாங்களைக் கொண்டு வர முடியும்.
தரம் என்று இவர்கள் எதை சொல்கிறார்கள். ஏதோ ஒரு மூளையில், யாரோ யாருக்கோ தந்த விருதுகளை வைத்தா? தரமிடுவது. சொல்லும் விசயத்தில் தரம் வேண்டுமா? கையாலும் வார்த்தையிலா?.
என்னொவோ போங்கள்....இவர்களும்தான் பாசிசம் செய்கிறார்கள்.
கவிஞர். துவாரகாசாமிநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக